பத்திரிகைத்துறையின் மனசாட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

1

இந்திய சுதந்திரம் பெற்ற பின், அவசரநிலை பிரகடனப்படுத்தியது இன்றளவும் இந்தியாவின் வரலாற்றில் ஒரு கருப்புப் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் தேசிய பாதுகாப்புக் கருதி, குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் தடை செய்யப்பட்டது. எதிர்கட்சிகள் ஒடுக்கப்பட்டன, ஊடகங்களும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டது. பெரும்பாலான எதிர்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கொடுமையான மிசா சட்டத்தின் கீழ் சுமார் 34988 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 75818 பேர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ஜனதா கட்சியின் ஷா கமிஷன் அறிக்கையில் இவை அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நன்றி: EstonianWorld
நன்றி: EstonianWorld

அவசரநிலை நாட்களில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஊடகங்களின் சுதந்திரம். எதிர்கட்சிகள் இல்லாத அந்த சமயத்தில், அந்த இடத்தில் ஊடகங்களின் செயல்பாடு இருந்திருக்கவேண்டியது. ஆனால் மீடியாவும் பயங்கரமாக ஒடுக்கப்பட்டு செயல்பட முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டனர். அப்போது இருந்த தகவல் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் எல்கே.அத்வானி இது குறித்து தனது தீர்கதரிசன கருத்தை வெளியிட்டிருந்தார். “ஊடகங்கள் தலை குனியவைக்கப்பட்டு, தவழ்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்,” என்று கூறி இருந்தார். ஆனால் இன்று இருக்கும் ஊடகங்களின் நிலையை காணும்போதும் அத்தகைய உணர்வே எனக்கு ஏற்படுகிறது. ஆனால் தற்போது அவசரநிலை என்று எதுவும் இல்லை, அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படவில்லை, எதிர்கட்சிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படவில்லை, இருப்பினும் ஊடகங்களில் செயல்பாடு பல முக்கிய கேள்விகளை என் மனதில் எழுப்புகின்றது. மீடியாவின் ஒரு சிலர் முதுகெலும்பை இழந்து, மண்டியிட்ட பத்திரிகையாளர்களை போல் நடந்துகொள்கின்றனர்.  

இன்றைய உலகம் வெளிப்படையாக உள்ளது ஆச்சர்யமான ஒன்று. அடுத்த கணமே தகவல்கள் பரவிவிடுகிறது. இத்தகைய வேகம் இதற்குமுன் பார்த்திராதது. பார்வையாளார்கள் உலக அளவில் உள்ளனர். யார் வேண்டுமானாலும் செய்தி சேகரிப்பவர் ஆகலாம். 1975 இல் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. ஆனால் இன்றோ இந்தியாவில் மட்டுமே 800க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. அதைத்தவிர பத்திரிகைகள். முன்பெல்லாம் தேசிய பத்திரிகைகளுக்கு மாநில அளவு பதிப்புகள் குறைவாக இருந்தது. ஆனால் இன்று எல்லா தேசிய பத்திரிகைகளுக்கு நாட்டின் மூலை முடுக்குகளில் ஊடுருவ செயல்பட்டு வருகின்றனர். தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு 50 பதிப்புகள் உள்ளது. ஒவ்வொரு நகரமும் தனது அண்டை பகுதிகளின் செய்திகளை பத்திரிகைகளை மூலம் வெளியிடுகிறது.  

அது ஒருபுறம் இருக்க, சமூக ஊடகங்கள் மறுபுறம் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு செய்தி ஆசிரியரால் முடியாத பல அம்சங்களை இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு செய்து வருகிறது. சமூக ஊடக ரிப்போர்டர் ஒரு செய்தி ஆசிரியரை போல் ஆகிவிட்டார். இதில் செய்திகளை வகைப்படுத்த எந்த ஒரு வரைமுறைகளும் கிடையாது. அதனால் தற்போது செய்தி ஊடகங்கள் பெருத்த போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது. புதிய அரக்கனான சமூக ஊடக பத்திரிகைத்துறை என்பது சவாலாக இருந்தாலும் அதை ஒரு ஒழுங்கான ஊடகம் என்று அழைத்துவிட முடியாது. 

இன்றைய சமூக ஊடக செய்தி வடிவத்தின் விளைவாக, இந்திய மீடியாக்கள் குறிப்பாக தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, டிவி செய்திகள் நடுநிலையோடு அல்லாமல் செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய முறையிலான செய்தி வடிவங்கள் போராக பார்க்கப்படுகிறாது. எல்லா செய்தியிலும் கருத்துகள் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. பொதுவாக கருத்தக்களும், பத்திகளும் எடிடோரியல் பகுதிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த காலம் போய் தற்போது எல்லா செய்திகளிலும் அதன் தாக்கம் உள்ளது. டிஆர்பி பெற பல தியாகங்களை மீடியாக்கள் செய்துள்ளது. ஒரு செய்தியை பலமுறை ஊர்ஜிதப்படுத்திவிட்டு வெளியிடவேண்டும் என்ற அடிப்படையே இன்று மாறியுள்ளது. வேகம் மட்டுமே முக்கியமாக கருதப்படுவதால் எல்லாமே லைவாக ஆகிவிட்டது. பரப்பரப்பு செய்திகளுக்கே முதலிடம், அதை மீண்டும் மீண்டும் போட்டுக்காண்பிப்பதும் தற்போது நிலவும் நிலை. 

