சென்னை வெள்ளம்! தவிக்கும் மக்கள்!

0

ஜெமினி மேம்பாலம் உள்பட எங்கு பார்த்தலும் வெள்ளக் காடாகத்தான் இருக்கிறது. நேற்று வரை தண்ணீர் குறைவாக புகுந்த பகுதிகளில் கூட இரவில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

போரூர் ஏரியும் நிரம்பி வருவதால் எந்நேரமும் அது திறக்க வாய்ப்பு உள்ளதால் வலசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் பெருக்கு உயர வாய்ப்பு உள்ளது.

அடையாற்றில் நீர் குறைந்தால்தான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. வீடுகளின் மொட்டை மாடிகளிலும், உயர் அடுக்குகளிலும் முடங்கி உள்ளவர்களுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிதுள்ளது. பல இடங்களுக்கு உணவு பொட்டலங்களை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது. கடுமையான குடிநீர், பால் தட்டுபாடு எற்ப்படுள்ளது.

சாலைகள் முடங்கி உள்ளதால் சென்னைக்கு அதிக படகுகளின் தேவை உள்ளது. சில பகுதிகளில் படகுகள் மூலம் செல்வதும் கடினமாக உள்ளதால் மக்கள் உதவி கேட்டு தத்தளித்து வருகின்றனர்.

இரவு மழை குறைந்திருந்தாலும் காலை பத்து மணி முதல் பல இடங்களில் மீண்டும் லேசான மழை பெய்து வறுகிறது. சென்னையில் தொடர் மேக மூட்டமும் லேசான மழையும் மூன்று நாட்களுக்கு தொடரும், உள் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

40 சதவீதம் மொபைல் இணைப்பு இயங்க வில்லை என்று அறிவிக்கப்படுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லதாதால் பெரும்பாலான மக்கள் தொலைபேசி, இ மெயில், தொலைக்காட்சி என்று முழுமையாக துண்டிக்கப்படுள்ளனர்.

சென்னையில் குடியேறி உள்ள வெளி மாவட்ட, வெளி மாநில மக்கள் சொந்த ஊர்களுக்காகவாவது செல்லலாம் என்று கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர். தென்மாநிலங்களுக்கு செல்ல வேலூர் வழியாக மட்டுமே போகமுடியும். மீட்பு பணிகளுக்கு கூடுதல் ராணுவம் வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிசென்ன வெள்ள சேதத்தை இன்று பார்வையிடுகிறார்.