தடுப்பணைகள், விலை மலிவான ட்ராக்டர் என பல புதுமைகளை படைத்துள்ள பஞ்சிபாய் மதுகியா!

1

குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பஞ்சிபாய் மதுகியா ஒரு கண்டுபிடிப்பாளராகவே வாழ்ந்துவந்தார். குறைந்த விலையிலான ட்ராக்டர்களையும் ஸ்ப்ரேயர்களையும் கண்டுபிடித்துள்ளார். குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் 25-க்கும் அதிகமான தடுப்பணைகளை கட்டியுள்ளார். புதுமையான கண்டுபிடிப்புகளில் தனது வாழ்நாளை செலவிடுகிறார். நிலக்கடலை ஸ்பிரேயர், குறைந்த செலவில் தானியங்களை சேமிக்கும் நுட்பம், காற்றில் பரவும் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஸ்ப்ரேயர் போன்றவை இவரது மற்ற கண்டுபிடிப்புகளாகும்.

நிலக்கடலை பயிரிடும் சிறு விவசாயிகள் மற்றும் பழத்தோட்டம் வளர்த்து வரும் சிறு விவசாயிகளுக்கு அதிக திறன் கொண்ட ட்ராக்டர்கள் தேவைப்படாது என்பதை 80-களில் உணர்ந்தார் பஞ்சிபாய். சௌராஷ்டிரா பகுதியில் வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள் இவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருந்தனர். 

ஜீப்பின் அடிச்சட்டகத்தையும் டீசல் என்ஜினையும் பயன்படுத்தி 10 ஹார்ஸ்பவர் ட்ராக்டர் ஒன்றைக் கண்டுபிடித்தார். சந்தையில் கிடைக்கும் மாற்று தயாரிப்புகளின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் இவரது தயாரிப்பின் விலை பாதி மட்டுமே. 

பஞ்சிபாயின் மூன்று மற்றும் நான்கு சக்கர ட்ராக்டர்கள் அறிமுகப்படுத்திய உடனே பிரபலமானது. விவசாயிகளிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்தது. தனது மகன் மற்றும் உறவினரின் மகன் ஆகியோரின் உதவியுடன் விரைவில் மேலும் ஒன்பது ட்ராக்டர்களை உருவாக்கினார்.

அதன் பிறகு பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) ட்ராக்டரின் வடிவமைப்பு குறிப்புகள் குறித்து கேள்வியெழுப்பியது. சாலைகளில் ட்ராக்டர்களை இயக்கமாட்டேன் என்று வாக்குமூலம் எழுதி கையொப்பமிட நேர்ந்தது. பஞ்சிபாய் ட்ராக்டர்கள் வடிவமைப்பை தரப்படுத்தவும் அதிக வாடிக்கையாளர் தொகுப்பிற்கு சந்தைப்படுத்தவும் உதவியது க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேஷன் ஆக்மெண்டேஷன் நெட்வொர்க் (GIAN).

நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (இந்தியா) நிறுவனர் மற்றும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், அஹமதாபாத்தின் (ஐஐஎம்-ஏ) மூத்த பேராசிரியரான அனில் கே குப்தா ’பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ நேர்காணலில் தெரிவிக்கையில்,

”அதிக திறன் கொண்ட வாகனங்கள் வாயிலாக மிகப்பெரிய ட்ராக்டர் நிறுவனங்கள் சிறப்பாக தொழில் புரியும்போதும் சிறு விவசாயிகள் அதிகம் இருக்கும் காரணத்தால் 10-12 உயர் ஆற்றல் ட்ராக்டர்களுக்கான நிதி விரைவில் சேகரிக்கப்படும்,” என்றார்.

2002-ம் ஆண்டு நிலத்தடி நீர் குறைந்ததாலும் குறைவான மழைப்பொழிவு காரணமாகவும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது சௌராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் அவதிப்பட்டனர். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முன்வந்தார் பஞ்சிபாய். அவரது கிராமத்தின் வழியாகச் செல்லும் தார்ஃபாத் நதிக்குக் குறுக்கே தடுப்பணை கட்டினார். ஒரே ஒரு கொத்தனார் மற்றும் நான்கு பணியாட்களைக் கொண்டு இந்த அணையை நான்கே நாட்களில் கட்டி முடித்தார். இதனால் சுற்றியுள்ள பகுதிகள் அதிக பசுமையானது. அருகாமையிலுள்ள கிணறுகளில் தண்ணீர் அதிகரித்தது. இது போன்ற பல அணைகளை கட்டுமாறு கிராமத்து மக்கள் பஞ்சிபாயிடம் கேட்டுக்கொண்டனர். இன்று வரை இந்தப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ”இந்த அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து பஞ்சிபாய் ’தி ஹிந்து’ பத்திரிக்கைக்கு தெரிவிக்கையில்,

“மழை இல்லாதபோது நீர்பாசனத்திற்கு கிணறு மட்டுமே உதவும். எனினும் மழைக்காலம் முடிவிற்கு வரும்போது நிலத்தடி நீர் உயர்ந்திருக்கும். தடுப்பணைகள் தண்ணீர் கடந்து சென்றுவிடாமல் தடுத்து நிலத்தடி நீர் ரீசார்ஜ் ஆக உதவும்.”

அவரது புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக பஞ்சிபாய்க்கு நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் 2017-ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. தென்ஆப்ரிக்காவின் காமன்வெல்த் அறிவியல் கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார். நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சிக்கான ஆலோசனை குழுவில் பங்கு வகித்தார்.

கட்டுரை : Think Change India