கூகிள் ‘அல்லோ’- அப்படி என்ன சிறப்பம்சங்கள் இதில் இருக்கிறது? 

5

கூகிள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள அற்புதமான சேவை ’அல்லோ’ Allo. செயற்கைநுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மெசேஜ் ஆப் ஆகிய ’அல்லோ’, இந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. 

உலகம் முழுதும் உள்ள நண்பர்கள், உறவினர்களின் எண்ணோடு நம்மை இணைக்கும் சேவை அளிக்கும் பல ஆப்கள் சந்தையில் ஏற்கனவே உள்ளன. பிரபல வாட்ஸ் அப்’ இல் தொடங்கி, ஃபேஸ்புக் மெசெஞ்சர், ஹைக், ஹாங்அவுட், வைபர் என்று பல சேவைகளை நாம் உபயோகித்து வருகின்றோம். இந்த சேவை இடத்தில் கூகிள் நுழைய முடிவு எடுத்து, தனது புதிய மெசேஜ் ஆப் சேவையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கியது. இதில் பல புதிய செயல்பாடுகள் உள்ளது என்றும் வாய்ஸ் மெசேஜ் உட்பட பல வசதிகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

சரி, கூகிளின் ‘அல்லோ’ செயலியில் என்னென்ன இருக்கின்றன? மற்ற சேவைகளில் இல்லாத புதிதான வசதிகள் இதில் என்ன இருக்கின்றது? பார்ப்போம்...

கூகிள் அல்லோ கணக்கில் சேரும் வழிகள்

வாட்ஸ் அப்’ போலவே அல்லோ சேவையை நாம் சுலபமாக பெறமுடியும். உங்களின் மொபைல் எண்ணை கொண்டு கணக்கை தொடங்க முடியும். சேர்ந்தவுடன் நீங்கள் உங்களின் போனில் உள்ள எல்லா எண்களுக்கும் உடனடியாக மெசேஜ் அனுப்ப தொடங்கலாம். நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டையும் இதோடு இணைத்துக்கொண்டு அதில் உள்ள மெயில்கல், முக்கிய சந்திப்புகள், விவரங்களை எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதனை எளிதாக்கிவிடுகிறது. 

செயலி வடிவமைப்பும்-இடைமுகமும்

தங்களுடைய சேவைகளை எளிதான வடிவில் வைத்திருக்கும் கூகிள், இதையும் அம்முறையில் கொண்டுள்ளது. அதனால் கூகிள் பயனர்களுக்கு ’அல்லோ’ சுலபமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

’அல்லோ’ ஒரு ஸ்மார்ட் மெசேஜ் செயலி. அதற்கு இயந்திர மொழி மற்றும் இயல்பு மொழி செயல்பாடுகள் புரியும். மெசேஜ்களுக்கு தானாகவே பதில் அளிக்கக்கூடிய வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் பயனர்களின் தன்மைக்கு ஏற்ப பதிலை தயார் செய்ய கற்றுக்கொள்ளும். 

பாதுகாப்பு

நீங்கள் ‘அல்லோ’வை மறைமுக மோடிலும் உபயோகிக்கமுடியும். உங்கள் சேட்கள் ஆன்லைனில் வராத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும். இந்த மறைமுக மோட் மூலம், நீங்கள் தனிப்பட்ட சேட் வசதியை மேற்கொள்ளலாம், அதற்கான நோட்டிபிகேஷனையும் பெற முடியும். அல்லோ உங்கள் மெசேஜ்களை தற்காலிகமாக வைத்துக்கொள்ள அனுமதிக்கும். உங்கள் மெசேஜ்களை நீங்கள் பாதுகாப்பான இடத்திலும் வைத்துக்கொள்ள வசதி உள்ளது, தேவைப்படும் போது நிரந்தரமாக டெலீட் செய்து கொள்ளலாம். அல்லோவில் உங்களுக்கு தேவையான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளது.  

சாமர்த்தியமான பதில்கள்

அல்லோ’ வின் முக்கிய புது அம்சம் அதன் ‘சாமர்த்திய பதில்’ வசதி. “நான் இந்த சேவையை அல்லோ அல்லாது மற்ற செயலிகளை உபயோகிக்கையில் செய்யமுடியாமல் தவிக்கிறேன்,” என்கிறார் ஃபுலே. “ஏனெனில் சேட் செய்யும் போது இந்த வசதி தடையில்லாமல் மேற்கொள்ள உதவுகிறது.”  

ஆனால் இந்த ஸ்மார்ட் பதில் வசதி பயனர்கள் அல்லோவை ஒரு வாரகாலம் உபயோகித்த பின்னர் அதன் முழு பயனை அடையமுடியும். படங்கள், பொதுவான கேள்விகள் இவற்றிர்க்கு தானாக எப்படி பதிலளிக்கிறது என்பதை ஃபுலே விளக்கிக்காட்டினார். 

கூகிள் அசிஸ்டண்ட்

இறுதியாக, சிரி போன்ற அனுபவம் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் கிடைத்துவிட்டது. ’கூகிள் அசிஸ்டண்ட்’ சேவையை எந்நேரமும் பெற ’அல்லோ’ வில் சுலப வழி உள்ளது. உங்கள் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக்கொள்ள, "@google" என்று அல்லோ’வில் டைப் செய்தாலே போதும், பதில் உடனடியாக கிடைத்துவிடும். அல்லோ அறிமுகப்படுத்திய போது பேசிய, கூகிளின் சிஇஒ சுந்தர் பிச்சை,

“அசிஸ்டண்ட் பற்றி நீங்கள் யோசித்தாலே போதும், அது உங்களின் உரையாடலுக்கான துணையாக இருக்கும். எங்கள் பயனர்கள் அதை இருவழி தொடர்பாக கொள்ளவேண்டும்.” என்றார்.

நீங்கள் ஏன் கூகிள் அல்லோ உபயோகிக்கவேண்டும்? 

நீங்கள் புதிதாக பல புதிய வசதிகளை அடைய விரும்பினால் இந்த செயலியை நிச்சயம் உபயோகித்து பார்க்கவேண்டும். அதிலும் மிகமுக்கியமாக, மேற்கூறிய அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்போது எதற்குக் காத்திருக்கிறீர்கள்..! 

ஆங்கில கட்டுரையாளர்: சோனல் மிஸ்ரா