அரசுப் பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியை!

0

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் ’பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்குக் கற்பிப்போம்’ என்கிற பிரச்சாரத்தின் பிராண்ட் அம்பாசிடராக 63 வயதான கும்கும் பந்தி நியமிக்கப்பட்டபோது அவரது வீடே விழாக்கோலம் பூண்டது. 

உத்திரப்பிரதேச அரசின் மாவட்ட குற்றவியல் நீதிபதி அமித் கிஷோரால் நியமனம் செய்யப்பட்ட கும்கும், கடந்த 44 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 2017-2018-ம் ஆண்டிற்கான ’இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பெற்ற இவர் அரசுப் பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியை ஆவார்.

கும்கும்மிற்கு 17 வயதிருக்கையில் அவரது தந்தை இறந்துவிட்டதால் குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவரது அப்பா அரசு ஊழியர். கல்வித் துறையில் பணியாற்றியவர். எனவே இவருக்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பணி காரணமாக அவரால் படிப்பை முடிக்க முடியாமல் போனதால் அவர் பணியை மேற்கொண்டவாறே டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முதுகலைப் படிப்பையும் தொடர்ந்தார். அத்துடன் அடிப்படை பயிற்சி சான்றிதழுக்கும் (BTC) பதிவு செய்தார்.

அவரது திருமணத்திற்குப் பிறகும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். பெண் குழந்தைக்குக் கல்வி வழங்கப்படவேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர். எனவே பணி வாயிலாகவும் பணியைத் தாண்டியும் அவர்கள் நலனில் பங்களிக்கக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் பிரதமர் மோடியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியும் கும்கும்மின் முயற்சி மற்றும் பங்களிப்பைப் பாராட்டி கடிதம் எழுதினர். சிக்‌ஷக் சம்மேளனம் மற்றும் இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் போன்றவவை விருது வழங்கி கௌரவித்துள்ளது. யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய பெண்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் கடின உழைப்பும் ஆர்வமும் இருந்தால் ஒவ்வொரு இலக்கையும் எட்டமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். 

கடந்த 44 ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள 10,000க்கும் அதிகமான மாணவர்களுக்குக் கற்பித்துள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA