இரண்டாம் நிலை ஊர் மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருத்துவம் வழங்கும் மருத்துவமனை! 

மறைமுக கட்டணங்கள் இல்லாத தரமான மருத்துவ சிகிச்சைகளை இரண்டாம் நிலை நகர மக்களுக்கு வழங்க ‘மெட்வே ஹாஸ்பிடல்ஸ்’ தொடங்கிய டாக்டர்.பழனியப்பன்

0

ப்ராண்ட் ஸ்பாட்லைட்: இது ஒரு ஸ்பான்சர்ட் கட்டுரையாகும்

மருத்துவத் தொழிலில் ஆழ்ந்த மருத்துவ அறிவும் நெறிமுறைகளும் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு கருணையும் முக்கியம். மருத்துவரின் சிறந்த அணுகுமுறை நோயாளியை குணமடையச் செய்வதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவப் பராமரிப்பிற்கான செலவுகள் மிகவும் அதிகமாக உள்ள நிலையில் உயர்தரமான அதேசமயம் மலிவான மருத்துவப் பராமரிப்பு சேவைகள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு கருணையுடன்கூடிய சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது 'Medway Hospitals' 'மெட்வே ஹாஸ்பிடல்ஸ்’. சென்னையில் இரண்டு மருத்துவமனைகள், கும்பகோணத்தில் ஒரு மருத்துவமனை என தற்போது மூன்று பல்துறை மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவ பராமரிப்பு சேவைகளை அணுகுதல்

இந்த மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர். டி. பழனியப்பன் கூறுகையில்,

 ”அனைத்து நிலையைச் சேர்ந்த மக்களுக்கும் மறைமுக கட்டணம் ஏதுமின்றி, சேவையின் தரத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாத வண்ணம் மலிவான கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பை வழங்கும் மருத்துவமனையை நிறுவ விரும்பினேன்,” என்றார். 

இதுவே மெட்வே மருத்துவமனையின் தனித்துவமான அம்சம் என்கிறார் அவர்.

டாக்டர். டி. பழனியப்பன்
டாக்டர். டி. பழனியப்பன்

நோயாளிகளுக்கு தனிப்பட்ட கவனத்துடன்கூடிய சிகிச்சை கிடைக்கவேண்டும். அவர்கள் செலவிடும் பணத்திற்கான மதிப்பை அவர்கள் பெற்றதாக உணரவேண்டும். இத்தகைய ஒரு முழுமையான அணுகுமுறையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்களது பில்லிங் முறை வெளிப்படையானது. 

நாங்கள் வழங்கும் மருத்துவப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் புதிய மருத்துவ பராமரிப்பு கொள்களைகள் மற்றும் மாற்றங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றில் எங்களது சிறப்பு மருத்துவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுகின்றனர்,” என்றார்.

இது தொடர்பான ஒரு உதாரணத்தை அவர் குறிப்பிட்டார். 

”ஒரு அரியவகை குறைபாட்டுடன் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு நோயாளி எங்களிடம் வந்தார். இவர் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மயங்கி விழுந்துகொண்டிருந்தார். நாட்டின் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது பிரச்சனை என்ன என்பதை யாரும் சரியாகக் கண்டறியவில்லை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது இருதயம் தொடர்பான பிரச்சனையோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்வே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது அவரது கணையத்தில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தோம். இது இன்சுலினோமியா எனப்படும் ஒரு அரிய வகை குறைபாடாகும். அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். இன்று அவர் சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்,” என்றார்.

”மற்றொரு சமயம் எங்களது நிபுணர்கள் குழு பிரத்யேகமான, கடினமான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒன்றை நாட்டில் முதல் முறையாக மேற்கொண்டனர்,” என்றார் அவர்.

தொழில்நுட்பம் சார்ந்த காலகட்டத்தில் மனித ஸ்பரிசத்தின் அவசியம்

தொழில்நுட்பத்துடன் மனித ஸ்பரிசத்தை இணைத்துக்கொண்டதே இத்தகைய சாதனைகளை சாத்தியப்படுத்தியது என்றார். “தொழில்நுட்பம் ஒரு வரமாகவே உள்ளது. அதிகத் திறனுடன் செயல்படவும் உறுதியான பலன் கிடைக்கவும் அது உதவியுள்ளது. சிகிச்சை முறைகள் அணுகப்படுவதை அதிகரிக்கச் செய்துள்ளது. 

”கும்பகோணம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மருத்துவப் பராமரிப்பு சார்ந்த முழுமையான அணுகுமுறையை மாற்றியமைத்துள்ளது. நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்க தொலைதூரத்தில் உள்ள நிபுணர்களிடம் நோயாளிகளின் நிலையை பகிர்ந்துகொண்டு விரைவான ஆலோசனை பெற மெட்வே கும்பகோணத்தில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட டெலி-ஐசியூ கொண்டு உதவுகிறது,” என்றார்.

மனித ஆற்றல் இல்லாத தொழில்நுட்பம் பயனற்றது என்றார் இவர். மருத்துவப் பராமரிப்பு பிரிவு டிஜிட்டல்மயமானதால் தொலைதூரத்தில் உள்ள நோயாளிகளை கண்காணித்தல், டெலிமெடிசன் போன்ற போக்குகள் அதிகரித்து வருகின்றன. இதனால் நன்மை, தீமை இரண்டுமே இருப்பதாக டாக்டர் பழனியப்பன் தெரிவிக்கிறார். கட்டணம் குறைய உதவுவதுடன் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கும் சமமான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட உதவுகிறது. 

இருப்பினும் அவர் கூறுகையில், 

”மனித ஆற்றல் முக்கியமானது என நாங்கள் கருதுகிறோம். இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையிலும் பல நோயாளிகள் இதையே விரும்புகின்றனர். நோயாளிகளை நேரடியாக சந்திக்கும்போதுதான் அவரின் உடல் பற்றிய புரிதல் உண்டாகும். எந்த ஒரு நோயாளியும் குணமடைய மருத்துவரின் தனிக்கவனம் அவசியம். மெட்வே மருத்துவமனையில் உள்ள நாங்கள் இதை நம்புகிறோம். இதையே கடைப்பிடிக்கிறோம்,” என்றார்.

பல கிளைகள் கொண்ட மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்துவது சவால் நிறைந்ததாகும். மருத்துமனைகளை நிர்வகிப்பதும் தரமான மருத்துவப் பராமரிப்பு தொழில்முறையினரை தக்கவைத்துக்கொள்வதுமே இதில் முக்கிய சவால் என்கிறார் டாக்டர். பழனியப்பன். 

“மருத்துவத் துறையில் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்வது எப்போதும் சவால் நிறைந்தது. தரமான மருத்துவர்களும் செவிலியர்களும் ஒரே மருத்துவமனையில் தொடர்ந்து நீண்ட காலம் இணைந்திருப்பதில்லை. நாங்கள் அவர்களை பணியிலமர்த்தி, பயிற்சியளித்து, அதிக சம்பளம் வழங்கும்போதிலும் அவர்களை தக்கவைத்துக்கொள்வது சவாலானதாகவே உள்ளது,” என்றார்.

இண்டர்னல் மெடிசன் மற்றும் தீவிர சிகிச்சையில் நிபுணத்துவம் கொண்ட டாக்டர். பழனியப்பன் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிகல் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். பெல்காமில் உள்ள ஜே.என். மருத்துவக் கல்லூரியில் எம்டி முடித்தார். அத்துடன் புதுடெல்லியில் உள்ள நேஷனல் போர்ட் ஆஃப் எக்சாமினேஷன்ஸில் (NBE) டிஎன்பி முடித்துள்ளார். நேஷனல் போர்ட் ஆஃப் அகாடெமிக் சயின்சஸ் (MNBAS), தி ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் (UK), தி ரிசர்ச் சொசைட்டி ஃபார் தி ஸ்டடி ஆஃப் டயாபடீஸ் இன் இண்டியா (RSSDI), இண்டியன் சொசைட்டி ஆஃப் கிரிடிகல் கேர் மெடிசன் (ISCCM) ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.

இரண்டாம் நிலை நகரங்களில் விரிவடைதில் கவனம் செலுத்தப்படுகிறது

இரண்டாம் நிலை நகரங்களில் ஏன் கவனம் செலுத்தப்படுகிறது என்பது குறித்து அவர் விவரிக்கையில், 

“இரண்டாம் நிலை நகரங்களில் தரமான மருத்துவப் பராமரிப்பு இல்லாததைக் கண்டோம். இதுவே ஒரு தூண்டுதலாக அமைந்தது. மருத்துவத் துறையில் காணப்படும் பெரும்பாலான பெரிய மருத்துவமனைகள் பெரிய நகரங்களையே ஆக்கிரமித்துள்ளதால் நாங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் விரிவடைய தீர்மானித்தோம். அங்கு பலர் செயல்படாததால் எங்களால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என நம்புகிறோம்,” என்றார்.

தொடர்ந்து இரண்டாம் நிலை நகரங்களில் கவனம் செலுத்துகையில் வெளிநாடுகளில் விரிவடையும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ”பல பகுதிகளில் விரிவடைந்து தரமான மருத்துவ பராமரிப்பு வழங்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். மருத்துவ பராமரிப்பு தொடர்பான இணைப்புகளுக்காக வழிகாட்ட கல்வி யூனிட் ஒன்றை நிறுவவும் விரும்புகிறோம்,” என்றார்.

மெட்வே கடந்து வந்த பாதை குறித்து டாக்டர். பழனியப்பன் கூறுகையில், “அதிக போட்டி நிறைந்த சுற்றுச்சூழலில் எங்களது சாதனை குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவரையும் மனதார பாராட்டுகிறேன். ஆனால் இது வெறும் துவக்கம் மட்டுமே,” என்றார்.

கட்டுரை : யுவர்ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL