ட்ரம்ப்பை கடுமையாக விமர்சிக்கும் பிரமிளா ஜெயபால்: அமெரிக்காவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் 5-வது இடம்! 

0

பொலிடிக்கோ பத்திரிக்கையின் 2018 - சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் இந்திய அமெரிக்க ஜனநாயக காங்கிரஸைச் சேர்ந்த பிரமிளா  ஜெயபால் இடம்பெற்றுள்ளார்.

52 வயதான ஜெயபால் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய அமெரிக்கர் இவர்தான். ’கடுமையாக எதிர்ப்பு குரலெழுப்பும் வாஷிங்டன் 7-வது மாவட்டத்தின் ஜனநாயக சட்ட வல்லுனர்’ என பொலிடிகோ பத்திரிக்கை பிரமிளா ஜெயபாலை விவரித்துள்ளது.

”ஜனநாயக நட்சத்திரமாகத் திகழ்பவரும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சிப்பவருமான இவர் வலுவான எதிர்ப்பை முன்வைக்கும் தலைவர்,” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

”காங்கிரஸ் முற்போக்குக் கூட்டணியின் துணைத் தலைவராக பொறுப்பேற்றது முதல் கேபிடல் ஹில் பகுதி மக்களின் குடிமுறை உரிமைகள் மற்றும் குடியேற்ற சீர்திருத்தங்களுக்காக சட்ட வல்லுனராக அயராது உழைத்தார்,” என்கிறார் மக்கள் பிரதிநிதிகள் சபையின் சக பிரதிநிதியான ரோ கண்ணா.

சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஹைத்தியர்கள் மற்றும் சல்வடோரான்ஸ் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப சென்றால் தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அனுமதிக்கப்படும் என்கிற ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை சட்டரீதியாக எதிர்த்தார் பிரமிளா.

குடியேறுபவர்களையும் அமெரிக்க குடிமக்களையும் சமூக வலைதள பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு சரிபார்க்கும் புதிய போக்கிற்கு தடைவிதிக்கக் கோரி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அக்டோபர் மாதம் கடிதம் எழுதினார் ஜெயபால்.

’அவர் புரட்சிகரமானவர்’, என்கிறார் அமெரிக்க ஜனநாயகத்தைச் சேர்ந்த ராபர்ட் க்ருக்ஷங்க்.

”பிரமிளா ஜெயபால் ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்,” என்றார் க்ருக்ஷங்க்.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதல் இந்திய அமெரிக்க பெண் ஜெயபால். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக 16 வயதிருக்கையில் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க குடியுரிமை பெற்ற ஜெயபால், புதிதாக குடியேறுபவர்களுக்கான பதிவுகள், குடியேற்ற சீர்திருத்தங்களுக்கான பரப்புரை ஆகிய பணிகளுக்கான பிரத்யேக நிறுவனமான ’ஹேட் ஃப்ரீ ஜோன்’ (பிறகு ‘ஒன்அமெரிக்கா’ என்று மறுபெயரிடப்பட்டது) என்கிற நிறுவனத்தை 2001-ம் ஆண்டு நிறுவினார்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL