சென்னையில் தொலைந்து, 3 மாதத்திற்கு பிறகு ஜெர்மன் தம்பதியர்களுடன் இணைந்த செல்லப் பிராணி 'லுயுக்'

0

செல்லப் பிராணிகள் திருடு போனது, தொலைந்து போனது என முகநூலில் பல பதிவுகளை நாம் பார்க்கிறோம். வெளிநாட்டு செல்லப் பிராணிகளை வியாபாரம் ஆக்கி அதை கடைகளில் விற்கின்றனர். ஒரு பெரிய தொகையை கொடுத்து அதை வாங்கி வீட்டில் தங்கள் பிள்ளைகள் போல் வளர்க்கின்றனர் சிலர். ஆனால் இதிலும் மனிதாபம் இல்லாமல் அதை திருடி வேறிடத்தில் விற்று காசு பார்ககின்றனர் சில கும்பல்.

அந்த வகையில் ஜெர்மனியில் இருந்து தங்கள் செல்லப் பிராணியுடன் சென்னைக்கு வந்த ஜானின் மற்றும் ஸ்டீபன் தம்பதியரின் செல்ல நாயான ’லுயுக்’ காணமல் போனது. 3 மாத கடின தேடலுக்குப் பிறகு லுயுக் இன்று தன் குடும்பத்துடன் இணைந்துவிட்டது.

ஜானின் மற்றும் ஸ்டீபன் தம்பதியர் தங்கள் செல்ல நாயுடன் 2016-ல் இருந்து பயணம் செய்து பல இடங்களை சுற்றிப்பார்த்து வந்தனர். அதேப் போல் ஜூலை 8 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் தங்கள் கார் பக்கத்தில் லுயுக்கை கட்டி போட்டு சென்றபோது யாரோ ஒருவர் அவர்களின் நாயை திருடி விட்டனர்.

கடந்த வருடம் கிரீஸ் சென்றப்போது ரோடில் இருந்த இந்த நாயை தத்து எடுத்து வளர்த்துள்ளனர். அவனைக் காணாமல் மன உளைச்சல் அடைந்த தம்பதியர்கள் WhatsApp பிரச்சாரத்தை தொடங்கினர், ப்ளூ கிராஸ் மற்றும் மெரீனா காவல் நிலையத்தில் ஒரு புகாரும் செய்தனர்.

அதன் பின் சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் விலங்கு நல ஆர்வலரான விஜயாவை சந்தித்து, அவரது உதவியில் லுயுக்கை தீவரமாக தேடியுள்ளனர். அவர்களின் செல்லப்பிராணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் சன்மானம் வழங்குவதாக நோட்டீஸ் அடித்தனர்.

ஜானின் தன் முகநூல் பக்கத்தில்,

“நாங்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனால் நாங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தெரிந்து பணம் வசூலிக்க திருடி இருந்தால் கொடுத்து விடுவார்கள் என எண்ணியே எங்கள் தகுதிக்கு மீறிய சன்மானத்தை வழங்குகிறோம்,” என தெரிவித்திருந்தார்.

லுயுக்கை காணவில்லை என்று 15,000 போஸ்டர்கள், 6,000 நோட்டிஸ், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரம் என பல அளித்த பிறகே இந்த சன்மான தொகையை அறிவித்தனர்.

விஜயா; லுயுகை தேடி பல இடம் அலைந்து, பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் நோட்டிசை அளித்துள்ளார்.

இவ்வளவு தேடலுக்கு பிறகு, கடந்த சனிக்கிழமை அன்று விஜயாவிற்கு ஒரு அழைப்பு வந்தது, லுயுக் தன்னுடன் இருப்பதாக ஒருவர் கூற, லுயுகின் புகைப்படத்தை போனில் பார்த்த பின்பு அவனை திருவான்மையூரில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனைக்கு வரவழைத்து  பார்த்து அது லுயுக் தான் என உறுதிப்படுத்தினார்.

விஜயாவின் அயராத உழைப்பினால், அவர் அளித்த நோட்டிசை பார்த்து சென்னையில் வசித்த ஒரு தம்பதியனர் லுயுக் தங்களிடம் இருந்ததை கூறி திருப்பி அளித்துள்ளனர்.

லுயுக் கிடைத்த தகவல் கிடைத்ததும் நேபாளில் இருந்த ஜானின் மற்றும் ஸ்டீபன் நேற்று வந்து தங்கள் செல்ல பிராணியுடன் இணைந்தனர். தன்ன்னை வளர்த்தவர்களை கண்ட லுயுக் அழுது அவர்களை கொஞ்சித் தழுவியது. நெகிழ வைக்கும் வீடியோவை பாருங்கள்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin