எண்ணூர் நிலக்கரி மின் ஆலை: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட சிற்றோடையும், பாதிக்கப்பட்டுள்ள மீனவ கிராமங்களும்... 

1

சூரிய சக்தி போன்ற விலைமலிவான சுத்தமான மாற்று வளங்கள் இருக்கையில் எதற்காக மற்றொரு மிகப்பெரிய நிலக்கரி மின் உற்பத்தி ஆலையை எண்ணூரில் அமைக்கவேண்டும்? 

பட உதவி: The Coastal Resource Centre
பட உதவி: The Coastal Resource Centre

நிலக்கரி எரிசக்தி மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு, மிகப்பெரிய குப்பை கிடங்குகள், நிலக்கரி சாம்பல் குளங்கள், நிலக்கரி சேமிப்பிடங்கள் ஆகியவற்றில் நிலக்கரி சேமிக்கப்படும் நிலையில் எண்ணூர் சிற்றோடை ஒரு காலத்தில் பசுமையாக காட்சியளித்தது. வளர்ச்சி என்கிற பெயரில் தொழில்மயமாக்கலினால் அதன் சுற்றுப்புறங்களில் அதாவது சென்னையின் வடக்கு திசையில் சுமார் 20 கிலோமீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

”மீன்பிடித்தல் என்பது மீனவர்களின் உரிமை” என்கிறார் எண்ணூர் சிற்றோடையைச் சேர்ந்த ஆர் எல் ஸ்ரீனிவாசன். தொழில்துறை குடியிருப்பாக மாற்ற திட்டமிட்டபோது ஆலைகள் உருவாக்கும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் மீன்பிடி நடவடிக்கைகளை பாதிக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. அவர் கூறுகையில்,

நிறுவனத்தில் வேலை செய்வது நவீனமானது என்று எங்களிடம் கூறினார்கள். அதன் பிறகு தொழிற்சாலைகள் நிறுவ எங்களது பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். தண்ணீர் ஆறுகளுக்கும் கடல்களுக்கும் அனுப்பப்பட்டது. பாலங்களும் பைப்லைன்களும் அமைக்கத் தொடங்கினர். இப்போது எங்களுக்கு போக்கிடம் இல்லை. 70 சதவீத மீன் வளங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

உப்புப்படலங்கள், சதுப்புநிலங்கள், மீன் பண்ணைகள் மற்றும் மணல்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது இந்த சிற்றோடை. இந்த நீர்பரப்பு மனிதர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதுடன் பல்வேறு வகையான விலங்கினங்களுக்கும் தாவரங்களுக்கும் உறைவிடமாக விளங்கியது. பரந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான மீன்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆறு மீனவ கிராமங்களுக்கு வாழ்வாதாரமாகவே விளங்கியது.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 450 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதால் அதற்கு மாற்றாக 4,800 கோடி ரூபாய் செலவில் 660 மெகாவாட் ஆலையை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.

மற்றொரு மின் ஆலைக்கு எண்ணூர் தயராக உள்ளதா?  

பட உதவி: The Coastal Resource Centre
பட உதவி: The Coastal Resource Centre

1960-ம் ஆண்டின் இறுதியில் எண்ணூர் பகுதி தொழில்துறைப் பகுதியாக மாறத் துவங்கியது. கடந்த ஐம்பதாண்டுகளில் தொழில்மயமாக்கபட்டதால் நான்கு நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் மற்றும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக இந்தப் பகுதி அதன் பல்வேறு உயிரினங்களை அப்புறப்படுத்திவிட்டது.

சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன் கூறுகையில்,

”மாசுபடுவதாலும் மிகப்பெரிய தொழிற்சாலைகளின் நில ஆக்கிரமிப்புகளாலும் இந்த சிற்றோடை ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ளது. தொழில்சாலைகளால் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பகுதி பாழான நிலையிலும் மீதமுள்ள பகுதியும் தற்போதைய அனல் மின் ஆலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு நிலக்கரி சாம்பல்களால் நிரப்பப்படுகிறது,” என்கிறார்.
பட உதவி: The Coastal Resource Centre
பட உதவி: The Coastal Resource Centre

நிலக்கரியை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த எச்சங்கள் சாம்பலாகி நீர்நிலைகள் முழுவதும் பரவுவதால் நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன. மேலும் சாம்பலை எடுத்துச்செல்லும் பைப்லைன்கள் ஒழுகுவதால் பெரும்பாலான ஈரநிலங்கள் கான்க்ரீட்டாக மாறியுள்ளது என்று விவரித்தார்.

மூன்று வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களின் மூன்று குளங்கள் உள்ளன. ஏற்கெனவே மாசுபட்ட பகுதியை மேலும் மாசுபடுத்துவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?

என்று கேள்வியெழுப்புகிறார் நித்யானந்த்.

பட உதவி: The Coastal Resource Centre
பட உதவி: The Coastal Resource Centre

அறிக்கைகளிலுள்ள எண்ணிக்கை மாறுபடுகிறது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புதிய திட்டத்திற்கு குடியிருப்பாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராம்கி என்விரோ என்ஜினீயர்ஸ் லிமிடெட் தயாரித்த சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடு குறித்த அறிக்கையை கேள்வியெழுப்புகின்றனர்.

கடற்கரை வள மையத்தைச் சேர்ந்த பூஜா குமார் கூறுகையில்,

காற்றின் தரம் குறித்த தரவுகளில் ஏதோ சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு EIA தரவுகள் படி, எண்ணூர் பகுதியின் காற்றின் தரம் சென்னையின் நவீனமான பகுதிகளைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதாக குறிப்பிடுகிறது. இது தவறான தகவலாகும். போயஸ் கார்டன் மற்றும் போட் க்ளப் பகுதியில் காற்றின் தரத்தின் குறியீடு சராசரியாக 101 மற்றும் 104.3 μg/m3 என்று பதிவாகி இருக்கும் நிலையில் எண்ணூர்-மணலி பகுதியில் குறிகிய ரேஞ் 19 முதல் 36 μg/m3 எவ்வாறு இருக்க முடியும்?
பட உதவி: EIA அறிக்கை The Coastal Resource Centre
பட உதவி: EIA அறிக்கை The Coastal Resource Centre

புதிய மின் உற்பத்தி நிலையத்தின் EIA அறிக்கைகளில் நகரத்தின் மாசின் அளவுகள் அதிக பாதிப்பற்றதாக காட்டப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும் ஒன்பது பகுதிகளிலிலிருந்து சேகரிக்கப்பட்ட 216 மாதிரிகளில் PM 2.5-ன் தரம் 19.3 முதல் 36.8 μg/m3 வரையே உள்ளது. அனுமதிக்கப்பட்ட தேசிய வருடாந்திர சுற்றுச்சூழல் காற்று தரம் 40 μg/m3 விட குறைவானதாகவே காட்டப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் சென்னையில் மூன்று நிலையங்களின் தரவுகளில் 12.91 முதல் 1120.54 μg/m3 பதிவு செய்யப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகும்.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தொலைந்தது

வட சென்னை பகுதிகளின் வரைப்படம், பட உதவி: The Coastal Resource Centre
வட சென்னை பகுதிகளின் வரைப்படம், பட உதவி: The Coastal Resource Centre

ஒரு காலத்தில் பல மீன் பண்ணைகளின் இருப்பிடமாக இருந்த எண்ணூர் சிற்றோடை இன்று வளமற்று காணப்படுகிறது. வரி இறால், பச்சை நண்டு, கெலுத்தி, காணாங்கெலுத்தி மீன் போன்ற வணிகத்திற்கு பயன்பாடில் இருந்த எண்ணற்ற மீன்கள் தற்போது மறைந்துவிட்டது.

இருபது வருடங்களுக்கு முன்பு மூன்று கிராமங்கள் இந்த சிற்றேறோடையில் மீன் பிடித்து சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். நித்யானந்த் கூறுகையில்,

நதிகள் மூலம் உருவான பொருளாதாரம் மிகப்பெரியதாகும். இதை எந்தவித தொழிற்சாலைகளாலும் உருவாக்கமுடியாது. இன்று நான்கில் மூன்று பங்கு மீனவர்கள் ஏழ்மையில் உள்ளனர். இதற்கு முன்பு அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான தரமான மீன்கள் கிடைத்த காரணத்தால் நல்ல ஊட்டச்சத்து கிடைத்தது. இதனால் குடும்பங்கள் ஆரோக்கியமாக இருந்தது.

தற்போது கிராம மக்கள் ஒரு மாதத்தில் ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோதான் மீன்பிடிக்க முடிகிறது. ஒரு காலத்தில் இறால், நண்டு, மீன் ஆகியவற்றிற்கு பிரபலமான இந்த சிற்றோடையில் தற்போது மிகவும் குறைவான உயிரினங்களே காணப்படுகிறது. மீனவர்கள் வருமானத்திற்காக தொழிற்சாலை பகுதிகளில் கிடைக்கும் வேலையை நம்பியுள்ளனர். இவ்வாறு கூடுதல் ஆட்கள் கிடைப்பதால் குறைவான ஊதியத்தை அளித்தும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு மோசமாக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றனர்.

மருத்துவ உள்கட்டமைப்பு அவசியம்

நிலக்கரி சுரங்கத்தினால் இந்தியாவில் 2017-ல் 25 பேர் இறந்துள்ளனர்.

எண்ணூரில் அதிக அளவிலான மாசின் காரணமாக காற்றில் நச்சு கலக்கப்படுகிறது. கபடி பயிற்சியாளரான ஸ்ரீநிவாசன் குழந்தைகளிடம் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாக தெரிவித்தார். கிராம மக்களுக்கு சளி, தொண்டையில் தொற்று ஏற்படுவது மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் அரசு சுகாதார மையங்கள் இல்லாத காரணத்தால் கிராம மக்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவர்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது.

அரசின் தலையீடு அவசியம் என்பதை ஆதரிக்கும் விதத்தில் பூஜா கூறுகையில்,

“அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அனைவரும் அணுகும் விதத்திலான முறையான சுகாதார கட்டமைப்புகளை அமைக்கவேண்டும். அத்துடன் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் தரத்திற்கு இணங்க இருப்பதையும் உறுதிசெய்யவேண்டும்."

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

பட உதவி: The Coastal Resource Centre
பட உதவி: The Coastal Resource Centre

மின்சாரத்தின் பற்றாக்குறையை குறைப்பதற்காகவே நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி ப்ராஜெக்ட் திட்டமிடப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவிக்கிறது. எனினும் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களே மாநிலத்தின் மின்சார தேவைக்கு போதுமானது. தமிழ்நாட்டில் 0.7 சதவீத பற்றாக்குறை மட்டுமே உள்ளதாகவும், மின்சாரத்தை வாங்குவதன் மூலமாகவோ அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவோ இதை சரிசெய்துவிடலாம் என்று 2016 மத்திய மின்சார ஆணையம் தெரிவித்தது.

க்ரீன்பீஸை சேர்ந்தவர் பூஜாரினி சென். புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதை ஆதரிக்கும் இவர் கூறுகையில்,

இந்தியா வகுக்க முயற்சிக்கும் விதிக்கு எண்ணூர் மட்டும் விதிவிலக்கு. இந்த நிலக்கரி மின் உற்பத்தி ஆலையை திறக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை தேவையிருப்பின் அவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக ஈடுசெய்ய முடியும். மாசின் அளவை அதிகப்படுத்தும் எந்த ஆற்றல் ஆதாரங்களும் பரிந்துரைக்கபடுவதில்லை.

மேலும் அரசின் கொள்கைகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கியே வகுக்கப்படுகின்றன. நிலக்கரி அடிப்படையிலான கூடுதல் திறன் 2017-22 காலகட்டத்திற்கு தேவைப்படாது என்று ட்ராஃப்ட் தேசிய மின்சார திட்டம் தெரிவிக்கிறது. சூரிய ஆற்றலின் விலையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமான அளவு குறைந்து வருகிறது. தற்போது ஒரு யூனிட்டிற்கான கட்டணம் 2.62. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மின்சார உற்பத்தி செய்யும் தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனத்தைக் காட்டிலும் குறைவாகும்.

2022-ல் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் 175 GW இருக்கும் என்று இந்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில்,

சோலார் பார்க்கின் திறன் இரட்டிப்பாவது அடுத்த தலைமுறைக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் பருவநிலை மாற்றத்தின் பாதக விளைவுகளை எதிர்த்து போராடுவதிலும் இந்தியாவிற்கு இருக்கும் அர்ப்பணிப்பை காட்டுகிறது, என்கிறார்.
பட உதவி: Sajan Ponappa, Greenpeace
பட உதவி: Sajan Ponappa, Greenpeace

‘பூவுலகின் நண்பர்கள்’ என்கிற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் மின் உற்பத்தி ஆலைகளின் விளைவுகளை கண்காணித்தார். இவர் கூறுகையில்,

பருவநிலை மாற்றத்திற்கு ஆலைகளிலிருந்து வெளியேறும் புகை ஒரு முக்கியக் காரணம். இந்த புகையிலிருந்து வெளிப்படும் சாம்பலில் பாதரசம் கலந்துள்ளது இது மனிதர்களுக்கு பாதுகாப்பானதல்ல. அனல் உற்பத்திக்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். எனவே இந்த அனல் ஆலைகள் சுற்றுச்சூழலுக்கோ மனிதர்களுக்கோ சாதகமானதல்ல. அனல், அணு இரண்டுமே இல்லாத ஒரு கொள்கைதான் இதற்கான ஒரே தீர்வாகும்.
"தொழிற்சாலைகளைக் காட்டிலும் நீர்நிலைகள் முக்கியமானவை என்பதை தற்போதுள்ள மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே சேதமடைந்துவிட்டது. நிலக்கரி சாம்பல்கள் சிற்றோடையிலும் ஈரமான நிலத்திலும் கொட்டப்படுகிறது. அவை முற்றிலுமாக அகற்றப்பட்டு ஈரநிலங்கள் மறுசீரமைக்கப்படவேண்டும்." என்றார் நித்யானந்த்.

உடனடி நடவடிக்கையாக தற்போதுள்ள ஆலைகள் தற்போதைய சட்டத்தின்படி செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா


Related Stories

Stories by YS TEAM TAMIL