உறுப்பு தானம் விழிப்புணர்வை ஏற்படுத்த 9400 கிமி தூரப் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்!

0

பத்தில் ஒருவருக்கு இந்தியாவில் சிறுநீரக கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உறுப்பு மாற்றம் செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறது. இதன் தீவிரம் அதிகமாக இருப்பினும் போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று உணர்ந்தார் லூர்த் விஜய். இவர் தனக்கு கிட்னி கொடையாளர் கிடைக்க மூன்று வருடங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது.

ஒரு டான்சர் மற்றும் கின்னஸ் உலக சாதனை படைத்த லூர்த் விஜய். இவருக்கு திடிரென 2013-ல் கிட்னியில் நோய் வர, டயாலிசிஸ் எடுக்கும் நிலை வந்தது. 2016-ல் கொடையாளர் கிடைக்க சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை மணிப்பால் மருத்துவமனையில் மேற்கொண்டார். சிறுநீரக கிடைப்பது கடினமான விஷயம். ஒருவர் அதற்காக காத்திருக்கும் வரை உயிருடன் இருப்பதே அதிசயம் என்ற அளவில் உள்ளது. லூர்த் விஜய் 3 வருடங்கள் டயாலிசிஸ் செய்துகொண்டு கிட்னிக்காக காத்திருந்தார். இது இந்தியர்கள் பலரின் நிலை.

அப்போது அந்த முடிவை எடுத்தார் விஜய். மக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 9400 கிமி பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். தமிழ்நாடு முதல் லடக் வரை தன் பயணத்தை தொடங்கினார். டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் செயிதின் படி,

“நான் குறைந்தது 10 மில்லியன் மக்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன். அவர்களை உறுப்பு தானம் செய்து உயிர்களை காப்பாற்ற உறுதிமொழி எடுக்கவைக்க விரும்பினேன். இந்த பயணத்தில் என் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களை இதற்கு ஒப்புக்கொள்ள வைப்பேன். தென்னிந்தியாவில் இதைப்பற்றி மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு உள்ளது, ஆனால் வடக்கில் அந்த அளவிற்கு இல்லை,” என்றார் விஜய்.

அவர் 13 நகரங்கள், 17 ஊர்கள் மற்றும் 18 கிராமங்களை 40 நாட்களில் காரில் கடக்க உள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே; கல்வி, மருத்துவம், அரசு நிலையங்கள், கார்ப்பரேட்டில் உள்ளவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த உன்னது தானத்துக்கு ஊக்கப்படுத்துவதே ஆகும். ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் பலரை இதைப்பற்றி மற்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவைப்பதும் ஆகும்.

“3 வருடங்கள் ஒரு நோயுடன் போராடுவதும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்வதும் மிகக்கொடுமையான அனுபவம். எனக்கு வந்துள்ள கிட்னி நோய் வாழ்க்கையை நான் எதிர்நோக்கும் விதத்தையே மாற்றியுள்ளது. அது எனக்கு வாழ்வின் புதிய அர்த்தத்தை தந்துள்ளது. நான் ‘நம்பிக்கையை பரப்ப’ விரும்புகிறேன்,” என்றார் விஜய். 

கட்டுரை: Think Change India