இந்திய மொழிகள் Youtube சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு!

0

தற்போது இணையதளத்தில் நெட்டிசென்களால் அதிகம் பயன்படுத்தக் கூடிய வீடியோ வலைத்தளம் youtube ஆகும். அதிலும் இந்தியாவில் இந்திய மொழிகள் உள்ளடக்கி வரும் youtube வீடியோ சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹரியான்வி என பல பிராந்திய மொழிகளில் வரும் வீடியோ சேனல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைப்பதோடு லாபகரமாகவும் இருக்கிறது.

எக்கனாமிக் டைம்ஸில் பேசிய youtube இந்தியா இயக்குனர் சத்யா ராகவன்,

 “இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள யூட்யூப் சேனல்கள் ஆகியவை அதீத வளர்ச்சி அடைய ஹரியான்வி, மராத்தி, பெங்காலி போன்ற மற்ற இதர மொழிகள் சேனலும் வளர்ந்து கொண்டு வருகின்றது,” என்கிறார்.

முதலிடத்தில் இருக்கும் சில பிராந்திய மொழி சேனல்களின் subscribers இந்தியாவில் மட்டும் 3 லட்சத்தில் இருந்து 8 லட்சம் வரை இருக்கிறார்கள். இதில் ஒரு சராசரியான சேனல் மாதம் 3000 முதல் 4000 டாலர் வரை சம்பாதிக்கும். இது வெறும் சேனலில் விளம்பரத்தால் மட்டுமே ஈட்டக் கூடிய லாபம் ஆகும்.

உதாரணத்திற்கு SmileSettai மற்றும் Put chutney போன்ற தமிழ் மொழி youtube சேனல்கல் தற்போது 4,00,000 மேலான சப்ஸ்க்ரைப்பர்களைக் கொண்டுள்ளது. 

"youtube-இன் வளர்ச்சி இவ்வாறுதான் இருக்கும் என்று எண்ணியே பல சேனல்கள் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வொர்க் வளர்ச்சியே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்," ஸ்மைல் சேட்டை ராம் குமார்.

இலக்கு மற்றும் வருவாய்

பிராந்திய மொழி சேனல்கள், இளைஞர்களையே அவர்கள் இலக்காக கொண்டு இயங்குகிறது.  ஒரு சேனலுக்கு அதிக subscribers இணைந்த பின் அதை பல பிராண்டுகள் தங்களுக்கு சாதகமாய் மாற்றிக் கொள்கின்றனர்.  உதாரணத்திற்கு ஒரு சேனலில் ஒரு லட்ச பார்வையாளர்கள் இருந்தால் அந்த சேனல் வீடியோக்கள் மூலம் பிராண்டுகள் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். 

"பார்வையாளர்களின் எணிக்கை அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம்  jio போன்ற நெட்வொர்க் குறைந்த விலையில் இணைய இணைப்பை கொடுத்ததே ஆகும். இதுவே தமிழ் மக்களை youtube பக்கம் அதிகம் ஈர்த்தது என்கிறார் Put Chutney ராஜீவ். 

ஒரு பிராண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு  இந்திய மொழியில் விளம்பரம் தயாரித்து அதை பல follower-கள் இருக்கும் சேனல்களில் பொருத்தினால் பிராந்திய மொழி பார்வையாளர்களிடம் சரியாக சென்றடையும். இந்த விளம்பரம் மூலம் சேனலுக்கு வருவாயும் கிடைக்கிறது. அது மட்டுமின்றி யூட்யூப் நிறுவனமும் பிராந்திய மொழி சேனல்கள் மூலம் அதிக வருவாயை ஈட்டுகின்றது.

பிராந்திய மொழிகளின் வளர்ச்சி

2011 முதல் youtube பரந்த விநியோகம் மற்றும் அவற்றின் அடையளாத்திற்காக பிராந்திய மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. 2014 மும்பையின் நகைச்சுவை சேனலான AIB மற்றும் TVF youtube-ல் அலைகளை உண்டாக்கி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த சேனல் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி இந்தி மற்றும் ஆங்கில கலவையாக இருந்தது. இது மும்பை, புது தில்லி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பிரபலமடைந்தது.

AIB மற்றும் TVF முன்னோடியாக வைத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என பிற மொழிகளில் சேனல்களை ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து தற்பொழுது பெங்காலி, மராத்தி, குஜராத்தி, ஹரியான்வி என வளர்ந்து கொண்டு வருகிறது.

"ஒருவரை கேலி செய்தோ அல்லது உணர்வுப்பூர்வமான வீடியோக்களையே  பார்வையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். பொதுநலம் மற்றும் அரசியல் ரீதியான கருத்துக்கள் மக்களை ஈர்க்கிறது. இதுவே youtube-இன் ஆரம்பம் இன்னும் சில காலங்களில் பயணம், அழகு, கல்வி என்று மற்ற தலைப்புகளும் பிரபலமடையத் தொடங்கும்" என்கிறார், ராம் குமார். 

பார்வையாளர்கள்

Youtube இந்தியாவின் கூற்றுப்படி 40% subscribers வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என்கிறார்கள்.

"தென் இந்திய மொழிகளில் படைக்கப்படும் வீடியோக்கள் வெளிந்நாட்டில் வாழும் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது. எனது சேனலுக்கும் இது பொருந்தும்,” என்கிறார் புட் சட்னி ராஜீவ்.

இந்திய மொழி பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் இரண்டு மடங்கு அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய பல பார்வையாளர்கள் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பஞ்சாபி சேனல் அதிகம் பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் தென் இந்திய மொழி மத்திய கிழக்கில் பிரபலம்.

வலை தொடரின் வெற்றி

தற்போது இந்தியாவில் மட்டும் 100 வலை தொடர்கள் (Series) நேரடியாக ஒளிப்பரப்பப்படுகிறது. அதில் 40 சதவீதம் தென்னிந்திய வலை தொடர்களாகும். தொடக்கத்தில் நகைச்சுவை அதிகம் விரும்பப்பட்டாலும் கடந்த ஆண்டிலிருந்து இசை, தொழில்நுட்பம் மற்றும் உணவு என்று மற்ற வகைகளும் பார்க்கப்படுகிறது.

“2016 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட சேனல்களில் 1,00,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர் - அதாவது ஒரு நாளில் ஏதோ ஒரு சேனல் இந்த இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் ராகவன். 

ஒவ்வொரு மொழிக்கும் பல விதமான உள்ளடக்கம் பொருந்தும், உதாரணமாக பிரபலமான மராத்தி உள்ளடக்கம் வலைத் தொடர்களின் வடிவில் உள்ளது, பஞ்சாபி மொழியில் அதிக விருப்பம் இசை, பெங்காலி மற்றும் மலையாள பார்வையாளர்களின் விருப்பம் படங்கள். பல்வேறு மொழிகளில் என்ன வகையான உள்ளடக்கம் பொருந்தும் என்பதை YouTube இந்தியா ஆய்வு செய்து வருகிறது.

கட்டுரையாளர் - மஹ்மூதா நௌஷின்