கற்றுக்கொள்ள விரும்ப வேண்டும், கற்றலை விருப்பமாக்க வேண்டும்: பைஜூ ரவீந்திரன்

0

சனிக்கிழமை, அக்டோபர் 31 ஆம் தேதியன்று டெக்ஸ்பார்க்ஸில் வீடியோ ஒன்றுடன் பைஜூ தனது உரையைத் தொடங்கினார். அந்த வீடியோ, பைஜூ கற்றல் மையத்தின் திட்டங்களை காட்சியின் மூலம் எப்படி கற்பிப்பது என்பதை விளக்குவதாக இருந்தது. தற்போது கல்வியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தார்.

இந்தியாவில் நடப்பு கல்வி முறையில் அவர் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்சனைகள் பின் வருமாறு:

• பல கோணங்களில் மாணவர்களை சிந்திக்க தூண்ட இது போதுமானதாக இல்லை. கல்வித்துவக்கம் என்பது சிறந்த உள்ளடக்கத்தை கொண்டதாக இருக்கவேண்டும்.

• மாணவர்களுக்கு என்று தனிப்பட்ட கவனம் தரப்படுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது.

• சிறந்த ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளார்கள். கற்பிக்கும் தொழிலை பெரும்பாலனவர்கள் விரும்பி ஏற்கவில்லை.

• கற்பித்தல் தொடர்பான விழயங்கள் காலத்திற்கு ஏற்ப இல்லை. எனவே அவை தவறான அளவீடுகளையே காட்டுகின்றன.

"கற்றல் எனும் ஆற்றலை உங்களுக்கானதாக மாற்றுகிறோம். இதனால் தான் நாங்கள் கற்றல் தொடர்பான படக்காட்சிகளை இந்தியாவிற்கும், விரைவில் உலகளவிலும் எடுக்கவுள்ளோம்” என்கிறார் பைஜூ.

முதன்மை மாணவர்களுக்காக கட்டமைக்க கூடாது

ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும் மாணவர்களை பைஜூ வகைப்படுத்துகிறார்: கருத்துக்களை படிப்பவர், காட்சிகளின் ஊடாக கற்றுக்கொள்பவர், மனப்பாடம் செய்யும் மாணவன் இப்படி பல வகையில் இருப்பதால்தான் தனிக்கவனம் அவசியாமாகிறது என்கிறார் அவர்.

"தற்போது பள்ளி வகுப்பறைகள் வெறும் 2 சதவீத முதன்மை மாணவர்களை மையப்படுத்தியே நடத்தப்படுகின்றன. மற்ற மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் உதவாது” என்று சொல்லும் பைஜூ, மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கல்விக்கான ஸ்டார்ட்அப்கள் கட்டமைக்கப்படவேண்டும் என்கிறார்.

ஆர்வத்தைத் தூண்டவேண்டும்

“நாம் நான்கு வயதில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டோம். ஆனால், அதற்குப்பிறகு அந்த நிலை மாறி நாம் ஒரே கோணத்தில் யோசிக்க நமது கல்வி முறையே காரணம். மாணவர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும். எந்த ஒரு கடினமான விஷயத்தையும் காட்சி மற்றும் கருத்தினூடாக எளிதில் மாணவர்களுக்கு புரியவைக்க ஸ்டார்ட்அப்களால் முடியும். அந்த நிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு கற்றல் எளிமையானதாகிவிடும்” என்கிறார் பைஜூ.

150 பேர்கொண்ட தயாரிப்பு குழுவைக் கொண்டு கேளிக்கையான வீடியோக்கள் மூலம் பல்வேறு பாடத்திட்டங்களை தயாரித்து வருகிறது பைஜூ நிறுவனம். அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வேதேச அளவில் 3 லட்சம் மாணவர்களுக்கு இதன் மூலம் கற்றுத்தர திட்டமிட்டுள்ளனர்.

புரட்சி மலர வேண்டும்

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் இந்தியர்கள் சேர்க்கை வெறும் 0.3 சதவீதம், இந்த எண்ணிக்கையை மாற்ற மாணவர்கள் எப்படி படிக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் பைஜூ.

உலகில் உள்ள எல்லா திறமையும் மிக சக்திவாய்ந்ததாக இருப்பதில்லை, அதற்கான நேரம் வரும்வரை என்ற விக்டர் ஹுகோவின் கருத்து ஒன்றுடன் தனது உரையை முடிக்கிறார் பைஜூ.