ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி பலரும் அறியாத 11 சுவாரசிய உண்மைகள்!

1

’ஆப்பிள்’ உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் பின்னணியில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலமெங்கும் பலரால் விரும்பப்பட்டவராக, கணினித் துறையில் அவர் செய்த புரட்சிகளுக்காக போற்றப்படுவராக இருந்து வருகிறார். அவர் கண்ட கனவும் அதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் பிரம்மிக்கவைப்பவை. ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு தொழில்முனைவராக, கண்டுபிடிப்பாளராக, தொழில்நுட்பத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரை பற்றி நாம் அறியாத சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

புத்தத்துறவி ஆக விரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ்

தன்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு புத்தத் துறவியாக ஆக நினைத்தார் ஸ்டீவ். 1974-ல், இந்தியா வந்திருந்த அவருக்கு புத்தமதம் மீது ஆர்வம் பெருகி இந்த முடிவு எடுக்க நினைத்திருந்தார். அம்மதத்தின் மீதான ஈர்ப்பு அவருக்கு இறுதிவரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மீன் மற்றும் காய்கறிகள் விரும்பி

ஸ்டீவ் ஜாப்ஸ் பெஸ்டேரியனாக அதாவது, இறைச்சியில் மீன் மட்டும் உட்கொள்வது மற்றபடி சைவமாக இருந்தார். அவர் விரும்பி சாப்பிடும் உணவு மீன்கள். அதே சமயம், கேரட் மற்றும் பழங்களை விரும்பி சாப்பிடுவார். எல்லாவித காய்கறிகளையும், தானியங்களையும் உட்கொள்வார் ஸ்டீவ். 

கல்லூரி இடைநிற்றல் செய்தவர்

ஸ்டீவ், ரீட்ஸ் கல்லூரியில் 18 மாதம் படித்துவிட்டு இடைநிற்றல் செய்தார். கல்லூரியில் அவருக்கு பிடித்த ஒரே வகுப்பு காலிக்ராபி எனப்படும் கலைநயத்தோடு எழுத்துக்களை எழுத கற்றுத்தரும் வகுப்புகள். அந்த வகுப்புகளில் கலந்துகொண்டதன் மூலமே ஆப்பிள் தயாரிப்புகளில் விதவிதமான ஃபாண்ட்’களை அறிமுகப்படுத்தினார் ஜாப்ஸ்.

கடைசி வார்த்தைகளில் அடங்கியிருக்கும் மர்மம்

ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன் உச்சரித்த அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் இதுவரை யாருக்கும் புலப்படவில்லை. அவர் சொன்ன, “ஓஹ் வாவ்...” “Oh wow. Oh wow. Oh wow” என்பதற்கு பின்னால் இருந்த உண்மை காரணம் மர்மமாகவே உள்ளது. அவர் எதைக் குறிப்பிட்டு இவ்வார்த்தைகளை உச்சரித்தார் என்று தெரியவில்லை.

எளிமையான உடை அணியும் மனிதர்

கருப்புநிற கழுத்து மூடிய சட்டை, ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிவது ஸ்டீவின் வழக்கம். அவரின் டர்ட்டில் நெக் சட்டை மற்றும் லெவீஸ் ஜீன்ஸ் பலரால் புகழப்பட்டது. அவரின் வாழ்நாளில் சுமார் 100 லெவீஸ் ஜீன்ஸ் அவரிடம் இருந்தது பின்னர் தெரியவந்தது. 

27 வயதில் தன் உடன் பிறந்த சகோதரியை சந்தித்தார்

பிரபல எழுத்தாளர் மோனா சிம்ப்சன், ஸ்டீவ் ஜாப்சின் சகோதரி ஆவார். அவர் தன் சகோதரி என பின்னாளின் தான் ஸ்டீவ் கண்டுபிடித்தார். மோனா எழுதிய முதல் நாவலில், அவருக்கும் அவரின் பெற்றோருக்குமான உறவைப் பற்றி எழுதியிருந்தார். மோனாவின் பெற்றோரே தன் பெற்றோர் என்று ஜாப்ஸ் அப்போது தான் தெரிந்து கொண்டார். 

ஜாப்சின் வாழ்க்கை விருப்பங்களை பிரதிபலித்த ‘ஆப்பிள்’ நிறுவனம்

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் நிறுவனத்துக்கு ‘ஆப்பிள்’ என்று பெயரிட்டதன் காரணத்தை பலரும் விவாதித்துள்ளனர். பழங்கள் விரும்பியான ஸ்டீவ் அடிக்கடி ஆர்கானிக் பழங்கள் விளையும் நிலங்களுக்கு செல்லும் போது மனதில் தோன்றிய பெயரே ஆப்பிள் என்று கூறப்படுகிறது. 

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஒருமுறை வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்

ஒருமுறை தனது சொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருப்பினும் இதை வரமாக நினைத்த அவர், 1997-ல் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ ஆக பொறுப்பில் இணைந்தார். ஆப்பிளை விட்டு வெளியே இருந்த சமயத்தில் தான் பல புதிய விஷயங்களை செய்யமுடிந்தது என்றும் சுதந்திரமான பொழுதுகள் அப்போது அவருக்கு கிடைத்ததாக பின்னர் தெரிவித்தார். 

கறாரான முதலாளி

கடுமையான விதிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதற்காக எல்லாரிடமும் கறாராக இருப்பார். 

உணர்வுகளை ஆராய தனிக்குழு கொண்டிருந்தார்

புதிய பொருளை வாங்கி அதை பிரித்து அந்த பொருளை பார்க்கும் ஒருவரின் உணர்வுகளை, சந்தோஷத்தை புரிந்து கொள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தனிக்குழு ஒன்றை கொண்டிருந்தார். இந்த உணர்வுகளை ஆப்பிள் தயாரிப்புகளில் இன்றும் காணமுடியும். 

தன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்

ஸ்டீவ் ஜாப்ஸ் சுமார் 300 தயாரிப்புகளுக்கு தன் பெயரில் காப்புரிமை கொண்டுள்ளார். ஆப்பிள் ஸ்டோர்களில் உள்ள கண்ணாடி படிக்கட்டுகளுக்கு கூட காப்புரிமை வைத்துள்ளார்.