‘KDP Pen to Publish 2018’- உலகளாவிய அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் ஆகி ரூ.15 லட்சம் வெல்ல வாய்ப்பு! 

'அமேசான் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்' அறிவித்துள்ள ‘KDP Pen to Publish 2018’ போட்டியில் கலந்து கொள்ள தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எழுத்தாளர்கள் தங்களின் கதை, நாவல் அல்லது கவிதையை அனுப்பலாம். 

0

KINDLE DIRECT PUBLISHING : Brand Spotlight

“தொழில்முறை எழுத்தாளர் என்பவர் பாதியில் விலகாத கற்றுக்குட்டி எழுத்தாளரே.” – ரிச்சர்டு பாக்

புதுமுக மற்றும் பிரபல எழுத்தாளர்கள், கற்றுக்குட்டி மற்றும் தொழில்முறை எழுத்தாளர்கள் என அனைவருக்கும், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக இருக்கும்.‘கேடிபி பென் டு பப்ளிஷ் 2018’ ’KDP Pen to Publish 2018’ போட்டியை அமேசானின் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் அறிவித்துள்ளது.

2017 போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் சுதா நாயர் மற்றும் ஜே. ஆல்கெமைக் கேட்டால், இப்போட்டியின் சிறப்புகளைச் சொல்வார்கள்.

சுயபிரசுர எழுத்தாளர்கள் வெல்வதற்கு இந்த ஆண்டு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப்பரிசுகள், பிரபல எழுத்தாளர்கள் குழுவால் வாசிக்கப்படும் வாய்ப்பு மற்றும் உலகலாவிய புகழ் காத்திருக்கின்றன.

இவை யாவும் உங்கள் விரல் நுனியில் காத்திருக்கின்றன. உங்களிடம் பதிப்பிக்கத் தயார் நிலையில் உள்ள கவிதை, கதை அல்லது நாவல் இருந்தால், அதை வெளியிடுவதற்கான நேரம் இது. ‘KDP Pen to Publish 2018’ போட்டியில் இப்போதே பங்கேற்கவும்.

எப்படிப் பங்கேற்பது?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏற்கனவே வெளிவந்திராத, சொந்தமாக எழுதிய கதை, நாவல் அல்லது கவிதைகளை ஆங்கிலம், இந்தி அல்லது தமிழில் 10ம் தேதி நவம்பர் 2018 முதல் 9ம் தேதி பிப்ரவரி 2019 வரை கேடிபி தளத்தில் பதிப்பிப்பது தான்.

அதன் பிறகு உங்கள் படைப்பின் வீச்சை அதிகமாக்க பொருத்தமான குறிச்சொற்களை இணையுங்கள். குறிச்சொற்களை இணைக்கும் போது, pentopublish2018 என்பதையும் சேர்க்க மறக்க வேண்டாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் போது, உங்கள் புத்தகத்தை KDP Select திட்டத்தில் பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

இந்தப் போட்டி பற்றி மேலும் விவரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

பிரபல எழுத்தாளர்களின் அங்கீகாரம்

இந்த ஆண்டு, 'பென் டு பப்ளிஷ் 2018' போட்டிக்கான நடுவர் குழுவில், ஆங்கிலத்தில் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்களில் ஒருவரான அஷ்வின் சங்கி, 'ஸ்டே ஹங்க்ரி ஸ்டே ஃபூலிஷ்' எழுதிய ராஷ்மி பன்சால், பிரபல இந்தி எழுத்தாளர் திவ்ய பிரகாஷ் துபே, அமேசானில் உலக அளவில் அதிகம் விற்பனையாகும் 100 புத்தகங்களை எழுதியவர்களுள் ஒருவரான எழுத்தாளர் சுந்தரி வெங்கட்ராமன், தமிழ் எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான இரா.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றியாளர்கள் இரண்டு கட்டங்களில் தேர்வு செய்யப்படுவர். முதல் கட்டத்தில், எந்த அளவு படைப்பு விற்பனையாகிறது, எத்தனை பேர் கடன் வாங்குகின்றனர் மற்றும் வாசகர் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு புத்தகமும் வர்த்தக நோக்கில் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மொழியிலும் 5 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும். இவற்றில் இருந்து நடுவர்கள் வெற்றியாளரைத் தேர்வு செய்வர்.

வெற்றி பெறும் படைப்புகள் ரூ.15 லட்சம் வெல்லும். நீள்படைப்புகளுக்காக (10,000 வார்த்தைகளுக்கு மேல்) மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். சிறிய படைப்புகளுக்கு (2,000 முதல் 10,000 வார்த்தைகள் வரை) மூன்று பேருக்கு ரூ.50,000 வழங்கப்படும். 30 பேருக்கு கிண்டில் ஈரீடர் கருவி வழங்கப்படும்.

KDP ஏன்?

பழைய முறையில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்க எவ்வவு காலம் ஆகும்? மூன்று வாரங்கள், மூன்று மாதங்கள், ஏன் சில சமயம் ஆண்டுகள் கூட ஆகலாம். கேடிபி மூலம் 5 நிமிடங்களுக்குள் இது சாத்தியம். கிண்டில் ஸ்டோரில் உங்கள் புத்தகம் ஓரிரு நாட்களில் உலக அளவில் கிடைக்கும். மின்னூல்கள் மூலம் உங்களுக்கு 70 சதவீத உரிமத்தொகைக் கிடைக்கும்.

மேலும் இதைப் பதிப்பிப்பது எளிதானது. மொத்த நடைமுறை வெளிப்படையானது. நீங்களே விலையைத் தீர்மானிக்கலாம். புத்தக அட்டையை நீங்களே வடிவமைக்கலாம். விரும்பும் மாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சுருங்கச்சொன்னால் நீங்கள் தான் உங்கள் பதிப்பாளர்.

த வெட்டிங் தமாஷா எழுதிய சுதா நாயர் மற்றும் அண்டெலிவர்ட் லெட்டர்ஸ் எழுதிய ஜே.ஆல்கெம் இருவரும் 2017 போட்டியில் கூட்டாக வெற்றி பெற்று, ரொக்கப்பரிசு, உலகளாவிய அங்கீகாரம் மற்றும் ராயல்டி பெற்றனர். இந்த ஆண்டு அது நீங்களாகவும் இருக்கலாம்.

இனியும் காத்திருக்காமல் பென் டு பப்ளிஷ் 2018 போட்டியில் பங்கேற்கவும்.

Related Stories

Stories by YS TEAM TAMIL