இந்தியர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க விரும்பும் வாசீம் இக்பாலுக்கு உதவ நீங்கள் தயாரா?

0

மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு நல்ல குடிநீரை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் 50 லட்ச ரூபாய் நிதியை உயர்த்த நாமும் உதவுவோம்.

இந்தியர்கள் அனைவருக்கும் சுத்தமான வடிகட்டப்பட்ட குடிநீரை வழங்க திட்டமிட்டுள்ளது குறித்த வாசீம் இக்பால் அண்மையில் நடந்த கண்டுபிடிப்பாளர் விழா ஒன்றி கலந்து கொண்டு விளக்கினார்.

குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த புதுமையான கண்டுபிடிப்பு பாரதத்தில் பலரைக் காப்பாற்றக்கூடியதாகும். MW Social entreprise Pvt Ltd என்ற சமூக ஸ்டார்ட்-அப் நிறுவனம் என்ற பெயரில் இவ்வகை பில்டர்களை தயாரிக்கிறார் இக்பால்.

 தண்ணீரை வடிகட்ட எம்வி சமூக நிறுவனத்தின் மூலம் வாசீம் உருவாக்கியுள்ள சாதனத்திற்கு மின்சாரம் தேவையில்லை. இதன் விலை வெறும் 1,500 ரூபாய் மட்டுமே. 500 ரூபாய் மதிப்புடைய இதன் ஃபில்டரை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். வாசீம் விநியோக சங்கிலியை அமைக்க நிதி உதவியை எதிர்நோக்கியுள்ளார்.

பில்டர் முறையை கொண்டுள்ள இந்த தண்ணீர் வடிகட்டி மின்சாரமின்றி இயங்குவதால் நாடு முழுதும் இதை எளிதில் பொருத்தி மக்கள் பயன்படும்படி செய்யமுடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் இக்பால். 

இந்தியாவிற்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டும் என்கிற வாசீமின் கனவு நனவாக உங்களால் உதவமுடியும் எனில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.