திரைப்படத் துறையில் பணிபுரிந்த பூனம் மரியா, கேக் பேக்கராக மாறிய கதை!

0

ஆஸ்கர் வென்ற இரண்டு படங்களான 'தி கோல்டன் காம்பஸ்' மற்றும் 'லைஃப் ஆப் பை' திரைப்படங்களில் பணியாற்றியவர் பூனம் மரியா பிரேம். திரைப்பட உருவாக்கப் பணிகளில் ஒன்றான விஷுவல் எஃபெக்ட்ஸ் -ல் பத்து ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஒரு பேக்கராக (Baker) மாறியுள்ளார். 2012ல் தன்னுடைய மகளின் மூன்றாவது பிறந்தநாளுக்கு ஒரு சிறந்த விலங்கு வடிவத்தை கேக் மீது தன் கைகளாலேயே சுகர்கிராஃப்ட் செய்ய முயற்சி செய்து பார்த்தார். “கேக் வடிவமைப்பு எவ்வளவு கடினமானது என்று தான் முதலில் எனக்குத் தோன்றியது. அதே சமயம் அது நல்ல விதமாக அமைந்திருக்காவிட்டால், ஒரு சாதாரண கேக் என்ற பிம்பத்தையே பார்ப்பவர்க்கு ஏற்படுத்தியிருக்கும்” என்கிறார் ஐதராபாத்தில் இயங்கி வரும் "ஜியோஸ் பேக் ஹவுஸ்"சின் (Zoeys Bake House) உரிமையாளர் பூனம் மரியா பிரேம்.

பூனமுக்கு பேக்கிங் ஆர்வம் எப்படி வந்தது?
அந்த கேக் அலங்காரத்திற்கு பிறகு பூனம் மிகவும் பிசியாகிவிட்டார். பேக்கிங் அவரை அப்படி மாற்றிவிட்டது, தன்னுடன் பணிபுரியும் ஒருவர் தன் மகளின் பிறந்தநாளுக்கு எப்படி கேக்கில் வானவில் தீமை கொண்டு வரமுடியும் என்று கேட்டார். “சொன்னால் நம்ப மாட்டீர்கள், நரம்புகளுக்கு துள்ளலூட்டும் ஒரு சிறந்த டிசைனாக இருக்கும் வகையில் நான் அதை செய்திருந்தேன். பல முறை, தொலைக்காட்சிகளில் காட்டும் பெரிய அளவு கேக்குகளைப் பார்த்து இவற்றை எப்படி உருவாக்குகிறார்கள் என்று வியந்திருப்பதாகக்” கூறுகிறார் பூனம்.

மாதங்கள் கறைந்தோடின பூனமும் அலுவலக பொறுப்புகளில் மூழ்கிப் போனார், இதற்கிடையில் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு நண்பருக்காக மீண்டும் சர்க்கரை சில்அவுட் கேக் தயாரிக்க திட்டமிட்டார். “நான் இதை ஒரு வியாபாரமாக செய்ய வேண்டும் என்று திட்டமிடவில்லை, ஆனால் அதன் பிறகு நான் என் மகள் ஜியோஸ்(அவள் பெயர் காரணமாகத் தான் ஜியோஸ் பேக்ஹவுஸ் பிறந்தது) பெயரில் ஒரு ஃபேஸ்புக் பக்கம் தொடங்கினேன். இதைப் பார்ப்பவர்கள் இது புதுமையாக இருப்பதாக வியக்கலாம். ஆனால் அதன் பிறகு நான் அதை மறந்தே போய்விட்டேன், என்னுடைய கணவர் என் பதிப்புகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் வரை” அது பற்றிய நினைவே வரவில்லை என்கிறார் பூனம்.

அது தொடர்பான அழைப்புகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருந்தன. மக்கள் அவரிடம் கேக் வாங்க விரும்பினர், ஆனால் பேக்கிங் தொழிலை முன்எடுப்பது பற்றி பூனமால் உறுதியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் அவருடைய முக்கியப் பணியான திரைப்படம் உருவாக்குதல் நல்ல விதத்தில் சென்று கொண்டிருந்தது.

பின்னர், வாரஇறுதிகளில் பூனம் கேக்குகளுக்கான ஆர்டர்களை எடுத்து செய்யத் தொடங்கினார். அது அவருக்கு பிடித்ததாகவும் அதே சமயம் திருப்தியளிப்பதாகவும் இருந்தது.

“நான் கேக் தயாரிக்கத்தொடங்கிய போது என்னிடம் ஆர்டர்கள் மலைபோல் குவிந்துவிட்டது. அப்போது தான் இதற்கான தேவை சந்தையில் அதிகம் இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். இந்த கேக் அலங்காரத்திற்கு நிறைய கடினஉழைப்பும், இரவுகளில் தூங்காமல் வேலைபார்க்கவும் வேண்டி இருந்தது. இதில் சில வடிவங்கள் தோல்வியும் கண்டன, என்னுடைய புதிய பணிக்கு நிறைய அன்பும் பாசமும்” தேவை என்கிறார் பூனம்.

