அண்மையில் கீழ் பெர்த் மறுக்கப்பட்டு ரயிலின் தரையில் உறங்கிய மாற்றுத் திறனாளி வீராங்கனை சுவர்னா ராஜ் பெற்ற விருது! 

0

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ், பிரபலமான தேசிய மாற்றுத்திறனாளிகள் வேலைவாப்பு (NCPEDP)-Mphasis சர்வதேச டிசைன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படிருக்கிறார். ஜூன் மாதம் இவர் ரயிலில் பயணித்தபோது தரையில் படுக்கவைக்கப்பட்டார் என்ற செய்தி நாளிதழ்களில் வந்தது குறிப்பிடத்தக்கது. 

34 வயதான சுவர்னா, நாக்பூரை சேர்ந்தவர். திருமணம் முடிந்து டெல்லியில் குடியேறி உள்ளார். இரண்டு வயதில் போலியாவால் பாதிக்கப்பட்ட இவர், ஒரு சிறந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை. ஜூன் மாதம் நாக்பூரில் இருந்து நிசாமுதீனுக்கு கரீப் ராத் ரயிலில் பயணித்தபோது, கீழ் பெர்த் கிடைக்காததாலும், அந்த இடத்தை சக பயணி தர மறுத்ததாலும் ரயில்வே அதிகாரிகளால் எதுவும் செய்யமுடியாத நிலையில் தரையில் படுத்து உறங்கினார்.

இந்த நிகழ்வு வெளியில் வர, ரயில்வே அதிகாரிகள் மீது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது NCPEDP-MUDA வழங்கும் விருதை சுரேஷ் பிரபு கையில் இருந்தே சுவர்னா பெற்றார் என்பதே கூடுதல் தகவல்.

சர்வதேச அளவில், மாற்றுத்திறனாளிகள் ஆர்வலர் ஜாவித் அபிடி என்பவரின் தலைமையில் இயங்கும் NCPEDP இது பற்றி பேசுகையில்,

”சுவர்னா மாற்றுதிறானளிகளில் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒரு நற்பண்பாளர். பொது இடங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் செய்யவும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்,” என்றார். 

இது சம்பந்தமாக, அவர் ஆர்டிஐ மற்றும் வழக்குகளையும் தொடர்ந்துள்ளார். நாடெங்கிலும் உள்ள 139 கட்டிடக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக்குழுவில் இருக்கிறார். சுவர்னா பல விருதுகளை பெற்றவர். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் பிரச்சனையின்றி வாழ தொடர்ந்து போராடி வருகிறார். 


Related Stories

Stories by YS TEAM TAMIL