வகுப்பறை அனுபவத்தை மாற்ற முயலும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள்

0

இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை 55 கோடிக்கும் மேல் இருக்கும். 120 கோடி மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆக இந்தியாவில் தொடக்க கல்வி மற்றும் உயர் நிலை கல்வி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை மட்டுமே அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகமானது.

இளமையானவர்கள் அதிக அளவில் இருப்பது மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் பரவலாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் போது கடந்த சில ஆண்டுகள் இந்தியாவில் கல்வித்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கல்விக்காக மக்கள் செலவிட தயாராக இருப்பது மற்றும் தொழில்முனைவோரின் புதுமையான முயற்சிகள் இதற்கு காரணமாக இருக்கின்றன.

யூனிடஸ் சீட் பண்ட்- யு.எஸ்.எப் (Unitus Seed Fund ) பெற்றுள்ள வர்த்தக திட்டங்களில் 17 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை என்பதே இதற்கு அடையாளமாக இருக்கிறது. 2014 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2015 ம் ஆண்டின் முதல் பாதியில் கல்வித்துறை சார்ந்த ஸ்டார்ட் அப்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக கல்வி தொழில்நுட்பத்துறையில் அதிக நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5 கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் 40 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில் கல்வி தொழில்நுட்ப தொழில்முனைவோரால் பொது கல்வியின் தரம் குறைவாக இருக்கும் நகரங்களில் சிறந்த சேவை அளிக்க முடியும். கேமிபிகேஷன், சிமுலேஷன் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.

யூனிடஸ் சீட் பண்ட் சமீபத்தில் ஆலோசக நிறுவனமான சில்வண்டுடன்( Sylvant ) ஸ்டார்ட் எஜு போட்டிக்காக கைகோர்த்தது. நாடு முழுவதும் உள்ள கல்வி ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த போட்டியின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 12 ஸ்பீட்2சீர் பாட்னர்சுடன் இணைந்து நடைபெற்ற ஸ்டார்ட் எஜு போட்டி எதிர்பார்த்ததை விட இரு மடங்கு அதிகமாக 106 விண்ணப்பங்களை பெற்றது.

இவற்றில் 50 சதவீதம் தென்னிந்தியாவில் இருந்தும் 25 சதவீதம் வட இந்தியாவில் இருந்தும் 18 சதவீதம் மேற்கு இந்தியா மற்றும் 7 சதவீதம் கிழக்கு இந்தியாவில் இருந்து வந்திருந்தன. பெங்களூருவில் இருந்து அதிகபட்சமாக 26 விண்ணபங்கள் வந்தன. தில்லியில் இருந்து 16 விண்ணப்பங்கள் வந்தன. 65 சதவீத விண்ணப்பங்கள் ஏற்கனவே வருவாய் ஈட்டும் நிறுவனங்களிடம் இருந்த வந்தன. எஞ்சியவை அதற்கு முந்தைய கட்டம் அல்லது முன்னோட்ட வடிவில் இருப்பவை. சந்தை வடிவமே அதிக அளவிலான வர்த்தக மாதிரியாக இருந்தாலும் ஸ்டார்ட் அப் பள்ளிகள், உயர் கல்வி ஆய்வு சேவைகள், சிமுலேஷன் சாப்ட்வேர் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.

லேப் இன் ஆப் (LabInApp )வருவாய் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றது. பின்னர் யு,எஸ்.எப்பிடம் இருந்து ரூ.60 லட்சம் நிதி பெற்றது. கெட் செட் சார்டட் (GetSetSorted ) இரண்டாம் இடம் பிடித்தது.

இந்த ஸ்டார்ட் அப்களுடனான கலந்துரையாடலில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடங்கள் என்ன? கிரேட் 12 ல் கவனம் செலுத்தி இந்த பிரிவில் உள்ள ஸ்டார்ட் அப்கள் தங்களை எப்படி வேறுபடுத்திக்கொள்கின்றன என்று பார்க்கலாம்.

