ஈரோடில் நடைப்பெறும் ’தொழில் திட்டமிடல் போட்டி 2017’ மற்றும் தொழில்முனைவோர் மாநாடு!

1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’ மற்றும் தொழில்முனைவிற்கான திட்டங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், தமிழகத்தில் தொழில்முனைவு எண்ணம் உடைய மாணவர்களை ஊக்குவிக்க பல முயற்சிகள் மேற்கொண்டுவரப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி அடையவும், ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை வலுப்படுத்தி, அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்திய தொழிற் கூட்டமைப்பு பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகின்றது. 

இந்திய தொழிற் கூட்டமைப்பு இளம் இந்தியர்கள் பிரிவு (CII-Yi Erode Chapter) , நேடிவ் ஏஞ்சல் நெட்வர்க் மற்றும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர்; கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியுடன் இணைந்து "Startup Mania 2017" என்ற தலைப்பில் தொழில் திட்டமிடல் போட்டி’ (Business Model Competition) மற்றும் ’ஈரோடு தொழில்முனைவோர் மாநாடு 2017’ (Erode Entrepreneurship Summit 201) நடத்த உள்ளது. 

புதுமையான தொழில் ஐடியாக்கள், வழிக்காட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஏற்படுத்த இந்த மாநாடு வழிசெய்யும். புதுமையான நிறுவனங்களை கண்டறிந்து அவர்களை வெளி உலகிற்கு காட்சிப்படுத்துவது இம்மாநாட்டின் நோக்கமாகும். தேர்வு செய்யப்பட்ட குழுவினருக்கு வியாபாரத்திற்கான வழிகாட்டுதல், சீரமைத்தல் மற்றும் நிதி முதலீட்டு போன்றவற்றுக்கு ஆதரவு அளிப்பதன் வழியாக அதனை அடுத்து தொழில் நிலையினை அடைய வழிசெய்யப்படும் . 

"Startup Mania" நிகழ்ச்சி கீழ் காணும் இரு நிகழ்வுகள்:

* தொழில் திட்டமிடல் போட்டி: ஒரே மேடையில் மாணவர்கள், புதிதாக தொழில் முனையும் தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள், அனுபவமிக்க தொழில்முனைவோர்கள், பணியில் இருக்கும் தொழில் வல்லுனர்கள், ஆகியோர் முன்னிலையில் தங்களின் கருத்துக்களை, யோசனைகளை வெளிப்படுத்தி, விவாத்தித்து, பகிர்ந்து கொள்வார்கள். சிறந்த தொழில் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். 

* தொழில்முனைவோர் மாநாடு:  வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள் தங்களின் அனுபவங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களின் அறிவுரைகளை மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்கள் கேட்டு பயன்பெறமுடியும். இம்மண்டலத்தில் புதிய வியாபாரத்திற்கான தேவைகள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் விளக்குவதன் மூலம் அங்குள்ள தொழில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவது இம்மாநாட்டின் மற்றுமொரு குறிக்கோள் ஆகும்.   

தொழில் திட்டமிடல் போட்டியில் கலந்து கொள்ள:

மாணவர்கள்: புதிய கண்டுபிடிப்பாளர்கள் அனைத்து துறைகளைச் சார்ந்த முதுநிலை/இளநிலை மாணவர்கள். 

மற்றவர்கள்: புதிய கண்டுபிடிப்பாளர்கள்/தொழில்முனைவோர்கள்: முன்னாள் மாணவர்கள், தொடக்க நிலை தொழில்முனைவோர் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுனர்கள்.   

மாநாட்டில் பங்குபெற Startup Mania என்ற தளத்தில் முன் பதிவு செய்யவேண்டும். 

போட்டியில் பங்குபெற ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 18-ம் தேதி.

மார்ச் 11-ம் தேதி நடைப்பெற உள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் உரையாடக்கூடிய இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: j.prakash@cii.in