பில்லியன் பயனர்களுக்கு தயாரிப்பை உருவாக்கும் முன் நீங்கள் கேட்டுக் கொள்ளவேண்டிய 7 கேள்விகள்!

5

பல புது தகவல்களை தெரிந்துகொண்டு அடுத்த ஆண்டில் அடி எடுத்து வையுங்கள். ஸ்மார்ட்போன், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பில் பல வருடம் அனுபவம் கொண்ட தீபக் அபோட் அடுத்த வருடம் எந்த டிஜிட்டல் தயாரிப்பு முதலில் அரை பில்லியனை தாண்டும் என நம்முடன் பகிர்கிறார்.

இதுவே அதற்கான விடை, கடந்த வருடம் இந்தியா 100 மில்லியன் புது பயனாளிகளை இன்டர்நெட்டில் இணைத்தது. இது மிக பெரிய வளர்ச்சி இன்னும் மூன்று வருடத்தில் இன்டர்நெட் சேவையை முதன்முறையாக பயன்படுத்தும் 200 மில்லியன் மக்களை இணைக்கும். அதாவது 2020-க்குள் இந்தியாவில் மட்டும் 600 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பயனாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்கக்கப்படுகிறது. உலகளவில் இந்தியா இதில் இரண்டாவது இடமாக இருக்கும்.

தோராயமாக 60 சதவீத நகர்புற மக்கள் மற்றும் 20 சதவீத கிராமப்புற மக்கள் இன்டர்நெட் மூலம் இணைப்பில் இருக்கின்றனர். அடுத்தக்கட்டமாக வரும் வருடத்தில் இந்தியாவின் கிராமப்புற மக்கள் அதிகம் இணையத்தில் இணைவர். அதாவது டிஜிட்டல் உலகில் தற்போது உள்ள மக்களை விட அதிக மக்கள் வரும் வருடங்களில் இணைவர்.

பின் வரும் கேள்விகளிக்கு பதில் கண்டால் இந்திய மக்களின் முக்கிய இணைப்புகளை புரிந்து கொள்ள முடியும். உங்கள் தயாரிப்பு வளர்ச்சிபெற உதவியாக இருக்கும்.

பெறக் கூடிய விலையா?

அதிக மக்கள் தொகை கொண்டுள்ள சந்தைகளுக்கு உருவாக்கப்படும் தயாரிப்பின் விலை குறைவாக இருக்க வேண்டும். வாங்கக் கூடிய விலை என்பது நேரடியாக செலுத்தும் பணத்தை பொறுத்து மட்டும் அமையாது. அது ஒரு மேம்பட்ட சேவை அல்லது ஒரு மறைமுக செலவு அல்லது ஒரு இயக்க செலவினத்திற்காக செலுத்தும் நேரடி செலவாகக் கூட இருக்கலாம்.

மக்களுக் ஒத்துவரக் கூடியதா?

இந்தியா போன்ற பெரும் சந்தையில் பல்லாயிரக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் OS-கள் உள்ளது. ஆனால் 2012-ல் வெளிவந்த ஆண்டிராய்ட் 4 பயன்படுத்துபவர்கள் இன்னுமும் உண்டு. இந்தியாவில் அதிகம் விற்கப்படும் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மூன்று வருடத்திற்கு முன் வெளி வந்த OS பதிப்பு தான். மேலும் இந்தியாவில் வெப்பம், மாசு, சுகாதாரம் அற்ற சூழல் அதிகமாக உள்ளது எனவே உங்கள் தயாரிப்பு அது தாங்கக் கூடியதாய் அமைய வேண்டும்.

கலாச்சார பொருத்தம்? மக்கள் தொகை தகுதி பெற்றதா?

உங்கள் பயனர்களின் விருப்பம், ஆசைகள், உறவுகள், மத நம்பிக்கைகள், தார்மீக மதிப்பீடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வது முக்கியம். பில்லியன் பயனர்களுக்காக தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு கலாச்சார சார்புடன் அல்லது சூழலுக்கு பொருத்தமாக அமைய வேண்டும். உங்கள் தயாரிப்பு பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் பயன் படுத்தும் வகையில் சமமாக அமைந்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். முக்கியமாக மொழி தடங்கள் இருக்கக் கூடாது.

பாதுகாப்பு மற்றும் நம்பகமானதா?

பிராண்டுகள், சேவைகள் மற்றும் தளங்கள் தங்கள் பயனர்களுக்கு அவர்களின் ஆதரவு, சேவை மற்றும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு நம்பகமான தீர்வை தர வேண்டும்; பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பயனர்களை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். இது ஒரு முக்கிய அம்சமாக அமையும்.

பயன்பாட்டில் இருக்கும் பழக்கத்தை மாற்றுமா?

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழக்கத்தை மாற்றக்கூடிய தயாரிப்பு நல்ல வளர்ச்சி அடையும். மேலும் நீண்டகால பயன்பாட்டில் இருந்தால் அது இன்னும் நல்லது. உதாரணத்திற்கு, என் தாய் தொலைகாட்சியை விட யுடியூபை விரும்புவார், காரணம் யுடியூபில் நமக்கு ஏற்ற அதிக வீடியோக்களை பார்க்கலாம்.

அதில் ஏதேனும் விசேஷம் உள்ளதா? புதியதா?

புதிய பொருள் அல்லது வித்தியாசமான பொருள்களை நாம் வைத்திருந்தால் நிச்சயம் அதை வைத்து பெருமை பாராட்டிக்கொள்வோம். உலகிற்கு காட்ட நினைப்போம். எனவே அது போன்ற பொருள் மக்களை ஈர்க்கும். தற்பொழுது இன்ஸ்டாகிராம் ஈர்த்துள்ளது.

பயன்படுத்த கற்றல் வளைவு தேவையா? பயன்படுத்துவது எளிதா?

மக்களால் உங்கள் தயாரிப்பை எளிதில் புரிந்துக்கொள்ள முடியுமா? அலது உங்கள் தயாரிப்பை புரிந்துக்கொள்ள பயிற்சி வீடியோக்கள் தேவையா? ஆம் என்றால் சந்தைக்கு வர நீங்கள் இன்னும் தயாராகவில்லை. மக்கள் பயன்படுத்த எளிமையானதாக இருக்க வேண்டும் அதன் பின்னரே வெற்றி அமையும்.

இந்தியாவில் மிக பிரபலாமாக இருக்கும் சேவைகளை கூர்ந்து கவனியுங்கள், அதாவது வாட்சாப், முகநூல், இன்ஸ்டாகிராம், உபர், ஒலா, ஹாட்ஸ்டார், பேடிஎம் போன்ற சேவைகளை மேலே கூறிய கேள்விகளுடன் இணைத்து 1-10 க்குள் மதிப்பிடுங்கள் உங்களுக்கு புரியும்.

இந்திய சந்தை மிகப்பெரிய வாய்ப்பு அளிக்கிறது. இந்திய போன்ற பெரும் சந்தைக்கு தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருத வேண்டும். எந்த தயாரிப்பு அரை பில்லியனை முதலில் தொடும்? எவை ஆயினும் அதில் இந்திய தயாரிப்பு இருக்க வேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர்: தீபக் ஆபோட்