இருப்பினும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. டிவி ஒரு மதச்சார்பற்ற நவீன, தாராளவாத, மக்களின் ஆதரவாக செயல்படும் ஒரு ஊடகம். இவர்கள் இனவாதத்தை என்றுமே ஆதரித்ததில்லை. குறிப்பிட்டோரின் வளர்ச்சியை மட்டுமெ ஊக்குவித்ததில்லை. பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்து, அவர்களுக்காக போர்கொடி எழுப்பி, வன்முறையை ஆதரிக்கும் கருத்துகளை எதிர்த்து செய்திகள் வெளியிட்டுள்ளது. ஒருமித்த கருத்துகள் இடதுசாரியின் பிரசங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வலதுசாரியின் கருத்துக்கள் மேலோங்கி இருப்பதை காணமுடிகிறது.  

வலதுசாரியாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய ஜனநாயக நாடுகள் வலதுசாரி ஆதரவாளர்களாக இருந்துள்ளனர், ஆனால் இந்தியாவிற்கு இது புதிது. வலதுசாரியின் கருத்துகள் இடதுசாரியை போல் தெளிவாக வடிவமைக்கப் பட்டதில்லை. ஆர்எஸ்எஸ்’ இன் கருத்துக்களை ஒட்டியே அவை இருக்கின்றன. இந்த பிரசங்கம் மதச்சார்பின்மையை கேள்விக்குறி ஆக்குகிறது. காரணத்தை குறிப்பிடமால் உணர்ச்சிகளின் அடிப்படையில் இயங்குகிறது. தேசியவாதம் அவர்களின் கோட்பாடாக உள்ளது. எதிர் கருத்து தெரிவிப்போர் தேசத்துரோகி என்று வரையறுக்கப்படுகின்றனர். வெளிப்படையான விவாதங்களை தடுப்பதோடு, தனிப்பட்ட கருத்துக்களை ஒடுக்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகள் தங்கள் செய்தி விவாதங்கள் மூலம் தேசத்தின் மீதான தங்களின் அன்பை காண்பிக்க போராடி வருகின்றனர். 

ஆனால் இதையெல்லாம் விட பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. பெரும்பான்மை மக்களை ஆதரித்து, சிறுபான்மை மக்களின் கருத்துக்கள் படுகொலை செய்யப்படுகிறது. பன்முக சமூக அமைப்பை கொண்டுள்ள இந்தியா போன்ற நாடு இது போன்ற புதிய அழுத்தங்களை கொண்டு நீடித்தால் அது விபரீத முடிவில் கொண்டு முடியும். அரசின் கருத்துக்கள் மட்டுமே சரி என்று எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர் இடங்களில் உள்ளவர்களும் அதற்கு ஒத்துப்போகவேண்டிய சூழலில் உள்ளனர். ஒரு சமயத்தில் பிரதமர் அவர்கள் கூட இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. முன்பெல்லாம ஒரு அமைச்சரைப் பற்றி கடுமையான கருத்தை ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துவிட்டு அடுத்த நாள் சாதரணமாக பணிக்கு செல்ல முடிந்தது. ஆனால் தற்போது உள்ள சூழலில் ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு செய்தால் பல நெருக்கடிக்களுக்கு உட்படுத்தப்பட்டு பணிநீக்கம் அளவிற்கு செல்கிறது. தற்போது எல்லாரும் அச்சத்தில் வாழ்கின்றனர். இது மெல்ல வேலை செய்யும் விஷம் போல, ஜனநாயகம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை கொல்லப் புறப்பட்டிருக்கும் அபாயம். 

பத்திரிகைத்துறைக்கு ஆபத்து என்று நான் சொல்லமாட்டேன். டிவி நிலையங்கள் இது போன்ற புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளனர். இது தெரிந்தே உருவாக்கப்பட்ட ஒன்று. அடிப்படை உரிமையை எதிர்த்து உள்ளது. செய்தி ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் தங்களின் வேலையை காப்பாற்றிக் கொள்ளவும், வருமானத்தை பெருக்குவதற்காகவும், பத்திரிகைத்துறையின் தார்மீக மதிப்புகளை குறைத்து கொண்டு அதிகாரத்திற்கு அடிபணிந்து போவதை வெளிப்படையாக காட்டுகிறது. நல்லவேளையாக நாளிதழ்கள் இதற்கு பலியாகவில்லை. டிஜிட்டல் பத்திரிகைத்துறை வலுப்பெற்று வருகிறது. தொலைக்காட்சி மிகவும் வலிமையானது, ஆனால் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. பத்திரிகைத்துறையின் அடித்தளமே அதன் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை. டிவியில் அதன் வாய்ப்பு குறைந்துவருகிறது. சில செய்தி தளங்கள் பயமின்றி உண்மையை வெளி உலகிற்கு சொல்லிவருகின்றனர். அவர்கள் புதிய எல்லையை நிர்ணயித்துள்ளனர். வருங்காலம் அங்கேதான் உள்ளது. இதை டிவி விவாத நெறியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் முதலாளிகளும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதை நினைவில் கொள்ளவேண்டும்,- 

“ஜனநாயகம் 51, 49 என்ற எண்களின் விளையாட்டு அல்ல. அது ஒரு உண்மையான அமைப்பு. விவாதங்களுக்காக வார்த்தைகளை துஷ்பிரயோகப்படுத்தும் சாதராண இடமல்ல நமது பாராளுமன்றம். சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாகும். ஆனால் ஜனநாயகத்தை வெறும் ஒரு அமைப்பாக மட்டும் கருதி சில சடங்குகளை செய்வது அதன் உண்மைதன்மையை இழந்து, பிரச்சனைக்குரியதாக மாற்றிவிடும். அவ்வாறு நடக்காமல் தடுப்பது நம் எல்லாருடைய கடமையாகும்,” என்றார்.  

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

முந்தைய கட்டுரைகள்:

’மகாத்மா’ பற்றி நான் எழுதிய பத்தி: சர்ச்சையும், விளக்கமும்!

ஊழலுக்கு எதிரான மக்கள் புரட்சி தேவை!