ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் சாம்பியன் கரோலின் மரினை வெற்றி கொண்டு உலக பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பிவி.சிந்து! 

1

பிவி.சிந்து, மூன்று இடங்கள் உயர்ந்து, தற்போது உலக பெண்கள் பாட்மிண்டன் ரேன்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் அவர் வென்ற இந்திய ஓப்பன் சூப்பர் சீரீஸ் பட்டம் சிந்துவுக்கு இந்த இடத்தை பெற்று தந்துள்ளது. ரியோ ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டியில் சிந்துவை தோற்கடித்த கரோலின் மரினை, சூப்பர் சீரீஸ் போட்டியில் தற்போது சிந்து வீழ்த்தி பட்டியலில் முன்னேறியுள்ளார். கரோலின் உலக பட்டியலில் மூன்றாம் இடத்திலும், சிந்து 75,759 பாயிண்ட்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். 

இது பற்றி டைம் ஆப் இந்தியாவிடம் பேசிய சிந்துவின் தந்தை பி.வி.ரமணா,

”அவர் இந்த இடத்தை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது எல்லாருடைய கடுமையான உழைப்பின் பலனாகும். இதே கடின உழைப்பு தொடரவேண்டும். அது சிந்துவுக்கும் தெரியும். அவரும் அதில் தீவிரமாக இருக்கிறார். மேலும் சிறக்க கூடுதல் உழைப்பை போடவுள்ளார். நாட்டு மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்புக்கு கடமைப் பட்டுள்ளோம். மீடியாவும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி,” என்றார்.

22 வயதான சிந்து, மேட்மிண்டன் உலக பெடரேஷனின் (BWF) ரேன்கிங்கில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர். அதற்கு அடுத்ததாக ஒலிம்பிக் போடியில் வெள்ளிப் பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் சிந்து.

BWF பட்டியலில் முதல் 5 இடத்தில் இருந்த மற்றொரு வீராங்கனை ஆன சாய்னா நெய்வால், பட்டியலில் ஒரு இடம் கீழே சென்றுள்ளார். உலக பட்டியலில் அவர் தற்போது 64,279 பாயிண்ட்களுடன் 9-வது இடத்தில் உள்ளார். அண்மையில் நடந்த மலேசியன் ஒப்பன் போட்டியில் தோல்வியடைந்ததால் அவரின் ரேன்க் குறைந்தது. பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தாய் த்சூ யிங் என்ற தாய்வான் நாட்டு வீராங்கனை. இவர் 87,911 பாயிண்ட்களுடன் முதல் ரேன்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்பு கட்டுரைகள்: 

சாய்னா முதல் சிந்து வரை: பேட்மின்டன் நட்சத்திரங்களை உருவாக்கும் 'கோபிசந்த்'தின் அகாடமி!

அதிகாலை எழுவதே வெற்றியின் மந்திரம்!