தொழில்முனைவராய் மெருகேறும் நடிகர் ரானா டகுபதி!

0

நடிகர், தொழில்முனைவர் மற்றும் தொழில்நுட்பவாதியான ரானா டகுபதி திரையில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் பன்முக கலைஞராய் திகழ்கிறார்.

ரானா டகுபதியுடனான சந்திப்பு பல முறை தவறியதால் நேர்காணல் நடக்கும் என்ற எண்ணத்தையே விற்றேன். ஆனால் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு ஏற்ப அவருடன் சந்திப்பு நடந்தது.

பெங்களூரில் உள்ள ஓபெரோய் ஹோட்டலில் அவரை சந்தித்தேன், அவரது படம் விரைவில் வெளி வர இருக்கையில் அவரது நேர்காணல் மிகவும் தேவையாக இருந்தது. பல வேலைகளுக்கு இடையே நம்முடன் பேச அமர்ந்தார் ரானா.

பாகுபலியில் தோன்றிய அதிகார பசி முகம் மறைந்து ஒரு எளிமையான மனிதராய் தோன்றினார்.

“நடிகனாய் இருப்பதன் சிறப்பு, நான் காலையில் எழுந்ததும் அந்த நாளில் நான் மற்றவரின் வாழ்க்கையை வாழலாம்,” என பேசத் தொடங்கினார் ரானா.

உடனே என் மனதில் நீண்ட காலம் தோன்றிய கேள்வியை கேட்டேன். பாகுபலியின் பல்லாலதேவா கதாபாத்திரம் “கேம் ஆப் த்ரோன்ஸ்-ன்” (ஆங்கில தொடர்) கஹால் துரோகோ கதாபாத்திரத்தின் தழுவலா என்று கேட்டேன்.

“பல்லாலதேவா கதாபாத்திரத்தை தயாரிப்பாளர் என்னிடம் சொல்லிய போது இந்த கதாபாத்திரத்திற்கு வேற யாரையாவது மனதில் கொண்டுள்ளீரா என்று கேட்டேன். அவர் கஹால் துரோகோ என்று கூற உடனே இந்த வாய்பை பெற்றுக்கொண்டேன்,” என்கிறார்.

ரானாவின் இந்த 7 வருட சினிமா வாழ்க்கையில் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் நாம் திரையில் பார்க்கும் ரானா நிஜ வாழ்க்கையில் வேறுபட்டுள்ளார்.

2005-ல் Spirit Media Pvt.ltd உடன் இணைந்து விசுவல் எபக்ட்ஸ் தொழிலை தொடங்கினார்.

இந்த நிறுவனம் இதுவரை 80-க்கும் மேற்பட்ட திரைப்படத்திற்கு விசுவல் எபக்ட்ஸ் செய்துள்ளது. அதில் ரஜினிகாந்தின் சிவாஜி மற்றும் கமலின் தசாவதாரமும் அடங்கும்.

AR ஆர்வலர்

பாகுபலி படத்தில் சிறந்த அனுபவத்தை வழங்க விசுவல் ரியாலிட்டி அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொழில்நுட்பம் விலை உயர்ந்ததாகும். எனவே தினசரி வாழ்க்கையில் நாம் எவ்வாறு இந்த அனுபவத்தை ஏற்படுத்த முடியும் என்று சிந்தித்தோம். அதன் பின்னரே Augmented reality (AR) உருவாக்க ஹாலோகிராம் தொழில்நுட்பம் மற்றும் 3D ஐ இணைத்தோம். இதன் நோக்கம், என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை என்றால் AR மூலம் அதை சாத்தியம் ஆக்கலாம். எல்லாரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது, ஏன் அதை முழுமையாக பயன்படுத்தக் கூடாது என கேட்கிறார் ரானா.

AR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Appstar அப்-ஐ நிறுவினார் ரானா. அதில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் வசதியும் உள்ளது. முதலில் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்ட AR தொழில்நுட்பம் அவரது ஆர்வத்தை அதிகம் ஈர்த்தது.

“முதலில் என் படத்தின் விளம்பரத்திற்காக இந்த ஆப்-ஐ பயன்படுத்தினேன். அதன் பின்னரே இது புரட்சிகரமான ஒன்று என புரிந்தது. படம் வெளிவந்த பிறகு இதில் அதிக கவனம் செலுத்த முன் வந்தேன். ஆப்-ன் அளவு சிறிதாகவும் அதிகம் பேட்டரி பயன் படுதாதவாரும் மாற்றினோம்,” என்கிறார் ரானா.

