பல கோடி ரூபாய் மதிப்பு ஐடி நிறுவனத்தை அமைத்து 15 நாடுகளுக்கு சேவையளிக்கும் 22 வயது இளைஞர்!

1

கண்ணூரில் சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தினமும் ஒரு சிறிய கடையில் ஷட்டரைத் திறந்து உள்ளே செல்கிறார். அடுத்த இரண்டு மணி நேரம் ஏதோ ஒன்றில் பரபரப்பாக மூழ்கியிருக்கிறார். பூட்டப்பட்ட அறையில் தன்னுடைய கவனம் சற்றும் சிதையாத வண்ணம் டிஎன்எம் ஜாவத் மின்வணிகம், இணையதள வடிவமைப்பு, செயலி உருவாக்கம் ஆகியவற்றில் செயல்பட்டு லாபகரமான வணிகத்தை உருவாக்கியுள்ளார். 

ஜாவத் துவங்கிய முயற்சியான 'டிஎன்எம் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' இன்று 15 நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு சேவையளித்து வருகிறது. இது பல கோடி ரூபாய் மதிப்புடைய வர்த்தக முயற்சியாகும். ஜாவத் தனது 22-வது வயதில் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

ஜாவத்திற்கு 10 வயதிருக்கையில் அவரது அப்பா அவருக்கு ஒரு கணிணி பரிசளித்தார். விரைவிலேயே எஸ் என் ட்ரஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவரான ஜாவத் தனது அறிவுத்திறனை வணிக முயற்சியாக மாற்றினார்.

ஆரம்பத்தில் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் என்னுள் இருந்த கனவை நனவாக்க கடினமாக உழைத்தேன். வருங்காலத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது தெரியும் என்கிறார் ஜாவத். இன்று நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியிலமர்த்தியுள்ளார்.

16 வயதில் தொழிலைத் துவங்கிய ஜாவத் ப்ளாக்கிங் மற்றும் வெப் டிசைனிங் திறனை மேம்படுத்திக் கொண்டார். இலவச செயலிகள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக மெய்நிகர் பயிற்சி எடுத்துக்கொண்டார். 

“வலைதளம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தேன். பள்ளி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும் பெரும்பாலான நேரத்தை இதற்காகவே செலவிட்டேன். நான் கம்ப்யூட்டருக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். ஆனால் நேர்மறையான விதத்திலேயே அடிமையானேன்,” என்றார். 

இறுதியில் அவரது நண்பர் ஸ்ரீராக்குடன் இணைந்து நிறுவனத்தைத் துவங்கினார். நிதி குறைவாக இருந்த காரணத்தால் இலவச டொமைன் பகுதியில் செயல்பட்டார்.

மிகவும் குறைவான கட்டணமாக 1,000 ரூபாய்க்கு இணையதள வடிவமைக்கத் துவங்கினர். இவ்விருவரும் அதன் பிறகு முதநூலில் தங்களது பணி குறித்து விளம்பரப்படுத்தினர். அதைத் தொடர்ந்து வணிகம் வளர்ச்சியடைந்தது.

இன்று இவரது அலுவலகம் கண்ணூரிலும் துபாயிலும் உள்ளது. இவரிடம் பிஎம்டபள்யூ 3-சீரிஸ் செடான் உள்ளது. சொந்த வீட்டில் வசித்து வருகிறார். ஜவாத் தற்போது தொலைதூரக் கல்வி முறையில் பிபிஏ படித்து வருகிறார்.