பிராந்திய மொழி செய்திகளை சுருக்கமாக வழங்கும் 'வேடுநியூஸ்'

0

இணையம் வருவதற்கு முன்பெல்லாம் செய்திகளுக்காக மக்கள் வானொலியையும், செய்தித்தாள்களையுமே நம்பி இருந்தார்கள். இணையம் வளர்ந்த பிறகு செய்திகளே எல்லோரையும் ஆக்கிரமிக்கத்து வங்கி இருக்கிறது. எக்சலாகாம்(Excelacom) இன் ஆய்வுப்படி ஒரு நிமிடத்திற்கு 320 புதிய ட்விட்டர் கணக்குகள் துவங்கப்படுகின்றன. தோராயமாக 5,47,000 ட்வீட்டுகள் பகிரப்படுகின்றன. வைன் தளத்தில் 8,433 பகிர்தல்களும், 1.03 மில்லியன் வீடியோக்கள் உலாவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மக்களின் தேவைகளுக்காக, பல தளங்கள் இது போல செயல்படுவதால் மக்கள் தங்களை சுற்றியும், உலகின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது. சிலர் ஒரு தகவலை பதிவேற்ற, மற்றவர்கள் அதை பகிர்கிறார்கள். 'வேடுநியூஸ்' (Way2News) இவை இரண்டையுமே வழங்குகிறது.

வேடுநியூஸ் என்பது என்ன?

வேடுநியூஸ் என்பது கைபேசியில் இயங்கக்கூடிய செயலி ஆகும். இது பல்வேறு இந்திய மொழிகளில் செய்தி தளங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகளை பத்திரிக்கை போன்ற தோற்றத்தில் சுருக்கமாக வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி காரணமாக இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் அந்தந்த மொழிகளுக்கான செய்திதேவையை பூர்த்திசெய்யும் விதத்தில் குழுவாக செயல்படுகிறார்கள்.

வேடுஆன்லைன் என்ற நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகிறது இது. ஏற்கனவே வேடுஎஸ்எம்எஸ் என்ற தளம் இவர்களின் ஒரு பகுதியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. ராஜு வனபலா என்ற முதல் தலைமுறை தொழில்முனைவரால் 2006ல் உருவாக்கப்பட்டது தான் வேடுஎஸ்எம்எஸ். இது சமீபத்தில் நாற்பது மில்லியன் பயனாளர்களை எட்டியிருக்கிறது. இதன் நிறுவனர் விஜயவாடாவில் உள்ள சிறு விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லேர்ன்சோசியல் (Learn Social) எனப்படும் இணையத்தில் கல்வி சார்ந்த தளத்தின் நிறுவனராகவும் ராஜு இருக்கிறார். இவர் தன் திறமைகளை பயன்படுத்தி நிறுவனத்தை சிறப்பாக நிர்வகித்தும், அடுத்தகட்டத்திற்கான திட்டத்தை வகுத்தும் வருகிறார். "இந்தியாவின் வளர்ச்சிக்கான கதை”யை உறுவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது தான் இலக்கு என்கிறார் இவர்.

”உலகின் இரண்டாவது பெரிய இணைய சந்தையாக இந்தியா இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக கிராமப்புறவாசிகள், வயதானவர்கள், என்று வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இன்று இருக்கக்கூடியதை விட சிறப்பான ஒன்றாக மாறும். இந்த பகுதி பார்ப்பதற்கும், கேட்பதற்கும், செய்திகளின் மீதான விவாதத்திற்கும், சமகால செய்திகளுக்கும், குறிப்பாக இவையெல்லாம் அந்ததந்த மாநிலங்களின் மொழியில் இருக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்கிறார் ராஜு.

இது எப்படி இயங்குகிறது?

வேடுநியூஸில், 30 பேர் கொண்ட குழு ஒன்று இதற்காகவே இயங்குகிறார்கள். இவர்களில் 19 பேர் எழுதுபவர்கள், மீதமுள்ளோர் மொபைல் செயலி வடிவமைப்பிலும், நிர்வாகத்திலும் இயங்குகிறார்கள். ஆரம்பத்தில் ஒரு அல்காரிதம் மூலமாக செய்திகள் தானே நிர்வகிக்கப்படுவது போல திட்டமிட்டது இந்த குழு, ஆனால் மனித ஆற்றலை பயன்படுத்தி செய்வதே சிறந்தது என்ற முடிவே இறுதியானது.

