ஹோம்ப்ரூனர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ள ’ஹோம்ப்ரூனர் எக்ஸ்போ’

0

பல பெண்கள் வணிக வாய்ப்புகளை கையில் எடுத்து சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை வீட்டிலிருந்தே மேற்கொண்டு வருவாய் ஈட்டிவருகின்றனர். இந்த பெண்கள் ’ஹோம்ப்ரூனர்’ என அழைக்கப்படுகின்றனர். அதாவது வீட்டிலிருந்து செயல்படும் தொழில்முனைவோர் என்று பொருள்.

’ஹோம்ப்ரூனர் விருதுகள்’ வீட்டிலிருந்தே வணிகத்தில் ஈடுபடும் பெண்களை அங்கீகரிக்கிறது. அதனை தொடர்ந்து, நாளை அதாவது நவம்பர் மாதம் 23-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கவிருக்கும் ’ஹோம்ப்ரூனர் எக்ஸ்போ’ அவ்வாறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது தயாரிப்பு மற்றும் சேவையை காட்சிப்படுத்த உதவும் இடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சவேரா ஹோட்டலில் நடைப்பெறும் ஹோம்ப்ரூனர் எக்ஸ்போவில் சிறப்பான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும். ப்ராண்ட் அவதாரின் பார்ட்னர்ஷிப்புடன் நேச்சுரல்ஸ் இந்த நிகழ்வை நடத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகள் நடைப்பெற்ற ’ஹோம்ப்ரூனர் விருதுகள்’ வாயிலாக நடுவர் குழு உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அந்த கருத்துகள் வாயிலாக ஹோம்ப்ரூனர்கள் பலவிதமான ஊக்கமிகு கதைகளையும், புதுமையான சிந்தனைகளையும், மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் ஈட்டுவதில் படைப்பாற்றலையும் கொண்டிருப்பது தெளிவாகிறது. 

இவ்வாறு இவர்கள் ஈட்டும் வருவாயானது பல நேரங்களில் அவர்களது குடும்பத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில நேரங்களில் ஏற்கெனவே இருக்கும் வருவாயுடன் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள கைகொடுக்கிறது. 

இந்த எக்ஸ்போவில் இடம்பெற உள்ள அனைத்து ஸ்டால் உரிமையாளர்களும் வாடிக்கையாளர்கள், பி2பி பார்ட்னர்கள், முதலீட்டாளர்கள் போன்றோருடன் ஒருங்கிணைந்து தங்களது விற்பனையையும் மார்கெட்டிங்கையும் ஊக்குவித்துக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாகும். இந்தியாவிலேயெ முதல் முறையாக ஹோம்ப்ரூனர்களால் நடத்தப்படும் கண்காட்சி என்பது இதன் சிறப்பம்சமாகும். 

நேச்சுரல்ஸ் நிறுவனர் சி கே குமரவேல், இது பற்றி கூறுகையில்,

“பெண்களும் ஆண்களும் சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் சிறப்பானவர்கள். இந்த வார்த்தைகளை ஹோம்ப்ரூனர் நிரூபிக்கிறது. அவர்கள் சவால்களை சந்தித்த விதம், அதை எதிர்கொண்ட விதம், தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து தங்களது ஆர்வத்தில் ஈடுபட்ட விதம் அனைத்தும் பாராட்டிற்குரியது. ஹோம்ப்ரூனர்களை அங்கீகரிப்பதிலும் அவர்களது மார்கெட்டிங் மற்றும் விற்பனையை ஊக்குவிப்பதற்கான தளத்தை வழங்குவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்,”

30 ஸ்டால்கள் அடங்கிய இந்த அரங்கில் மிகச்சிறந்த தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும். ஆடைகள், ஆபரணங்கள் போன்ற பல வகையான பொருட்கள் இதில் அடங்கும். பல நிகழ்வுகளும் குழு விவாதங்களும் இந்த கண்காட்சியில் திட்டமிடப்பட்டுள்ளது.

ப்ராண்ட் அவதார் நிறுவனர் சிஇஓ ஹேமச்சந்திரன் லோகன் இந்த எக்ஸ்போ குறித்து விளக்குகையில்,

”ஹோம்ப்ரூனர் விருதுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து பணியில் ஈடுபட்டுள்ள பெண்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஹோம்ப்ரூனர் எக்ஸ்போவை அறிமுகப்படுத்தினோம். இது வீட்டிலிருந்தே பணிபுரிந்து தனித்துவமான தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கும் பெண் தொழில்முனைவோர் காட்சிப்படுத்தவும் ப்ராண்ட் பெயரை உருவாக்கிக்கொள்ளவும் சிறப்பான தளமாக அமையும்,”

’Brewing with Shylaja’ என்கிற சிறப்புப் பகுதியை Cinema Rendezvous நிர்வாக ட்ரஸ்டீ மற்றும் நிறுவனர் சைலஜா செட்லூர் மற்றும் வாண்டர் ல்ஸ்ட் ட்ராவல் லாஞ்ச் – சவேரா உரிமையாளர் நடுத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெண் தொழில்முனைவு குறித்த உந்துதலளிக்கும், பயனுள்ள தகவல்கள் நிறைந்த உரையாடல்கள் முக்கிய பிரபலங்களுடன் நடக்க உள்ளது. 

Duchess Club நிறுவன உறுப்பினர்களுடனும் ஒரு சிறப்பு அமர்வு நடக்க உள்ளது. நீனா ரெட்டி (சவேரா ஹோட்டல் - இணை நிர்வாக இயக்குனர்), பூர்ணிமா ராமசாமி (AL & Analytics and Custom Designer), அருணா சுப்ரமணியம் (மேலாண்மை ஆலோசகர் மற்றும் ட்ரஸ்டீ, பூமிகா ட்ரஸ்ட்), லதா ரஞ்சன் (Founders of Ma Foi), வீணா குமாரவேல் (சென்னையில் உள்ள நேச்சுரல்ஸ் க்ரூப் ஆஃப் சலூன்ஸ் நிறுவனர் மற்றும் இந்திய தொழில்முனைவர்), சுஷீலா ரவீந்திரநாத் (கெவின்கேர் – நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்), டாக்டர். சௌந்தர்யா ராஜேஷ் (Founder-president of AVTAR Career Creators, FLEXI) உட்பட பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

”அசாதரணமான திறமைகள் கொண்ட இந்தப் பெண்களைத் தொடர்புகொள்வதும் அவர்கள் தங்களது குடும்பங்களை ஆதரிக்கவும் ஆர்வமுள்ள பகுதியில் செயல்படவும் தீவிர முனைப்புடன் செயல்படுவதைப் பார்ப்பதும் சிறப்பான அனுபவமாகும். இந்தப் பெண்களின் சந்தைப்படுத்தும் திறனும் விற்பனையையும் அதிகரிக்க இந்த கண்காட்சி பொருத்தமான இடமாகும். அனைவரையும் வியக்கவைக்கும் பல்வேறு தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்படும். நீங்களே நேரடியாக வந்து இந்த அனுபவத்தைப் பெறலாம்,” 

என்கிறார்  அல் அராஃபத் – ஹோம்ப்ரூனர் விருதுகள், ஏற்பாட்டு குழு தலைவர் 

குழு விவாதத்திற்கான தலைப்புகள் –

• வணிகத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் மின் வணிகத்தின் பங்களிப்பு

• பொழுதுபோக்கு வணிகம்

• மார்கெட்டிங் தொடர்பு & நெட்வொர்க்கிங் உருவாக்குதல்

• நம்பகத்தன்மையை உருவாக்குதல்

• வீட்டிலிருந்து வணிகத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளுதல்

• வணிக மேம்பாட்டிற்காக தனியாகவும் ஒருங்கிணைந்தும் செயல்படுதல்

• முழுமையாக செயல்படுதல் மற்றும் தயாரிப்பு சார்ந்த சிக்கல்கள்

• சமூக தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றிடையே தீர்மானிப்பதில் இருக்கும் ஆபத்துகள்

ஹோம்ப்ரூனர் எக்ஸ்போ கஜா புயலுக்கான நிதியையும் நிவாரணப் பொருட்களையும் சேகரிக்கிறது. நடிகை கஸ்தூரி மிஸ் நீனா ரெட்டி மற்றும் ஹோம்ப்ரூனர் எக்ஸ்போ முக்கிய குழு உறுப்பினர்கள் அனைவருடன் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியும் நிவாரணப் பொருட்களையும் சேகரிக்கும் பணியை துவங்கிவைக்க உள்ளார். இந்த பொருட்கள் நிகழ்வில் பங்கேற்கும் ஹோம்ப்ரூனர்கள் உட்பட அனைவரிடமும் சேகரிக்கப்படும்.

Related Stories

Stories by YS TEAM TAMIL