ஃபின் டெக், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கான ‘ஃபின் தன்’ திட்டம்! 

டிவிஎஸ் கிரெடிட்- ஸோன் ஸ்டார்ட் அப் இணைந்து அறிமுகம்!

0

புதுமையான சேவகளை உருவாக்குவதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு பரவலாக உணரப்பட்டுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஸ்டாட்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த வகையில் தற்போது, தமிழகத்தின் முன்னணி நிதிச்சேவை நிறுவனமான டிவிஎஸ் கிரெடிட் நிறுவனம், ஸ்டார்ட் அப் ஆக்சிலரேட்டர் நிறுவனமான ஸோன் ஸ்டார்ட் அப்ஸ் இந்தியா நிறுவனத்துடன், ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்கான ’ஃபின் தன்’ 'FinDhan' திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

ஃபின் டெக் மற்றும் நிறுவன தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கான ஒரு ஆண்டு திட்டமாக இது அமையும். இந்த திட்டத்தின் கீழ், டிவிஎஸ் கிரெடிட் நிறுவனம், நிதிச்சேவை, அண்டர் ரைட்டிங், வாடிக்கையாளர்/டீலர் நிர்வாகம், புதிய தயாரிப்பு மேம்பாட்டு, செயல்பாடுகள் மற்றும் ரோபோ செயல்முறை தானியங்கி ஆகிய துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் டிவிஎஸ் கிரெடிட் நிறுவனம் இணைந்து செயல்படும்.

இதன் மூலம் கண்டறியப்படும் பொருத்தமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்துடன் முன்னோட்ட திட்டத்தில் செயல்படும் வாய்ப்பை பெறும். மேலும் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட் அப்கள் டிவிஎஸ் கிரெட்டின் வர்த்தக புரிதல் மற்றும் தரவுகளை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறும்.
முன்னோட்ட முயற்சியில் வெற்றி பெறும் ஸ்டார்ட் அப்கள் நிறுவனத்துடன் வர்த்தக நோக்கிலான ஒப்பந்தம் செய்து கொள்ளும் வாய்ப்பையும் பெறும். வர்த்தக தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் வர்த்தக புரிதலை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், இந்த திட்டம் ஸ்டார்ட் அப்களுக்கு பயன் மிக்கதாக அமையும்.

டிவிஎஸ் கிரெடிட் நிதிச்சேவையில் முன்னணியில் விளங்குவது போல, ஸோன் ஸ்டார்ட் அப்ஸ், வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் மாதிரியில் சிறந்து விளங்குகிறது. நிறுவனம் இந்த திட்டத்தை, அலுவலக நேர செயல்பாடு, டெமோ தினங்கள், தொழில்துறை இரவுகள், புதுமை சவால்கள், ஹேக்கத்தான்கள் போன்றவை மூலம் செயல்படுத்தும். இதன் மூலம் ஃபின் டெக் , ஸ்டார்ட் அப் சூழல் மற்றும் டிவிஎஸ் கிரெடிட் இணைந்து செயல்படும் வாய்ப்பு உண்டாகும்.

’ஃபின் தன் திட்டம்’, நிதிச்சேவை துறையில் செயல்பட்டு வரும் ஃபின் டெக் மற்றும் இதர வளர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மகத்தான வாய்ப்பாகும். இந்நிறுவனங்கள் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் கிரெட்டுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை பெறும். இதை ஹைபிரிட் மாதிரி ஆக்சலரேட்டர் திட்டம் எனலாம். இது, டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டு காலத்தில் பல அடுக்கு தொடர்பினை ஸ்டார்ட் அப் சூழலில் உண்டாக்கும். நீண்ட நெடிய திட்டமிடலுக்கு பின் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் கிரெட்டி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆலோசனை இதற்கு உதவியுள்ளது. முன்னணி நிறுவனத்துடன் இத்தகைய ஒப்பந்தத்திற்கான வாய்ப்பை பெறுவது சிறந்த விஷயம்,” என்று இந்த திட்டம் பற்றி ஸோன் ஸ்டார்ட் அப்ஸ் இயக்குனர் அஜய் ராமசுப்பிரமணியன் கூறினார்.

“அடுத்த 12 மாதங்களில் இந்த திட்டத்தில் 40 முதல் 50 ஸ்டார்ட் அப்கள் இணையும் என எதிர்பார்க்கிறோம். இவற்றில் எத்தனை நிறுவனங்களால் டிவிஎஸ் கிரெட்டிடுடன் இணைந்து பயன்பெற முடியும் என பார்க்க வேண்டும். முன்னணி நிறுவனத்தின் வர்த்தக புரிதலை வளர் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஊக்கத்துடன் பயன்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த ஸ்டார்ட் அப் ஊக்கத் திட்டம் மூலம் டிவிஎஸ் கிரெடிட் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. மேலும், வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சி முழுவதும் மேம்பட்ட வாடிக்கையாளர் திருப்தியை அளிப்பது, வாடிக்கையாளர் சித்திரம் மூலம் பூர்த்தி செய்யப்பட்டாத பிரிவுகளில் தேவைகளை நிறைவேறுவது , வழக்கமான செயல்பாடுகளை தானியங்கி மையம் ஆக்குவது மற்றும் புதிய சேவைகளை உருவாக்குவது ஆகியவற்றை நிறைவேற்றிக்கொள்ள நிறுவனம் விரும்புகிறது.

"நிதிச்சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. மேலும் புதிய தொழில்நுட்ப பயன்பாடு என்பது எல்லா துறைகளிலும், எல்லா பகுதிகளிலும், மொழிகளும், சமூக அடுக்குகளிலும் இருக்கிறது. எனவே நிதிச்சேவைகளில் முன்னிலை இடத்தை அடைய, எங்களின் தொழில்நுட்ப முயற்சிகள் மற்ற நிறுவனங்களை விட ஒரு படி முன்னே இருக்க வேண்டும் என உணர்கிறோம். எங்கள் வர்த்தக சவால்களுக்கு சரியான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதில் உதவ ஸோன் ஸ்டார்ட் அப்ஸ் சிறந்த பங்குதாராராகும். புதிய எண்ணங்கள் மற்றும் புதுமையுடன் இணைந்த நீண்ட உறவை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று டிவிஎஸ் கிரெடிட் தலைமை செயல் அதிகாரி ஜி. வெங்கட்ராமன் கூறினார்.

தங்கள் துறையில் முன்னணியில் இருக்கும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த திட்டம், இதில் இணையும் ஸ்டார்ட் அப்களுக்கு மகத்தான வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்திற்கும் இது முன்னோட்ட முயற்சிகள் மூலம் வர்த்தக வாய்ப்புகளை கண்டறியவும் உதவுயாக அமையும்.

Related Stories

Stories by cyber simman