நிறுவனத்தின் குரலாக அமையும் மார்க்கெடிங் குழுவை ஊக்குவிக்கும் வழிகள்

0

மார்க்கெடிங் மிகவும் அழுத்தம் நிறைந்த ஒரு வேலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களை ஒரு பிராண்ட் மீது பார்வையை திருப்ப செய்வது, விற்பனை போன்ற பல இதில் அடங்கும்.

மார்க்கெடிங் செய்பவர் ஒரு பிராண்டை ஆக்கவும், அழிக்கவும் முடியும். பிரச்சாரம், முதலீட்டாளர்களை இணைப்பது என பல காரியங்களை மார்கெடிங் குழுவினர் செய்கின்றனர். முக்கியமாக மார்க்கெடிங் குழுவே பிராண்டை பிரதிபலிக்கின்றனர். எனவே அவர்களை உற்சாகமாக வைத்துகொள்வது வணிகத்திற்கு மிகவும் அவசியம்.

அதை நடைமுறைப் படுத்த சில வழிகள்:

மார்க்கெட்டிங் ஒரு நிறுவனத்தின் குரலாக அமைகிறது. சிறிய அல்லது பெரிய நிறுவனம் எதுவாயினும் தயாரிப்புகளை விற்க சந்தைப்படுத்துதல் அவசியம். அதற்கு நிர்வாக தலையீடு மிகவும் அவசியம், அதுவே மார்க்கெடிங் குழுவிற்கு ஒரு தெளிவான பார்வையை கொடுக்கும்.

தொடர்ந்து கற்றல் முறை புதிதாகவும் புத்துணர்வோடும் நம்மை வைத்திருக்கும்

மார்க்கெட்டிங் குழு எப்பொழுதும் பல புதுமையான சிந்தனைகளை கொண்டிருக்கும். தொழில்நுட்பத்தையும் தற்போதைய போக்கையும் விரைவில் கற்றுக்கொள்வார்கள். எனவே அவர்களின் கற்றல் முறையில் கவனம் செலுத்துவதில் அந்நிறுவனம் அக்கறை செலுத்த வேண்டும்.

மார்க்கெடிங் மற்றும் விளம்பரத் துறையில் முன்னணியில் இருப்பவர்களை அழைத்து நிறுவனம், மார்க்கெடிங் குழுவிற்கு பயற்சி முகாம் அளிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் அவசியம்.

ஆவணங்கள் மற்றும் செயல்முறைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்

ஆவணப்படுத்துதல், செயல்முறைகள், திட்டமிடுதல் அவர்களின் வேலைக்கு இடையூறாக இருக்கிறது என பல சந்தையாளர்கள் கூறுவதுண்டு. இவை இரண்டையும் சீர் செய்வது அவசியம்.

உங்கள் மார்க்கெடிங் குழு, ’அடுத்து என்ன’, இந்த பட்ஜெட் ஏற்றுக்கொள்ளப் படுமா?, ’எப்பொழுது விழாக்கால பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்? போன்ற கேள்விகளை அடிக்கடி கேட்டால் உங்கள் மார்கெடிங் குழவின் செயல்முறையை மறு பரிசிலினை செய்ய வேண்டும். ஏன் என்றால் அவர்கள் திட்டம் மற்றும் விநியோகத்திற்கு இடையில் உள்ள தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கலாம். ஆவணப்படுத்தப்பட்ட வரவு செலவு, திட்ட பணிப்பாய்வுகள் பல மாற்றங்களை கொண்டு வரலாம். இது உங்கள் மார்க்கெடிங் குழு விரைவில் வேலை செய்ய உதவும்.

உங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும் என்றால் அதற்கு முன் மார்க்கெடிங் குழு அதை நம்ப வேண்டும்

மேலே கூறியது போல் சந்தையாளர்களே ஒரு நிறுவனத்தின் குரலாக இருக்கின்றனர். அவர்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படவில்லை என்றால் நீங்கள் சொல்லும் கருத்து வாடிக்கையாளர்களை சென்று அடையாது.

மெயில் போன்ற தளம் ஊழியர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தாது, ஆனால் நேரில் சென்று கலந்துரையாடி, யோசனைகளை பகிர்ந்து, அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அதை சாத்தியப்படுத்தும். உங்கள் சிந்தனை, கருத்து, நிறுவனத்தின் குறிப்பு, சந்தைப் படுத்தும் நோக்கம் என அனைத்தையும் மார்கெடிங் குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுதே நீங்கள் எதிர் பார்க்கும் விளைவு ஏற்படும்.

அவர்களே வாடிக்கையாளர்களின் மனதை அறிந்தவர்கள், எனவே அவர்களை பேச விடுங்கள். முடிவு எடுக்கும் முன் அவர்கள் கருத்தை காது கொடுத்து கேளுங்கள். வெறும் விளம்பரதாரர்களாக மட்டும் அவர்களை பார்க்க வேண்டாம்.

குழுவை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்

ஒரு சிறந்த நேர்மையான குழுவை அமைக்க வேண்டும். நல்ல பிணைப்பு இல்லாத குழுவால் சிறந்த வெளியீடுகளை கொடுக்க முடியாது. ஒரு தலைவராக குழுவினர்கள் இடையே நட்புணர்வை வளர்க்க வேண்டும். விளையாட்டு, குழுவோடு உணவு உண்ணுதல் போன்றவற்றில் ஈடு பட வேண்டும். இது நிச்சயம் நல்ல வெளியீடுகளை தரும்.

முறையான ஊழியர்களை வேலையில் அமர்த்த வேண்டும்

இது அனைவருக்கும் தெரிந்த சாதாரண ஒன்றுதான். இருப்பினும் இதை பலர் நடைமுறை படுத்த தவற விடுகிறார்கள். எம்பிஏ மார்கெடிங் நிச்சயம் தேவை தான் என்றாலும் உங்கள் தயாரிப்புக்கு ஏற்ற ஊழியர்களை அமர்த்துவது மிகவும் அவசியம். சந்தையாளர்கள் எவரும் வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் இல்லை. எனவே ஒரு குழு முழுமை அடைய தேவையான சிறந்த ஊழியர்களை சேர்க்க வேண்டும்.

குழு மேலாண்மை என்பது கடினமான செயல் தான். இருந்தாலும் சிறந்த மார்க்கெடிங் குழுவை நீங்கள் உருதிப் படுத்திவிட்டால் அது உங்கள் பிராண்டை வளர்ச்சி அடைய செய்யும். 

ஆங்கில கட்டுரையாளர்: தமன்னா மிஷ்ரா