100 பில்லியன் டாலர் வருடாந்திர வருவாயை முதல் முறையாக கடந்தது மைக்ரோசாஃப்ட்!

பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், முதல் முறையாக 2018 ஆம் ஆண்டில் நூறு பில்லியன் வருடாந்திர வருவாயை எட்டியிருக்கிறது. 

0

கணினிகளும், மென் பொருட்களும் உற்பத்தி செய்து விற்கும் வாஷிங்டனில் இருந்து இயங்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், 2018 நிதியாண்டில் 110 பில்லியன் டாலர் வருடாந்திர வருவாயை ஈட்டியிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நூறு மில்லியன் வருவாயை தொடுவது இதுவே முதல் முறை. 

1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ், சிறுவனாக இருந்த போதே தொழில்நுட்பத்தில் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். பதிமூன்று வயதிலேயே கணினிகளை எல்லாம் ஹேக் செய்யத் தொடங்கிய பில் கேட்ஸை பள்ளி நிறுவனம் கண்டித்திருக்கிறது. பிறகு அதே பள்ளி நிறுவனம் தங்களுக்கு ப்ரோக்ராம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வரலாறும் உண்டு. ஒருக்கட்டத்தில் ஆலன் பாலை சந்தித்தார். மேற்படிப்புக்காக ஹார்வர்டு பல்கலைகழகத்தில் இணைந்திருக்கிறார், தனியே நிறுவனம் தொடங்கப்போவதாக படிப்பை பாதியில் கைவிட்டார். 

ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வேலை செய்தார்; ஆலன் பால் சண்டை போட்டு பிரிந்தார். ஏகப்பட்ட சிக்கல்கள், குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ‘விண்டோஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். முப்பத்து ஒன்பதாவது வயதில் உலகின் பணக்கார நபராக நிமிர்ந்து நின்றார் பில் கேட்ஸ். அதற்கு பிறகு, ஹார்வர்டில் டிகிரியை வாங்கியதும், பல தொண்டு முயற்சிகள் செய்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களின் வெளிச்சத்தை பெற்றது, அமேசானின் ஜெஃப் பெசாஸால் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக வந்த செய்தியில் தான். 

Image courtesy : Time.com
Image courtesy : Time.com

கடந்த ஜூன் மாதம் 2018 நிதியாண்டு முடிவுற்ற நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நூறு பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியிருப்பது, மைக்ரோசாஃப்டிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னே, மைக்ரோசாஃப்டின் ஊழியர்கள் அனைவரும் இருப்பதாகவே பரவலாக சொல்லப்படுகிறது.

மைக்ரோசாஃப்டின் ‘கமர்சியல் க்ளவுட் சேவைகள்’ தான் மைக்ரோசாஃப்டின் வருமான வளர்ச்சிக்குக் காரணம். மைக்ரோசாஃப்ட் 365-ன் பாகங்களான அஸுர் , ஆஃபிஸ் 365, டைனாமிக்ஸ் 365 மற்றும் விண்டோஸ் க்ளவுட் வருவாய்கள், 23 பில்லியன் டாலர்களை கொண்டு வந்திருக்கின்றன. சர்ஃபேஸ் (surface) 4.6 பில்லியன் டாலர் வருவாயையும், கேமிங் பத்து பில்லியன் டாலர் வருவாயையும், லிங்க்டுஇன் ஐந்து பில்லியன் வருவாயையும் ஈட்டியிருக்கிறது. 

கடந்த வருடத்தின் இறுதியில் விண்டோஸ் ப்ரோ விமரிசையாக வரவேற்கப்பட்டது. விண்டோஸ் 10 இன்னமுமே 700 மில்லியன் பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டவில்லை என்றாலுமே, ‘ஏறத்தாழ 700 மில்லியன் பயனர்கள் விண்டோஸ் 10-ஐ பயன்படுத்துகிறார்கள்’ என மைக்ரோசாஃப்ட் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.  கடந்த வருடத்தில் மைக்ரோசாஃப்ட் விற்பனை திட்டங்களில் பெரிய மாற்றங்கள் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்ட், தான் கையாளும் நிறுவனங்களில் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, பெரிய நிறுவனங்களில் மட்டுமே இனி கவனம் செலுத்தப் போகிறது என்று நிறுவனத்தின் எக்சிக்யூட்டிவ்கள் கூறினார்கள். அதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்கள். 

பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்டை தொடங்கி, வெற்றிப் பெற தொடங்கியதுமே, அவருடைய தொலை நோக்கு பார்வையாக இருந்தது, உலகின் அத்தனை வீடுகளிலுமே ஒரு கணினி இருக்க வேண்டும் என்பது. இன்று அது பெருமளவு உண்மையாகியிருக்கிறது. மனித குலத்திற்கு உதவும் அறிவியல் வளர்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. 

Related Stories

Stories by YS TEAM TAMIL