எங்களின் எழுத்தாளர்கள் பல்வேறு செய்தி தாள்களிலிருந்தும், தொலைக்காட்சி செய்திசேனல்களிலிருந்தும், இணையதளங்கள், வலைப்பதிவுகள் மூலமாகவும் செய்தி திரட்டி சுருக்கமாக 400 எழுத்துகளுக்குட்பட்டதாக எழுதுகிறார்கள். மக்கள் நீண்ட நேரம் செலவிடாத வகையில், உலகின் எல்லா செய்திகளையும் உடனுக்குடன் படிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இந்த குழு சுமார் ஐந்தாயிரம் பேரிடம் இந்த செயலியை பயன்படுத்தசொல்லி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னரே இந்த செயலி வெளியிடப்பட்டிருக்கிறது. 400 எழுத்துகளோடு, போட்டோ மற்றும் வீடியோ என தேவையானவற்றை இணைத்திருப்பது இதன் சிறப்பம்சம். செய்திகளின் தலைப்பை கொண்டு, முழு செய்தியை தேடி படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2G,3G, வைஃபை போன்றவற்றின் வேகத்திற்கு ஏற்ப தானியங்கள் செய்து கொள்ளும் வகையில் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்துறையின் எதிர்காலம்

குறைவான நீளம் கொண்ட காட்சிப்பதிவு அல்லது எழுத்துபதிவானது இயல்பாகவே லட்சக்கணக்காணோரை எளிதில் அடையக்கூடிய தன்மை கொண்டது. அதனால் தான் ட்விட்டர், வைன், ஸ்னாப்சாட் போன்ற தளங்கள் மிக வேகமாக பிரபலமடைந்தன. சிர்கா (Circa) உலகம் முழுவதும் பிரபலமடைந்தது 5.7 மில்லியன் டாலர் வருமானம் இதன் மூலம் பெற்றிருக்கிறார்கள். தங்கள் சேவையை மேம்படுத்த காலவரையற்ற இடைவெளி தேவைப்படுவதாக அறிவித்து தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்துவிட்டனர்.

இந்தியாவை பொறுத்தவரை நியூஸ் இன் ஷார்ட்ஸ், குறுகிய செய்திகள் துறையில் மிகமுக்கிய பங்காற்றுகிறார்கள். இவர்கள் டைகர் க்ளோபல் மூலமாக, இருபது மில்லியன் டாலர் திரட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2015ஆம் ஆண்டு இன்ஷார்ட்ஸ் என தங்கள் நிறுவனப்பெயரை மாற்றிக்கொண்டார்கள். வெறும் செய்திகள் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்ற துறை சார்ந்த தகவல்களையும் தரவே இந்த பெயர் மாற்றம் என தெரிவித்திருந்தார்கள். க்ரக்ஸ்டர் (Cruxtor)என்ற தளம் காலவரிசை தோற்றத்தில் செய்தி வழங்கக்கூடியது. ஆசம்லி (Awesummly) தன்னிச்சையாக இயங்கக்கூடிய வகையில் செய்தி சுருக்கத்தை வழங்குகிறது.

இந்தியாவை பொறுத்தவரை நியூஸ்ஹண்ட்(NewsHunt) என்ற தளம் நீண்டகாலமாக இந்த துறையில் இருக்கிறார்கள். இவர்கள் புத்தகங்கள், செய்திகள் மூலமாக கடந்த ஆண்டு, நூறுகோடியும், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை 250 கோடியும் வருமானமாக பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மாநிலமொழி சார்ந்த தகவல்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இப்போதைக்கு நான்கைந்து பேரே இதில் தீவிரமாக இயங்குகிறார்கள். கூகிள் ப்ளேஸ்டோரில் நியூஸ் சார்ந்த செயலி தேடலில் தாய்மொழியில் செய்தி செயலிகளே முதல் பத்து இடத்தை வகிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிலை இல்லை.

சந்தைப்படுத்துதல்

வேடுநியூஸ், தன் சகோதர நிறுவனமான வேடுஎஸ்எம்எஸ் தளத்தில் குறுக்கு விளம்பரம் செய்வதன் மூலமாக இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களில் பிரபலமடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டே வாடிக்கையாளர்களை சென்றடைய பெரிய செலவு ஆகாது என ராஜு கருதுகிறார். அது மட்டுமல்லாமல் சில வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அவர்களின் மாநில மொழி செய்திகள் பரவலாக வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்பது மற்றொரு முக்கிய அம்சம்

எதிர்கால திட்டம்

வேடுநியூஸ் இரண்டு மூன்று பில்லியன் பார்வையாளர்கள் என்ற இலக்கை அடைந்திருந்தாலும் இதுவரை வருவாய் சார்ந்து இயங்கத்துவங்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் மற்ற தடத்தின் மூலமாக வருவாய் பெறும் திட்டம் இருக்கிறது. இவர்களின் முக்கிய நோக்கம் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய செய்திகளை மற்ற மொழிகளில் கிடைக்கச்செய்வதே.

இன்னும் சில வாரங்களில் ஐஓஎஸ் செயலியை வெளியிட இருக்கிறார்கள்.இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பார்வையாளர்களை சென்றடைய முடியும் என நம்புகிறார்கள். நிறைய செய்திகளை பல மொழிகளில் தர வேண்டும் என்பதே இப்போதை இலக்கு என்கிறார்கள்.

இது பற்றி வேடுநியூஸின் தலைமை செய்தி ஆசிரியர் சுனில் பாட்டில் பேசும்போது “உள்ளடக்கம் தான் முக்கியமான சாவி, யாரும் சொல்லாமலே எல்லோரையும் சென்றடையக்கூடியது. இப்போதைக்கு ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் சேவை வழங்குகிறோம். இன்னும் 45 தினங்களில் மற்ற 8 மொழிகளை இணைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இணையதள முகவரி: http://way2news.co/