12ம் வகுப்பில் முன்னிலை மதிப்பெண் பெற்ற இந்த மாணவி ஜார்கண்டில் கட்டிட வேலை தொழிலாளி!

0

ஜுலியா மின்ஸ், ஜார்கண்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஞ்சியின் பெரோவில் வசிக்கிறார். ஜார்கண்ட் அகாடமிக் கவுன்சில் கடந்த ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவித்த போது அவர் மாநிலத்தில் ஒன்பதாம் இடத்தை (கலை) பிடித்திருந்தார். தேர்வு முடிவு வெளியான போது, ஜுலியா தன் குடும்ப வருமானத்துக்காக தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஜுலியா இரண்டு வயதாக இருந்த போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அப்போது முதல் தன் தாயாருடன் இணைந்து கடினமான கட்டுமானப்பணிகளில் பலமுறை பணியாற்றி இருக்கிறார். ஆனால் இந்த கஷ்டத்தை தன் படிப்பையோ அல்லது அதில் வெல்வதற்கோ தடையாக கருதவில்லை. ஜுலியா மேலும் படித்து ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறார்.

அதிசயத்தக்க இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜார்கண்ட் முழுவதிலும் இருந்து ஜுலியாவிற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அம்மாநில கல்வி அமைச்சர் வந்து ஜுலியாவை பாராட்டி விட்டு ஊக்கத்தொகை கிடைப்பதற்கான உறுதியையும் அளித்துச் சென்றுள்ளார். என்டிடிவியில் (NDTV) ஒளிபரப்பான பேட்டியில் பேசிய ஜுலியா, “நான் நன்றாக தேர்வு எழுதி இருக்கிறேன் என்று எனக்கு உறுதியாக தோன்றவில்லை. சில நேரம் ஏழ்மை உங்களால் உயர முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆனால் இன்று நான் பெருமையாக சொல்வேன் என்னால் முடியும் என்று ஏனெனில் நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.”

Think Change India |தமிழில்: GajalakshmiMahalingam