திரைப்படங்களை உருவாக்கும் மகிழ்ச்சி

தயாரிப்பாளரின் பேரனான ரானாவின் வாழ்க்கையில் சினிமா எப்பொழுதும் ஒரு பங்காக இருக்கிறது. நடிகராக தொடங்கி தன் தாதாவை போல் ரானாவும் தயாரிப்பாளர் ஆனார். ஒரு தயாரிப்பாளராய் ஒரு படத்திற்கு என்ன தேவை என்பதையும், மக்களை ஒரு படம் சென்றடைய சிறந்த தொழில்நுட்பம் வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.

9 வருடமாக ஒரு விசுவல் எபக்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ரானா சினமாவை விட தொழில்நுட்பத்திலே தனக்கு ஆர்வம் அதிகம் என்கிறார்.

“சிறந்த நடிகராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. என் படங்களை விட தொழில்நுட்பத்தை பற்றியும் AR பற்றியும் என்னால் மணிகணக்காக பேச முடியும். கதைசொல்லுவது மற்றும் படங்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் அந்த கதையில் நான் இருக்க ஆர்வமில்லை. வேறொருவர் நடிக்க அந்த கதையை நான் இன்னும் ரசிப்பேன். பிரபலாமாக இருப்பது ஒரு வேலை கதை சொல்வது கலை; நான் கதை சொல்கிறேன்.”

நாம் வரும் பாதை எளிமையானது அல்ல

ஒரு படத்தை உருவாக்குவது என்பது தனி மனிதன் சமந்தபட்டது அல்ல அது ஒரு கூட்டு கலை வடிவம். ஒரு நடிகர் மீதான பற்று அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை பொறுத்தே அமையும் என்கிறார் ரானா.

“ஒரு படம் முடிந்த பிறகு என் நெருங்கிய வட்டராத்தில் காட்டுவேன், வெளியே இருந்து பார்ப்பவர்கள் நமக்கு தெளிவான மற்றும் சரியான முன்னோக்கை அளிப்பார்கள். இதன் மூலம் தவறுகளை குறைக்கலாம்.”

இருப்பினும் நாம் நினைப்பது போல் எளிமையானது அல்ல என்கிறார். தனது The Ghazi Attack படத்தை இயக்குவது சிரமமாகவே இருந்தது, காரணம் அது ஒரு போர் படம். மேலும் அதில் காதல் காட்சிகள் இல்லை மற்றும் அதிகம் சண்டை காட்சிகள் தேவை பட்டது.

“சதாரண நிதியாளருக்கு இது புரியாது. இந்த படத்திற்கு நான் backend வேலையில் அதிகம் செலவிட்டேன் அதனால் என் மற்ற படங்களை விட The Ghazi Attack படத்திற்கு மிக குறைவாகவே செலவானது,” என விளக்குகிறார் ரானா.

கதாபாத்திரத்தில் ஆழமாக மூழ்குவது

இந்த நடிகர் ஒரு நேரத்தில் ஒரு படத்திற்கும் மட்டுமே தன்னை அற்பணிப்பார், அப்பொழுதே காதாபாத்திரத்துடன் ஒருங்கிணைந்து நடிக்க முடியும் என்பதற்காக.

“ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்பொழுது அந்த பாத்திரமாகவே நாம் மாறிவிடுகிறோம். அதை போலவே பேசுகிறோம் மற்றும் நடந்து கொள்கிறோம். ஆனால் படம் வெளிவந்த பிறகு இயல்பு நிலைக்கு மாறிவிடுகிறோம். எங்கள் வேலையின் சிறந்த குணாதிசயமே இதுதான்.”

வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்ப்பது

ரானா ஒரு பன்முக கலைஞர் என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஒரு படத்தில் நடிக்காமல் கதாபாத்திரமாகவே வாழ்பவர் அவர்.

“பாகுபலி படத்தில் நிஜ வாழ்க்கையை அப்பாற்பட்ட பல சிறந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டது. கற்பனையான ஒரு ராஜ்யத்தை உருவாக்கினோம், அதில் பல்லாலதேவா கையால் பைசனை (எருமை) கொல்வான். இது நிஜத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை மற்றும் வலிமை,” என விளக்குகிறார் ரானா.

தன் வருங்கால படத்திற்கு கதை தயார் செய்து கொண்டிருக்கும்போது கொடைக்கானல் அல்லது கோவா போன்ற இடங்களில் தனக்கான நேரத்தை செலவிடுகிறார் அவர்.

மேலும் பேசுகையில், “என் படத்தின் மூல கரு மற்றும் கதை சொல்லும் விதத்தில் நான் அதிக கவனம் செலுத்த உள்ளேன். மற்ற நடிகர்களுக்கும் அதையே கூறுகிறேன், இது போன்ற நீங்களும் இருந்தால் அடுத்த படத்திற்காக நாம் பேசுவோம்,” என கூறினார்.

“நான் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்கிறேன். மற்றவர்கள் என்னை பற்றி என்ன யோசிப்பார்கள் என்பது என் கவலை அல்ல...” என முடிக்கிறார் ரானா டகுபதி.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப்