'சட்டத்தில் குறுக்கு வழி இல்லை': பவானி ரெட்டி

பவானி ரெட்டி - சட்டத்தில் குறுக்கு வழி இல்லை

0

முதல் வழக்கைப் பற்றி நினைவுப்படுத்தும் போது, பவானி ரெட்டி லண்டனில் இருந்து தொலைபேசியில் தன் முதல் வழக்கைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு லண்டன் சட்ட நிறுவனத்தில், சர்வதேச வணிக நடுவர் மற்றும் வழக்காடுதல் பிரிவில் பணி புரிகிறார்.

தனது முதல் வழக்காக, ஒரு சர்வதேச பொருட்கள் குழுமம் ஆங்கில உயர் நீதிமன்றத்தில் தனது இந்திய கட்சிக்காரருக்கு எதிராக வாங்கிய தீர்ப்பை, வணிக மத்தியஸ்தத்துக்காக கையில் எடுத்தார். அந்த வழக்கு பற்றி பேசும் போது, "இது எனக்கொரு சிறந்த அனுபவம். ஏனென்றால், இது சம்பந்தபட்ட சிக்கல்களில் நான் என் வாடிக்கையாளருக்கு மிகவும் உதவியாக ஆலோசனைகள் அளித்தேன்".

இராணுவ அதிகாரிக்கு, ஐதராபாதில் பிறந்த பவானி, ஒரு மாறுபட்ட குழந்தை பருவத்தில் வளர்ந்தார். தன் குழந்தை பருவத்தில், இவர் அதிகமாக வட இந்தியாவில் பயணித்தும், வாழ்ந்தும் இருந்ததால், தென் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, அதிக நாட்கள் தில்லியில் கழித்தார்.

தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், வெளிநாட்டிற்கு சென்று சர்வதேச சட்டப் பயிற்சியை எடுத்தார். "நான் எப்போதும் வணிகச் சட்டத்தைப் படிக்க ஆர்வமாக இருந்தேன், சொத்து மற்றும் விவாகரத்து பற்றி படிக்க எனக்கு ஆர்வம் இல்லை.

பட்டப்படிப்பை முடித்த பின்னர், இங்கிலாந்து சென்றார் பவானி. இங்கிலாந்தில் பணிபுரிய மீண்டும் ஒரு முறை அங்குள்ள சட்டத்தை படித்து தேர்ச்சி பெற நேரிட்டது. 2003 ஆம் ஆண்டில், அங்கு ஒரு சட்ட நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சிக்கு சேர்ந்தார், அம்றிலிருந்து அவரின் சட்டத்துறை வாழ்க்கை தொடங்கியது.

பவானி சட்டம் படித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் சட்டம், பெண்களுக்கு ஒரு கவர்ச்சியான பணியாக இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளைப் பார்க்கும் போது, இந்த சட்டத்துறை மதிப்பிற்குரிய துறையாக இல்லை. அதனால் தன் முடிவைப் பற்றி தானே கேள்வி எழுப்பிக்கொண்டார். ஆனால், அவரது பெற்றோரின் தொடர் ஆதரவோடு தன் விருப்பத்தை தொடர்ந்தார்.

ஒரு புதிய நாட்டிற்கு செல்லும் போது, சட்டத்தின் ஆரம்ப நாட்களில், சவால்கள் அதிகமாக இருந்தது. "இந்த சட்டத்துறையில் செய்ய நிறைய இருந்தது. எந்த நேரத்திலும், உங்களுடைய கடின உழைப்புக்கு பின் ஓய்வெடுக்க முடியும் என்று கூற முடியாது. எந்நேரமும் பணிபுரிந்து கொண்டே இருக்க வேண்டும்".

2010 ஆம் ஆண்டில், பவானி ஆசிய சாதனையாளர்கள் விருதுகளில் (Asian Achievers Award) மகளிர் தங்க விருது பெற்றார். நிறுவனத்தில் பல்வேறு உயர் வணிக, சர்வதேச வழக்குகளைக் கையாண்டுள்ளார். இந்தியாவில் இருந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பார்ட்சூன் 500 நிறுவனங்களுக்காக வழக்குகளை கையாண்டுள்ளார். மேலும் இவர் சத்ருதீன் ஹஷ்வானி (பாகிஸ்தானின் பெரிய தொழில் முனைவோர்), பாங்க மெல்லாட் (பெரிய இராணிய தனியார் வங்கி) மற்றும் இங்கிலாந்து செல்வந்தர்கள் வின்சென்ட் மற்றும் ராபர்ட் செங்குயிஸ் ஆகியோரின் வழக்குகளிலும் பணி புரிந்துள்ளார்.

பவானியை பொறுத்த வரை, ஒரு சிறந்த வழக்கறிஞர் என்பவர் பகுப்பாய்வு திறனும் படைப்பாற்றலும் பெற்றிருக்க வேண்டும். "ஒரு நல்ல வழக்கறிஞர் எந்த நேரமும் உண்மையை மாற்றமாட்டார், ஆனால், அதை சரியாக படைப்பார். விடாமுயற்சி என்பது ஒரு சிறந்த வழக்கறிஞருக்கான அறிகுறி. இந்தப்பணியில், தொடர் ஆராய்ச்சியும் குறிப்பெழுத்துவதும் அவசியம். குறுக்கு வழிக்கு இங்கு வாய்ப்பே இல்லை", எனகிறார் பவானி.

நிறுவன மேலாண்மை பங்குதாரராக, பவானி நேரத்தை அளவாக நிறுவனத்திற்கும் வணிகத்திற்கும் செலவழிக்கிறார். "வணிகத்தை கையாளுதல் என்பது ஒரு தொழில் முனைவோரின் திறன்", என்று சொல்கிறார். 60 - 40 சதவீதத்தில் இருக்கிறது, 40 சதவிதம், நிர்வாகம், வருவாய் போன்றவற்றில் கவனம் உள்ளது.

வேலை என்பது பவானியின் விருப்பமாகும். அவர் பேசும் விதத்தில் அவருடைய விருப்பம் நன்றாக தெரிந்தது. தான் கற்க வேண்டும் என்பதைத் தாண்டி, நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

பவானி இதில் பெரிய சவாலாகக் கருதியது குடும்பம், வேலை மற்றும் நண்பர்களிடையே சமநிலையை பராமரிப்பது தான். "இது மிகவும் முக்கியம்", என்கிறார். தன் இளைய மகனிடமிருந்து வரும் பல்வேறு கேள்விகளுக்கு, பவானி புன்னகையுடன் நேரத்தைக் கழித்து பதிலளிக்கிறார். அவர் புத்தகவிரும்பி, பயணத்திலும், கலாச்சாரங்களைப் பற்றி அறிவதிலும் ஆர்வமுண்டு, நேரம் கிடைக்கும் போது, தியானம் செய்வார்.

இந்திய சட்டங்கள் மற்றும் பெண்கள் பற்றிப்பேசும் போது, "சட்ட மேம்பாடு மற்றும் அதை நடைமுறைப்படுத்துதல் இந்தியாவில் மிக அவசியம். அப்படி செய்தால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சாமளிக்க ஏதுவாக இருக்கும்".

பெண்களைக் குறித்தும், பெண் தொழில்முனைவோர் வளர்வதைப் பற்றி குறிப்பிடும் இவர்; "இந்த கண்ணாடி கூரையை உடைக்க பல பெண்கள் கண்டிப்பாக தேவை" என்கிறார். தன் தாய் தான் இவருக்கு முன்மாதிரி என்றும் இராணுவ அதிகாரியின் மனைவியாக மூன்று குழந்தைகளை சமாளித்தார் அவர் என பெருமிதத்துடன் கூறி மகிழ்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பவானி பல பெரிய வழக்குகளை சமாளிக்க எதிர்நோக்கியுள்ளார். ஒரு கட்டத்தில், சட்ட நடுவராக இருக்க விரும்புகிறார். அதை நோக்கி, கடின உழைப்பும், பொறுப்பும் மேற்கொள்ள பாடுபட தயாராக இருக்கிறார்.