மாற்றங்களுக்காக மக்களை திரட்டும் முயற்சியில் ஜனக்ரஹா

ஜனக்ரஹா அமைப்பினர் உருவாக்கியுள்ள சமூகவலைதளம் பிரச்சினைகளை பற்றி விவாதிக்கவும்,புகார் செய்யவும், பிரச்சினைகளை சரிசெய்ய ஒன்றிணையவும் வழிவகை செய்கிறது.

0

நம் எல்லோருக்குமே எதையாவது மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நம்மை சுற்றி அதற்கான வாய்ப்புகள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் கூட அந்த வாய்ப்பு சென்று சேர்ந்திருக்கிறது. மாற்றத்தை விரும்புபவர்கள் தனித்தனியாக இருப்பதை விட ஒன்று சேர்ந்து செயல்படுவதன் மூலம் அந்த மாற்றத்தை சாத்தியப்படுத்த முடியும்.

சுவரை அலங்கரிக்கும் ப்ரைட் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்
சுவரை அலங்கரிக்கும் ப்ரைட் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்

"ஜனக்ரஹா" (Janagrahaa) என்ற தன்னார்வ அமைப்பை நடத்தும் ரமேஷும், ஸ்வாதி ராமநாதனும் மாற்றத்தை விரும்பும் எல்லோரும் இணையக்கூடிய சாத்தியத்தை தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஐசேஞ்ச்மைசிட்டி (IChangeMyCity)

ஜனக்ரஹா அமைப்பினர் இதற்காகவே "ஐசேஞ்ச்மைசிட்டி"(IChangeMyCity) என்ற சமூகவளை தளத்தை துவங்கியுள்ளனர். இந்த தளத்தை பயன்படுத்துபவர்கள் சமூக பிரச்சினை குறித்து விவாதிக்கலாம். நகரத்தில் உள்ள பிரச்சினைகளின் முழு பரிமானத்தையும் தெரிந்துகொள்ள முடிவதோடல்லாமல், தங்களுக்கு அருகிலுள்ள அரசு அலுவலகங்கள் முகவரியையும், அந்த பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலும் கிடைக்குமாறு செய்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல ஒருவரின் முகவரியை வரைபடமாக (map) பார்க்கும் வசதியை வழங்குகிறது இந்த தளம். தங்கள் பகுதியின் அரசியல் எல்லைகளையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் முகவரியையும், வாக்களிக்கும் மையங்கள் மற்றும் பக்கத்திலுள்ள அரசு அலுவலகங்கள் பற்றிய தகவலையும் இந்த தளத்தில் பெறமுடியும். ஒருவர் தன்னுடைய வாழ்க்கைதரம், வாக்காளர் பற்றிய தகவல், அந்த பகுதிகளில் சமூக பங்காற்றும் குழுக்களின் தகவல் என பலவற்றை தெரிந்துகொள்ள இந்த தளம் உதவுகிறது

பிரச்சினைகளை தீர்ப்பது

இந்த தளத்தில் ஒருவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் பிரச்சினையை புகாராக பதிவேற்ற முடியும் வாய்ப்பை வழங்குகிறது. உதாரணமாக சாலைவசதி சரியில்லாதது, தங்கள் பகுதியில் இருக்கும் மதுக்கடை சார்ந்த பிரச்சினை, இது போன்ற எந்த பிரச்சினையையும் பதியலாம், அந்த பிரச்சினையின் தற்போதைய நிலை என்ன என அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம், அது பற்றி குழுக்களில் விவாதிக்கலாம் என பல சிறப்பம்சங்களை இந்த தளம் உள்ளடக்கி உள்ளது.

விவேக் நகரிலுள்ள சாந்திநிகேதன் பள்ளிக்கு அடுத்துள்ள சந்து, பிரசாரத்திற்கு முன்பு
விவேக் நகரிலுள்ள சாந்திநிகேதன் பள்ளிக்கு அடுத்துள்ள சந்து, பிரசாரத்திற்கு முன்பு

இணையதளம் மட்டுமல்லாமல் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் புகாரை தெரிவிக்கலாம். மொபைல் அப்ளிகேஷனில் மூன்று முக்கிய பகுதிகள்(tag) உள்ளது. இது இந்த பிரச்சினையின் மேல் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிந்துகொள்ள வகைசெய்கிறது. பிரச்சினை தொடர்பான இடம் மற்றும் போட்டோக்களையும் பதிய முடியும்.

புகார் பதிவு செய்து முடித்தபின் அது சம்பந்தபட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அதன்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிந்துக்கொள்ளவும் வகைசெய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த புகாரால் எதேனும் பாதிப்புகள் இருந்தாலும் தெரியப்படுத்தலாம். இதுபோல் பலரும் தங்கள் பாதிப்புகளை எழுதும்போது அந்த பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்.

என் தெருவை நானே மாற்றுகிறேன் (I change my street)

சமீபத்தில் பெங்களூரின் "ஐசேஞ்ச்மைசிட்டியின்" ஒரு பகுதியாக “என் தெருவை நானே மாற்றுகிறேன்” (i change my street) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் பெங்களூர் நகரின் தெருக்களை தூய்மையாக பராமரிப்பதே ஆகும். இது தொடர்பான பிரச்சாரத்தில் 220 பள்ளிகளில் இருந்து பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்றார்கள், மேலும் அவர்களின் பெற்றோர்களும், சில தன்னார்வலர்களும், அரசு அதிகாரிகளும், ஆசிரியர்கள், ஒன்பது எம்.எல்.ஏக்கள் மற்றும் 20 கவுன்சிலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விவேக் நகரிலுள்ள சாந்திநிகேதன் பள்ளிக்கு அடுத்துள்ள சந்து, பிரசாரத்திற்கு பின்
விவேக் நகரிலுள்ள சாந்திநிகேதன் பள்ளிக்கு அடுத்துள்ள சந்து, பிரசாரத்திற்கு பின்

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஸ்ரீ சாய் ஆங்கிலப்பள்ளியை சேர்ந்த ஹெச்.எஸ்.சூர்யா பேசியபோது ”இந்த நிகழ்ச்சி பற்றி தகவல் தெரிவித்ததிலிருந்தே இந்த நாளுக்காக காத்திருந்தேன். இது ஒரு மிகச்சிறப்பான முன்னெடுப்பு. நாங்கள் சுத்தம் செய்த பாதை எல்லோரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது” என்றார் பெருமிதமாக.

இதுவரை 50 ஆயிரம் பேருக்கும் மேல் இந்த தளத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/__prajakta/status/530566937106194432

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனக்ரஹா நிறுவத்தின் இணை நிறுவனரான ஸ்வாதி ராமநாதன் ”மாணவர்களை டாக்டராகவோ, இஞ்சினியராகவோ, டீச்சராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ உருவாக்குவதில் தீவிரமாக இருக்கும் நாம் அவர்களை பொறுப்புள்ள குடிமகனாக்கவும் முயற்சிக்க வேண்டும். குழந்தைகளை, தன்னை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை கவனிக்க கற்றுகொடுக்க வேண்டும், மாற்றத்தை நோக்கி திருப்ப வேண்டும். ஐசேஞ்ச்மைஸ்டிரீட் பிரச்சாரம் இந்த ஆண்டின் முக்கியமான நிகழ்வாக இருக்கும்” என்கிறார்.