பிட்ஸ் பிலானி கல்லூரி மாணவர்கள் அறிமுகப்படுத்திய நுண் செயற்கைக்கோள்!

0

சமீபத்தில் ஹைதரபாத்தின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் (TIFR) பலூன் ஃபெசிலிட்டியில் மாணவர்கள் தலைமையிலான முதல் நுண் செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தப்பட்டது. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காஸ்மிக் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதே இந்த நுண் செயற்கைக்கோளின் நோக்கமாகும். 

இந்த நுண் செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தப்பட்ட பலூன் ஃபெசிலிட்டியானது எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வென்சருக்கு ப்ராஜெக்ட் Apeiro என பெயரிடப்பட்டுள்ளது. பிட்ஸ் பிலானி கே கே பிர்லா கோவா கேம்பஸ் இளங்கலை மாணவர்களான லக்கி கபூர், சன்கேத் தேஷ்பாண்டே, விபவ், ஜோஷி, ஷிவாங்கி காமத், பங்கஜ் டப்ளே ஆகியோரின் தலைமையில் இயங்கி வருகிறது. TIFR மும்பையின் அறிவியல் அதிகாரியான பி சத்யநாராயணா இந்த மாணவர்களை வழிநடத்துகிறார்.

ஹைதரபாத்தின் TIFR பலூன் ஃபெசிலிட்டியின் தலைவரான தேவேந்திர ஓஜா, விஞ்ஞானிகள் பொறுப்பாளர் சுனீல் குமார், பென்சில்வேனியா பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி மேனன் ஆகியோர் இந்த திட்டத்திற்காக மாணவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டினர்.

படைமண்டலத்தில் உள்ள காஸ்மிக் கதிர்வீச்சுகளை கண்டறியவேண்டும் என்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இதற்காக அதிக உயர பலூனிங் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த நுட்பத்தில் விண்வெளிக்கு அருகிலிருக்கும் சூழலை ஜீரோ ப்ரெஷர் ப்ளாஸ்டிக் பலூனைப் பயன்படுத்தி ஒருவர் ஆய்வு செய்யமுடியும். காஸ்மிக் கதிர்வீச்சுகளை உணர்த்தும் கருவியின் எடை இந்த பலூனின் உதவியுடன் தேவையான உயரத்திற்கு கொண்டு செல்லப்படும்.  

இவ்வாறு உயர பறக்கவைக்கும் வசதியானது இந்தியாவில் வெகு சில இடங்களில் மட்டும் உள்ளது என்றும் ஹைதராபாத்தின் TIFR பலூன் ஃபெசிலிட்டி அவற்றுள் ஒன்று என்றும் ’தி ஹிந்து’ குறிப்பிடுகிறது.

உயிரினங்களுக்கு தீங்குவிளைவிக்கும், பூமியை தாக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களை புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இதனால் இந்த சோதனையானது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திசு பாதிப்பு, புற்றுநோய் போன்றவை இந்த கதிர்வீச்சுகளினால் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளாகும்.

இந்த கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து புரிந்துகொண்ட பிறகு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்கவேண்டும் என்பதே இந்த சோதனையின் இறுதி நோக்கமாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,

இந்த முயற்சியானது முழுமையாக மாணவர்களால் உருவாக்கப்பட்டு விண்வெளிக்கு மிக அருகில் மேற்கொள்ளப்படும் முதல் ஆய்வாக சாதனை படைத்துள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL