பெண் தொழில் முனைவோர்களைப் போற்றும் விழா 'சக்தி'- பெண்களின் கதைகளை கொண்டாட வாருங்கள்!  

0

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெண்கள் திகழ்கின்றனர். அதுமட்டுமின்றி இந்திய பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பதிலும் பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதை காண விரும்புகிறோம், பல்வேறு பாரம்பரியத்தை பின்னணியாகக் கொண்ட பெண்களுக்கு ஸ்டார்ட் அப்பில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

நம்பிக்கை நாயகிகள் மற்றும் அவர்களின் பலம் மற்றும் வெற்றிக் கதைகளை தேசிய பெண்கள் ஆணையம் யுவர்ஸ்டோரியுடன் இணைந்து பெண்களின் சாதனைகளை வாழ்த்தி, போற்றிக் கொண்டாடுகிறது. எங்களுடன் இந்த நிகழ்வில் நீங்களும் பங்கேற்கலாம்:

சக்தி (Shakthi)- பெண்களுக்கான ஸ்டார்ட் அப் இந்தியா

திறன் மேம்பாடு அளிக்கப்படும் துறைகள்:

• கைவினை மற்றும் பாரம்பரியக் கலைகள்

• விவசாயம் மற்றும் இயற்கை உணவு

• ஆடைகள், டெக்ஸ்டைல்கள்

• சுற்றுலா, பிரயாணம் மற்றும் தொழில்நுட்பம்

இந்த நிகழ்வில் பயிற்சிப்பட்டறைகள் மற்றும் குழு ஆலோசனைகள் மூலம் திறன் மேம்பாட்டு குறித்து விவாதிக்கப்படும். மேலும் தொழில்துறை வல்லுநர்கள், அரசு/தனியார் துறையினர்/ தன்னார்வலர்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் மற்றும் முன்மாதிரிகளின் கள ஆய்வுகள் கொண்டும் பயிற்சிப்பட்டறை நடைபெறும்.

இந்த நிகழ்வு வேறுதளங்களில் உள்ள வாய்ப்புகளை பங்கேற்பாளர்களுக்கு அடையாளம் காட்டுவதோடு, அரசு, பெண்கள் குழுக்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் மூலம் ஸ்டார்ட் அப் தொடங்க எது மாதிரியான உதவி, நுட்பங்கள்ம, தேவைகள் ஆகியவை எங்கு கிடைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள உதவும். நம் பெண்களைக் கொண்டாடும் போது தான் நமது இந்தியா ஒளிரும்…

இங்கே பதிவு செய்யுங்கள்

தேதி: மார்ச் 8, செவ்வாய்க்கிழமை  

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ஸ்கோப் ஆடிட்டோரியம், ஸ்கோப் காம்ப்ளக்ஸ், முதல் தளம், கோர்-87, லோதி சாலை, புதுடெல்லி-110003

நிகழ்ச்சிகள்:

பயிற்சிப் பட்டறைகள்

திறன் மேம்பாடு முதல் ஸ்டார்ட் அப் வரை

ஸ்டார்ட் அப்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறை

தடையின்றி தொடர்ந்து செயல்படுதல்

தொழில்துறை தலைவரை போல் சிந்தித்தல்

குழுக்கள்

உங்களது தயக்கங்களை தகர்த்தெரியுங்கள்- ஒரு எண்ணத்தை எப்படி உண்மையான தொழிலாக மாற்றுவது

தற்போதைய தொழில் நெருக்கடியை சந்தித்தால் அதை வென்று எப்படி தொடர்ந்து வியாபாரத்தை முன்எடுத்துச் செல்லுதல்

பெண் தொழில்முனைவர்களுக்காக 'ஸ்டார்ட் அப் இந்தியா', 'ஸ்டாண்ட் அப் இந்தியா' 

வீட்டிலிருந்து தொழில் (Business@home)

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்க: Shakti

மேலும் தகவல்களுக்கு herstory@yourstory.comல் தொடர்பு கொள்ளுங்கள்!