முதலில் அவை தங்கள் இலக்கு நுகர்வோர் மூலம் வேறுபடுத்திக்கொண்டன. நுகர்வோர் பரப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை கொண்டது. இந்த நுகர்வோரை தனிப்பட்ட முறையில் இலக்காக கொண்ட ஸ்டார்ட் அப்கள் இருந்தன அல்லது நுகர்வோருக்கு தேவையான பல சேவைகளை அளிக்க கூடியவையாக இருந்தன. உதாரணத்திற்கு வேதான்து (Vedantu ) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணையம் மூலம் இணைக்கும் சந்தையை உருவாக்கி வருகிறது. பிலிண்ட் (Flinnt) மாணவர்-ஆசிரியர் கலந்துரையாடலை மேம்படுத்தும் செயலியாக இருக்கிறது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இது விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான சேவைகள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் மற்றும் வகுப்புக்கு வெளியே டிஜிட்டல் மயமாக்கலில் கவனம் செலுத்திய சேவைகளே அதிகம் இருந்தன.

இரண்டாவதாக, உத்தேசித்துள்ள தாக்கத்தின் மூலம் வேறுபடுத்திக்காட்ட முயன்றன. உதாரணத்திற்கு டேப்லெட் மற்றும் மொபைல் அடிப்படையிலான எஜுட்டர் (Edutor) டேப்லெட் சாதனத்தை கல்வி சாதனமாக மாற்றி கற்றல் அனுபவத்தை மேம்படுத்துகிறது. கிளவுட் அடிப்படையிலான ஈஆர்பி பெடேனா(ERP Fedena) ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கான எளிமையான டேஷ்போர்டை அளிக்கிறது. கியூரியாசிட்டி (Curiositi ) பள்ளி அறிவியல் பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த கற்றல் சாதனங்களை வழங்கி அறிவியல் கற்றலை செயல்பாடு சார்ந்ததாக மாற்றுகிறது.

சிம்பிலிலேர்ன் (Simplilearn)-15 மில்லியன் டாலர், வேதான்து(Vedantu )-5 மில்லியன் டாலர், டாப்பர் (Embibe)-10 மில்லியன் டாலர் நிதி பெற்றன. 2010 முதல் கல்வி தொழில்நுட்ப துறைக்கான நிதி உதவி சீராக உயந்து வருகிறது. இந்த நிறுவனங்களை மதிப்பிடும் போது அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் ஆய்வு செய்கின்றனர். தொழில்நுட்ப புதுமையே இதற்கு வழிவகுப்பதாக கருதப்படுகிறது. எனவே கல்வி தொழில்முனைவோர் பலர் இப்போது தொழில்நுட்ப அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் தவிர வாடிக்கையாளர்களை ஈர்ப்பதும் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளிகள் இந்த மாற்றங்களால் கவரப்பட்டுள்ளனவா என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இந்த நுட்பங்கள் அவற்றை ஈர்க்கின்றனவா? இல்லை அவை வழக்கமான கல்வி முறையிலேயே கவனம் செலுத்துமா?

டிஜிட்டல் பயன்பாடு அதிகரிப்பதால் கல்வித்துறையில் வேகமான வளர்ச்சி இருக்கிறது. ஆனால் சிறந்த அல்லது ஊக்கமளிக்கும் கருவியை அளிக்கும் முயற்சியில் நிறுவனர்கள் அவை தீர்க்க முயலும் பிரச்சனையில் கவனம் செலுத்துவதை விட்டு விலகிவிடக்கூடாது. மைக்கேல் பி.ஹார்ன் மற்றும் ஹீதர் ஸ்டாக்கர் தங்கள்து பிலெண்டெட்; யூசிங் டிஸ்ரப்டிவ் இன்னவேஷன் டு இம்ரூவ் ஸ்கூல்ஸ் புத்தகத்தில் குறிப்பிடுவது போல”வெற்றிகரமான கல்வி தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பத்திற்காக தொழில்நுட்பத்தை முன்வைப்பதற்கு பதில் அதனால் உண்டாக்ககூடிய பலன்கள் மீதே கவனம் செலுத்துவார்கள்”.