அலுவலக மீட்டிங் சமயத்தில் எலன் மஸ்க் பின்பற்றும் 3 முக்கிய விஷயங்கள்!

0

பல பெரு நிறுவனர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிப்பவர்களாகவும், நிறுவனங்களின் பல குழு சந்திப்பை நேர்த்தியாக நடத்தும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருகின்றனர். ஆனால் சில சமயங்களில் இந்த சந்திப்புகள் சரியாக நடை பெறுவது இல்லை. அதாவது குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், பணியாளர்களின் ஆர்வம் குறைதல் போன்ற பல சிக்கல்கள் நேரிடுகிறது. ஒரு சமயத்தில் இந்த சிக்கல்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட, நெடுநாட்களில் பார்க்கும்பொழுது நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நேரத்தை வீணடிக்கும் அனைத்தும், தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது போன்ற சிக்கல்களுக்கு எளிய வழியில் தனக்கென ஒரு தனித்துவத்தோடு கையாள்கிறார் எலன் மஸ்க். ஒரு நிறுவனத்தில் சந்திப்பு நடந்தால், அது அதில் பங்கு பெரும் அனைவருக்கும் லாபமாய் அமைய வேண்டும் என்பதை உறுதி செய்வார் எலன் மஸ்க். மேலும் அந்த சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்து திசை மாறாமல் இருப்பதையும் உறுதி செய்வார்.

நிறுவனத்தின் சந்திப்புகளின் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய எலன் மஸ்க் கடைப்பிடிக்கும் முக்கிய மூன்று விஷயங்கள்:

உங்கள் தலைப்பை சூழலுக்கு பொருத்தமான உண்மைகளாய் மாற்றுங்கள்

ஏற்கனவே நடந்து முடிந்ததை ஒப்பிடுவதோடு தர்ச்சமையத்தின் உண்மையை பேசுவதையே மஸ்க் பின்பற்றினார். அவர் தன் ஊழியர்கள் தலைப்பை பிரித்து, சூழலுக்கு ஏற்ற உண்மைகளை வெளிப்படையாக பேசுவதையே எதிர்பார்ப்பவர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தன் ஊழியர்களை புதுமையாக யோசிக்க செய்வது மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துக்கொள்ளவும் ஊக்குவிக்கிறார்.

GQவில் வெளியிடப்பட்ட அவரின் சுயவிவரத்தின் படி,

“எலன் மஸ்கின் சிறந்த தலைமை; அவர் ஊழியர்களை ஊக்குவிக்கும் தன்மை போன்ற அனைத்தும் அவரின் அறிவை சார்ந்தது மட்டுமே.”

அனைவரும் தயாராக வருகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்

சந்திப்பில் பங்குப்பெறும் அனைவரும் முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே அந்த சந்திப்பு சிறந்ததாய் அமையும். சந்திப்பில் பங்குப்பெருபவரகள் தயாராக வரவில்லை என்றால் அந்த சந்திப்பு தேவையற்றது என்பதை முற்றிலுமாக நம்பினார் எலன். சந்திப்பிற்கு தயாராக நேரம் தேவை என்றால் உங்கள் தலைவர்களிடம் கேளுங்கள், எந்த ஒரு முன் தயாரிப்பும் இல்லாமல் வராதீர்கள் என்கிறார் எலன். பேசப்படும் தலைப்பிற்கு ஏற்ற ஆராய்ச்சி இல்லை என்றால் அதை தொடர்ந்து கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூற முடியாது, எனவே அது மிகவும் முக்கியம்.

உங்கள் ஊழியர்களிடம் எதிர் பார்க்கும் அதே உழைப்பை நீங்களும் செய்ய வேண்டும்

உங்கள் தயார்நிலையை விட அதிகமாய் பணியாளர்களிடம் எதிர் பார்க்காதீர்கள். மஸ்க் தன் பணியாளர்களிடம் அதிக எதிபார்ப்பை வைத்திருப்பவர். இது சில சமயத்தில் பணியாளர்களை முகம் சுளிக்க வைத்தாலும், அவரும் அதற்கீடாக வேலை செய்பவர் என்பதை அறிவார்கள். டெஸ்லா ஊழியரின் கூற்றுபடி, 

“ஒரு வேலை ஒரு வருடத்தில் முடியக் கூடியது என்றால், அதை ஒரு வாரத்தில் முடிக்க நினைப்பவர் மஸ்க்,” என்கிறார்.

இறுதியாக, உங்கள் சந்திப்புகள் லாபகரமாக அமையவேண்டும் என்று நீங்கள் நினைத்தால்; சந்திப்பிற்கு தயாராக நேரம் கொடுத்து உங்க ஊழியர்களை ஊக்குவியுங்கள். இதனால் உற்பத்தி மற்றும் ஈடுபாடு அதிகமாகும்.