பணிக்கு செல்லும் பெண்கள் அலங்கரித்து கொள்ளும் போது கவனிக்க வேண்டிய 5 குறிப்புகள்! 

0

நமக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் மிகவும் ஆர்வமாக பிரயத்தனப்படுவோம். அதற்காகத்தான் நாங்கள் உங்களுடன் சில குறிப்புகளை பகிர்ந்துகொண்டு உதவிக்கரம் நீட்ட வந்திருக்கிறோம்.

 

1. பொருந்தாத உடைகளை தேர்வுசெய்வது 

நீங்கள் பெரும்பாலும் உங்கள் உடலமைப்பிற்கேற்ற உடைகளைதான் அலுவலகத்திற்கு போடுவீர்கள். பெண்கள் பொதுவாக செய்யும் ஒரு தவறு என்னவென்றால் அதிக இறுக்கமான உடைகளை அணிவார்கள் அல்லது மிகவும் தளர்வான உடைகளை அணிவார்கள். அது வெஸ்டர்ன் உடையாகட்டும் அல்லது அவரவர் கலாச்சார உடையாகட்டும் உங்கள் உருவத்தை அழகாக கச்சிதமாக காட்டுமாறு அமையவேண்டும். மிகவும் தளர்வாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லாவிட்டாலும் உடல் அசைவுகள் எளிதாக இருக்குமாறு உடுத்தவேண்டும். ஒரு புதிய உடை அலங்காரம் குறித்து உங்களுக்கு சின்ன அதிருப்தி ஏற்பட்டாலும் அதை அலுவலகத்திற்கு அணியவேண்டாம். ஓய்வாக எங்காவது வெளியிலில் செல்லும்போது அதை உபயோகிக்கலாம்.

2. அணிகலன்களை அதிகமாக பயன்படுத்துவது

“வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன் குறைந்தது ஒரு நகையையாவது அகற்றிவிடவேண்டும்” என்கிறார் கோகோ சேனல். இது உண்மைதான். சில அணிகலன்கள் என்றும் பசுமையாகவும் மிகவும் எளிமையாகவும் இருக்கும். அதை பயன்படுத்துவதில் தவறில்லை. இரண்டு சிறிய காதணிகள் அணியலாம். தோலினாலான அல்லது ஏதேனும் உலோகத்தினாலான வாட்ச் அணியலாம். இதுபோன்ற நேர்த்தியான அலங்காரத்தினால் நீங்கள் மிகவும் பிரகாசமாக காட்சியளிப்பீர்கள்.

3. மனநிலைக்கு ஏற்றவாறு அலங்கரிப்பதில்லை

பெண்கள் தங்களின் உணர்ச்சிகளோடு அவர்களின் அலங்காரத்தை தொடர்புப்படுத்துவார்கள். பல ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாள் மிகவும் சோர்ந்து காணப்பட்டால், உடனே அந்த பின்க் நிற உடையை உடுத்துங்கள். நிச்சயம் இதுபோன்ற ஒரு உடை உங்களிடம் இருக்கும். அந்த உடையை நீங்கள் எப்போது அணிந்தாலும் உங்களுக்கு பாராட்டு கிடைத்திருக்கும். இது நிச்சயம் உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றி உற்சாகமூட்டும். அதேபோல் மிகவும் இக்கட்டான ஒரு மீட்டிங் சமயம், உங்களை முழுவதுமாக புத்துணர்ச்சியூட்டும் விதமாக உடையணிந்து சென்று நீங்கள் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று நீங்களே பாருங்கள்.

4. எப்போதும் டல்லான நிறத்தை தேர்ந்தெடுப்பது

ஒரு சில நாட்களில் அதிக நேரம் வெளியே செலவிட நேரும். அது போன்ற சமயங்களில் நீங்கள் வழக்கமாக அணியும் நிறங்களைக் காட்டிலும் அடர்ந்த நிறங்களாலான உடையை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதுபோன்ற சின்ன சின்ன மாற்றங்கள் உங்கள் தோற்றத்திற்கு நிச்சயம் மெருகேற்றும்.

5. பொருந்தாத ஒப்பனைகள் செய்துகொள்வது

நம்மை அழகாக வெளிப்படுத்திக்கொள்ள மேக் அப் என்பது அவசியம்தான். எது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ அதை தேர்ந்தெடுங்கள். பழையகாலத்தில் ஒப்பனையை பொருத்தவரை நமக்கு கிடைத்த ஒரே பொருள் சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் மட்டும்தான்.

அழகாக அலங்கரிப்பதற்கும் அதிகமாக அலங்கரிப்பதற்கும் மிக மெல்லிய இழைதான் வித்தியாசப்படும். ஆகவே வெளியே செல்லும்போது உங்கள் அணிகலன்கள் மற்றும் ஒப்பனைகள் அடுத்தவரின் கவனத்தை திருப்புமாறு அல்லாமல் அழகாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

காலையில் அலுவலகத்திற்கு தயாராகும்போது, இதுபோன்ற சின்ன சின்ன குறிப்புகளை மனதில்கொண்டு நீங்களே உங்களை விரும்பும் வகையில் தயாராகுங்கள்.

ஆக்கம் : நிதி அகர்வால் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

பெண்கள் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வழிகள் என்ன? மூன்று பெண் தொழில்முனைவர்கள், மூன்று ஆலோசனைகள்!

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை இழக்காமல் இருக்க 14 ஆலோசனைகள்!

Related Stories

Stories by YS TEAM TAMIL