விவசாய தொழில்முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் முதலீடு பெற ஓர் அரிய வாய்ப்பு!

'வில்க்ரோ' அறிவித்துள்ள புதிய திட்டம்!

2

விவசாய தொழில்முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

சமூக தொழில்முனைவு நிறுவனங்களை ஊக்குவிக்கும் 'வில்க்ரோ', முதன் முறையாக, 3 அடைக்காக்கும் அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து விவசாய தொழில்முனைவு நிறுவனங்களுக்கு உதவ முன் வந்துள்ளதுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் விவசாய தொழில்முனை நிறுவனங்கள், நிலையான வளர்ச்சி பெற தேவையான ஆலோசனை, ஆதரவு மற்றும் நிதியை வழங்க முடிவெடுத்துள்ளதாக வில்க்ரோ தெரிவித்துள்ளது. 

'வில்க்ரோ', 'Artha Venture Challenge' மற்றும் 'a-IDEA, NAARM-TBI' ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கக்கூடிய விவசாய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதற்குத் தேவையான வழிகாட்டுதலையும், முதலீடையும் செய்ய உள்ளது. விவசாயத்துறையில், சிறு-குறு விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். 

விவசாயத்துறையில் உள்ள தொழில்முனைவோர்கள்; விரிவடைந்த பிணையம், தொழில் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்று தங்கள் தயாரிப்பை சிறந்த முறையில் பரிசோதிக்க இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் இருந்து, 10 விவசாய தொழில்முனைவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று ஆண்டுகள் வரை அடைகாத்து 8 கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்யப்போவதாக வில்க்ரோ அறிவித்துள்ளது.  

இதற்கு தகுதி பெற விவசாயத்துறையில் என்ன மாதிரி பணிகள் செய்ய வேண்டும்?

* நீர் பாசன மேம்பாட்டிற்குத் தேவையான மலிவான தொழில்நுட்ப உருவாக்கத்தில் பணிபுரிந்து, அதே முறையை இந்தியா முழுதும் சுமார் 140 மில்லியன் ஹெக்டர் பரப்பளவின் உபயோகிக்கும் விதம் இருத்தல் வேண்டும். 

* பண்ணை மற்றும் விளைநிலங்களில் இயந்திரங்கள் கொண்டு செயல்படும் முறையை பயன்படுத்தி, அறுவடைக்கு பின் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் விதம் இருத்தல் வேண்டும்.

* துல்லியமான விவசாய தொழில்நுட்ப முறைகள்- அதாவது சரியான அளவு நீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் முறைகள் மூலம் சிறு விவசாய நிலங்கள் பயன்பெறவேண்டும். 

விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான தகுதிகள் என்ன? 

* லாபத்துடன் இயங்கும் நிறுவனத்தை நடத்தும் நிறுவனர்

* உங்கள் கண்டுபிடிப்பு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவவேண்டும்

* ஒரு சில இடங்களில் இதன் கண்டுபிடிப்பின் மாதிரி செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்

* உங்கள் நிறுவனம் லாபம் ஈட்ட தொடங்கி இருக்க வேண்டும் 

உங்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன? 

ரூ.60 லட்சம் அல்லது அதற்கும் மேல் இணையான பங்கு முதலீடு

* விவசாய தொழில் வல்லுனர்களின் சிறந்த வழிகாட்டுதல்

* துறை மேலாளர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவு

* பிணையம் ஏற்படுத்தல் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பு

வில்க்ரோ' வின் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில்முனைவோர் இங்கே க்ளிக் செய்யுங்கள்