முழுநேர பேக்கிங் பணி

பெர்சி ஜாக்சன் – சீ ஆஃப் மான்ஸ்டர்ஸ் போன்ற படங்களில் பணியாற்றிய ஓராண்டுக்கு பின்னர் ரிதம் அண்டு ஹியூசில் இருந்து விலகிவிட்டார் பூனம். அதன் பின்னர் அந்தப் பணி பற்றி யோசிக்கவில்லை அவர். பேக்கிங் துறையை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாக வருத்தப்படுகிறார் பூனம், நீங்கள் எவ்வளவு கடின உழைப்பை காட்டுகிறீர்களோ அந்த அளவு உயர்ந்த சம்பளத்தை பெற முடியும் என்று கூறுகிறார் அவர்.

“மக்களின் கேள்விகளுக்கும், வாட்ஸ்அப், போன் கால், ஈமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றில் அனுப்பப்படும் தகவல்களுக்கும் பதிலளிப்பது கடினம் என்று சொல்கிறார் பூனம். அனைவரும் நாங்கள் ஒரு குழு என்று நினைக்கிறார்கள், ஆனால் அனைத்தையும் அன்றைய தினம் முடிவதற்குள் தனி ஒரு நபராக கையில் எடுத்து செய்கிறேன் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. என் கணவர் தான் என்னுடைய முதுகெலும்பு, அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஜியோஸ் பேக் ஹவுஸ் எனக்கு கைக்கு எட்டாத கனவாகவே இருந்திருக்கும்” என்கிறார் பூனம்.

தொழில்முனைவராக மாறிய நேரம்

ஒரு பணியாளராக வேலை பார்த்த பின்னர் இப்போது தொழில்முனைவராக மாறியுள்ளது பற்றி பூனம் கூறும் போது, இரண்டிலுமே நல்லது கெட்டது இரண்டறக் கலந்திருக்கும் என்கிறார். ஜியோஸ் பேக்கிங் ஹவுஸ் அவருக்கே உரிய அங்கிகாரத்தை அவருக்குக் கொடுத்துள்ளது, அதே போன்று அவருடைய பணிக்கு ஏற்ற பெறுமையையும் அவருக்கு அளித்துள்ளது. "விஷுவல் எஃபெக்ட்ஸை உருவாக்குவது மிகவும் கடினமான பணி, சில நேரங்களில் மனித சக்திக்கு மிஞ்சி பணியாற்ற வேண்டும். சில சமயங்களில் என் மகளைக் கூட பார்க்காமல், 14-15 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றியது கூட நினைவிருக்கிறது என்கிறார் பூனம். இப்போதும் நான் வேலைபார்க்கிறேன் ஆனால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 12 மணி நேரம் பகலில் மட்டுமே என்பதால் என்னால் நேரத்தையும்,வாழ்க்கையையும் கட்டுப்படுத்தி வாழ முடிகிறது. அதே சமயம் என் மகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் எப்போதும் அவள் அருகிலேயே இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கிறது" என்று மகிழ்கிறார் பூனம்.

ஒரு தொழில்முனைவராக, பூனமுக்கு வாடிக்கையாளர்களைக் கையாள்வதும், அவர்களுடன் பேசுவதும் கடினமாக இருந்தது. அதே போல வியாபாரத்தை விஸ்திகரிக்கவும் கடினமாக இருந்தது. தொடக்கத்தில் இவை அனைத்தும் கஷ்டமாக இருத்து, ஆனால் மக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப நாமும் வளர்ச்சி கண்டுவிட்டால் அவை அனைத்தும் எளிமையே. சந்தையின் நிலவரத்தையும் வாடிக்கையாளரின் தேவையையும் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். கடினஉழைப்புக்கு நல்ல ஊதியம் உண்டு, நல்ல பொருள் எப்போதும் மலிவாக கிடைத்துவிடாது” என்கிறார் பூனம்.

“நீண்ட நேரம் சமையல்அறையில் இருப்பது வெறுப்படைய செய்யலாம், ஆனால் அதுவே வாழ்வில் ஒரு பகுதியாக வரும் போது அதற்கு ஏற்ப உங்களை நீங்கள் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று சொல்கிறார் பூனம்.

பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும்

பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவர் பூனம். அதே போன்று அவர்களுடைய உடல் ஒத்துழைப்பு அளிக்கும் வரை வேலை செய்து, தங்களை முன்னேற்றி எடுத்துச் செல்ல வேண்டும், அது முழுநேரப்பணியோ அல்லது வீட்டில் இருந்தே செய்யும் பணியோ எதுவாக இருந்தாலும் சரி. "குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் வளர வேண்டும், அவர்கள் வாழ்வில் சுயமாக அனைத்தையும் செய்யும் நிலைக்கு வந்த பின்னர் உங்களுக்கான அடையாளத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அது ஒன்றே உங்கள் காலம் முழுவதும் தொடர்ந்து வரும்" என்று கூறுகிறார் ஒரு இயல்பான தாயாக.

பூனம் சுயமாக ஒரு ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடையைத் தொடங்குவதற்கான திட்டத்தை வடிவமைத்து வருகிறார். ஆனால் தன் இளைய மகளும், கணவனும் பணிகளில் பிசியாக இருப்பதால் இது செயல் வடிவம் பெற இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்கிறார்.

“ஆனால் இது நிச்சயம் நடக்கும் விரைவிலோ அல்லது பின்னரோ” என்று நம்பிக்கையோடு முடிக்கிறார் பூனம்.