போக்குவரத்து ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்...

வாகனங்கள் இணைக்கப்பட்டதாகவும், ஸ்மார்ட் தன்மை கொண்டதாகவும் மாறும் நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய சவாலை எதிர்கொண்டு வருகின்றன. அவை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இண்டெர்நெட் ஆப் திங்ஸ் போன்ற தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்து வருகின்றன. 

0

இந்தியாவில் பொதுவாக ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பாரம்பரிய அணுகுமுறை கொண்டதாக கருதப்படுகின்றன. எனினும் அண்மை காலமாக அவை, புதுயுக ஸ்டார்ட் அப் பரப்பில் ஈடுபாடு காட்டத்துவங்கியுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் அதன் நிறுவனர்களும் கூட தனிப்பட்ட அளவில் ஆட்டோமொபைலை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறை ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யத்துவங்கியுள்ளனர்.

வாகனங்கள் இணைக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட் தன்மை பெற்றதாக மாறி வரும் நிலையில், ஆட்டோ நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இண்டெர்நெட் ஆப் திங்ஸ் போன்ற நுட்பங்களில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்து வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையின் பெரிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ள ஏழு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதோ:

லிங்க் லாஜிஸ்டிக்ஸ் (Lynk Logistics)

லிங்க் நிறுவனர்கள் சேகர் பெண்டே, அபினவ் ராஜா 
லிங்க் நிறுவனர்கள் சேகர் பெண்டே, அபினவ் ராஜா 

அபினவ் ராஜா மற்றும் சேகர் பெண்டேவால் துவக்கப்பட்ட சென்னையைச்சேர்ந்த டிரக் வசதிக்கான திரட்டிகள் சேவையான லிங்க் லாஜிஸ்டிக்ஸ், ராம்கோ நிறுவனம் தவிர அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் விநோத் தாசரியை இணை நிறுவனராக பெற்றுள்ளது.

கார்களுக்கான திரட்டி சேவை போலவே இது செயல்படுகிறது. ஆனால் டிரக் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் ஷிப்ட் (SmartShift)

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தால் நடத்தப்படும் லாஜிஸ்டிக்ஸ் மேடையான ஸ்மார்ட்ஷிப்ட், போர்ட்டருடன் (ரெஸ்பெபர் லாப்ஸ் லிட்) இந்த ஆண்டு பிப்ரவரியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டீலின் நிதி அம்சங்கள் தெரியவில்லை. போக்குவரத்து துறையில் கோரிக்கைக்கேற்ற சேவையை இது வழங்கி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி, எம் அண்ட் எம், இணைக்கப்பட்ட நிறுவனத்தில் 10 மில்லியன் (ரூ.65 கோடி) முதலீடு செய்ய உள்ளது. போர்ட்டரின் இணை நிறுவனர் பிரணவ் கோயல் இதை வழிநடத்துவார். இணைக்கப்பட்ட நிறுவனத்தின் சி.இ.ஓவாக அவர் இருக்கிறார். செக்கோயா கேபிடல் மற்றும் கே கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவை பெற்ற, போர்டர் நிறுவனத்தில் மகிந்திரா நிறுவனத்தின் 2 வது முதலீடாக இது அமைகிறது.

கார் க்ரூ (Carcrew )

கார் சேவை நிறுவனமான கார் க்ரு, டிவிஎஸ் குழுமத்தின் ஆதரவை பெற்றுள்ளது. அனைத்து வகையான பராமரிப்பு சேவையை வழங்கும் இந்நிறுவனம் அண்மையில், சுயே ஜெனரிஸ் இன்னவேஷன்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும், தில்லியைச்சேர்ந்த கிளிக் காரேஜ் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

ரெண்ட் ஆன் கோ (RentOnGo)

பெங்களூருவைச்சேர்ந்த காண்டிவிஷன் சொல்யூஷன்சால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்பான ரெண்ட் ஆன் கோ நிறுவனத்தில் டிவிஎஸ் குழுமம் கடந்த ஆண்டு 24 சதவீத பங்குகளை வாங்கியது. இது வாடகை பைக்குகளுக்கான ஆன்லைன் சந்தையாக இருக்கிறது. 2012 ல் நிகில் சப்ரா மற்றும் விகாஷ் ஜலான் துவக்கிய இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், இக்குழுமம் ரூ.15 கோடி முதலீடு செய்துள்ளது.

ஜூம் கார் (Zoomcar)

சுய வாடகை கார் ஸ்டார்ட் அப்பான ஜூம்கார் இந்தியா நிறுவனம் பிப்ரவரியில் 40மில்லியன் டாலர் சி சுற்று நிதியை திரட்டியது. மகிந்திரா நிறுவனம் இதில் முன்னிலை வகித்தது. போர்டு ஸ்மார்ட் மொபிலிட்டி உள்ளிட்ட ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றனர்.

ஓலா (Ola)

டாடா சன்ஸின் ரத்தன் டாடா, 2015 ஜூலையில் ஏ.என்.ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்பான ஓலாவில் தனிப்பட்ட முறையில் ஒரு தொகையை முதலீடு செய்தார்.

ரத்தன் டாடாவின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான ஆர்.என்.டி அசோசியேட்ஸ் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையிலான கூட்டு முயற்சியான ஆர்.என்.டி கேபிடல் அட்வைசர்ஸ் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தில் ரூ.268 கோடி முதலீடு செய்தது.

நானோ காரின் எலெக்டிர் வடிவத்தை டாடா மோட்டார்சுடன் இணைந்து அறிமுகம் செய்ய ஓலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உபெர் (Uber )

டாடா ஆப்பர்சுனேட்டி பண்ட், 2015 ல் உபெர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது.  டாடா கேபிடலின் தனியார் சமபங்கு முதலீடு நிறுவனமான டாடா ஆப்பர்சுனேட்டிஸ் பண்ட், உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. 

“இந்தியாவுக்கு வெளியே தலைமையகம் கொண்டுள்ள சர்வதேச நிறுவனம் ஒன்றில் இதன் முதலீடாக அமையும் இந்த முடிவு, உபெர் மீதான நம்பிக்கையை உணர்த்துகிறது,”

என உபெர் நிறுவனம் வலைப்பதிவில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில்: சமீர் ரஞ்சன் / தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL