அரண்மனையில் ராஜா-ராணியாக கைகோர்த்த ‘நிக்-பிரியங்கா’ ஜோடி! 

0

ஆடியில் கூழ் சீசன், ஆவணியில் ‘கூல்’லாக்கும் மழை சீசன் என ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு சீசன் இருப்பது போல், இது டும் டும் டும் கல்யாண சீசன் போல, பாலிவுட் ராணிகள் ஒவ்வொருவராக அவர்களது ராஜாக்களின் கரம் கோர்த்து வருகின்றனர். அந்த லிஸ்டில் இணைந்திருக்கும் ராஜா, ராணி - தி பாலிவுட் குயின்னான பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ். 

தளபதியின் ‘தமிழன்’ படத்தின் மூலம் சினி வாழ்க்கையை தொடங்கி இங்கிருந்து பாலிவுட் சென்று பின்னே ப்ளைட் பிடிச்சு பாரீன் சென்று ஹாலிவுட் நடிகையாகவுமாகிய பிரியங்கா சோப்ரா இப்போ அமெரிக்க மருமகள். யெஸ், மாப்பிள்ளை நிக் ஜோனஸ், அமெரிக்க சிட்டிசன்.

பட உதவி : இன்ஸ்டாகிராம் 
பட உதவி : இன்ஸ்டாகிராம் 

பாப் பாடகரும், நம் பாலிவுட் அழகியும் 2017ம் ஆண்டு, நியூயார்க் நகரில் நடந்த ‘மெட் கலா’ என்ற பிரபல ஃபேஷன் நிகழ்ச்சியில்தான், முதன்முறையாகப் சந்தித்துள்ளனர். பின்னே, சில பல பொது நிகழ்ச்சிகள், பார்டிகளுக்கு சோடியாக செல்ல, இருவரும் காதலிக்கின்றனர் என்று பரபரவென பரவியது. நம்மவர்கள் தான் நடிகர், நடிகைகளுக்கு திருமணம் என்றாலே இருவரது ஜாதங்களையும் நொண்டி எடுத்து பத்து பொருத்தங்களையும் பார்க்கத் தொடங்கிவிடுவரே.

அப்படி அவர்கள் கண்டறிந்த, இருவருக்கும் இடையேயான 11 வயது வித்தியாசத்தை கேலி, கிண்டலாக்க ட்ரோல்களுக்கு என்டு கார்டு போட்ட பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனசையே அவர் மணாளனாக்கி ‘என் வாழ்க்கை என் உரிமை’ என்று கெத்து கேர்ளாக மின்னி, கல்யாணப் பொண்ணாகவும் ஜொலிக்கிறார். 

அவர்களது கல்யாண கலாட்டாக்களின் ஹைலைட்ஸ்கள்...

பட உதவி : டிஎன்ஏ இந்தியா
பட உதவி : டிஎன்ஏ இந்தியா

நிக்-யங்காவின் ட்ரீம் டெஸ்டினேஷன்!

தகிக்கும் பாலைவனத்தின் மத்தியில் அமைந்திருப்பினும், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையிலான கோட்டைகளையும், அரண்மனைகளையும் தன்னகத்தே கொண்டு இந்தியாவின் சுற்றுலா தலைநகரமாக விளங்கும் ராஜஸ்தானில் உள்ள மோஸ்ட் ப்யூட்டிபுல் அரண்மனைகளுள் ஒன்று ‘உமைத் பவான்’ அரண்மனை. 

ஜோத்பூரில் அமைந்திருக்கும் பேலஸ் ஆடம்பர தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு தன்னை தேடி வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ராஜ வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் அரண்மனையே, நிக்-யங்கா ஜோடி அவர்களது திருமணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். 24 ஹிஸ்டோரிக்கள் அறைகள், 10 அரச அறைகள், ஆறு பெரிய அரச அறைகள் என 42 அறைகள், 64 லக்சரியஸ் அறைகள், 22 அரண்மனைகளைக் கொண்ட பேலசின் ஒரு நாள் வாடகை ரூ.64லட்சம். நிக்-யங்கா ஜோடி அவர்களது திருமண இடத்துக்காக மட்டும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவழிட்டுள்ளனர்.
பட உதவி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 
பட உதவி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கொள்கையை உடைத்து பிரியங்காவுக்காக பிரத்யேக கவுன் தயாரித்த ரால்ஃவ் லாரன்!

கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் வெகு சிறப்பாய் நடந்து முடிந்துள்ளது. இந்து முறைப்படி நடந்த திருணமத்துக்கு மாப்பிள்ளை நிக், வாள், தலைப்பாகையுடன் முழு பஞ்சாபி பாய் ஆக மாற, பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த ஆடை தொடங்கி சங்கீத், மெகந்தி, மற்றும் திருமண ஆடையை செலிபிரிட்டி டிசைனர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா வடிவமைத்துள்ளனர். 

கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் பொதுவாய் மணமகள் அணியும் வெள்ளை நிற லாங் கவுனுக்கு மாறாக கண்ணை கவரும் ரொமான்டிக் கலரான ரெட் கலர் கவுனை அணிந்துள்ளார் பிரியங்கா. இந்த ஆடையை அமெரிக்காவின் மாபெரும் பேஷன் நிறுவனமான ரால்ஃவ் லாரன் கவுனை வடிவமைத்துள்ளது. இதில் ஸ்பெஷல் என்னவெனில், 

டிசைனர் ரால்ஃவ் இதுவரை அவருடைய மகள், மருமகள், மற்றும் அக்கா குழந்தை என மூன்று கவுன் மட்டுமே வடிவமைத்துள்ளார். சொந்தப்பந்த அன்பு பட்டாளம் தாண்டி ரால்ஃவ் முதல் முறையாக பிரியங்காவுக்கே ஆடை வடிவமைக்கிறார். அதுவும் வான்ட்டடாக! நியூயார்க்கில் நடந்த ‘மெட் கலா’ ஃபேஷன் நிகழ்ச்சியில்தான், பிரியங்காவும் நிக் ஜோனஸும் ரால்ஃவ் லாரன் வடிவமைத்த ஆடைகளை அணிந்து ஜோடியாக போஸ் கொடுத்து உலகை மொனுமொனுக்க வைத்தமையால், அவர்களது திருமணத்தில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பிரியங்காவிடம் கேட்டு கவுனை வடிவமைத்துள்ளார் ரால்ஃவ்.
பட உதவி : இன்ஸ்டாகிராம் 
பட உதவி : இன்ஸ்டாகிராம் 

ஏழு வகை உணவு; ஐந்தரை கிலோ மெகந்தி

மறைந்த தந்தையின் ஆசையின் படி, அவருடைய ஒட்டு மொத்த சொந்தத்தையும் திரட்டிய நிலையில், சினி பிரபலங்கள் மிகக் குறைவானேரே பங்குகொண்டுள்ளனர். நவம்பர் 29ம் தேதி தொடங்கிய கொண்டாட்டத்தில் முக்கிய பகுதியாய் நடந்த மெகந்தி விழாவில்  வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் மணப்பெண் கைகளை அலங்கரிக்க இந்தியாவின் மருதாணி சிட்டியான ராஜஸ்தானில் உள்ள சூஜத்தில் இருந்து 5.5கிலோ மருதாணிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

திருமணப் புகைப்படங்களே வெளிவராத நிலையில், மெகந்தி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் பிரியங்கா சோப்ரா. அந்த புகைப்படத்தில், பிரியங்காவுக்கு ரித்தேஷ் அகர்வால் மெகந்தி வைத்துவிட்டார். இவரே, ஐஸ்வர்யாராயின் திருமணத்திலும் அவர் கையை மெகந்தி கொண்டு அலங்கரித்தவர். 
பட உதவி : இன்ஸ்டாகிராம் 
பட உதவி : இன்ஸ்டாகிராம் 

வட இந்திய திருமண வழக்கப்படி லட்டுக்கள் மட்டுமே திருமண அழைப்பிதழ்களுடன் கொடுக்கப்படும். ஆனால், அதை அப்படியே மாற்றி மாக்ரோன்ஸ்களும், அதனுடன் ஒரு பக்கம் லஷ்மி, கணபதியும் மறுபக்கம் என் அண்ட் பி என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட வெள்ளிக்காசையும் வழங்கி விருந்தினர்களை வெல்கம் செய்துள்ளார். 

பஞ்சாபி, ராஜஸ்தானி மற்றும் ஹைதராபாத் உணவு வகைகள், இத்தாலிய, மெக்சிகன், கான்டினென்டல் மற்றும் சீன உணவு விருந்துகள் விருந்தினர்களுக்கு வெள்ளி பாத்திரங்கள் வழங்கி அசத்தி உள்ளனர் தம்பதியினர். 

வாழ்த்துகள் Nick & PeeCee 

Related Stories

Stories by jaishree