அட்டைகளைப் பயன்படுத்தி ஃபர்னிச்சர்கள் தயாரிக்கும் ’பேப்பர் ஷேப்பர்’

மும்பையைச் சேர்ந்த காருகேட்டட் கார்ட்போர்ட் தயாரிப்பு நிறுவனமான பேப்பர் ஷேப்பர் மரம் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபர்னிச்சர்களுக்கு மாற்றாக ஒரு நிலையான தீர்வை வழங்குகிறது. 

0

தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரை உள்ள ஃபர்னிச்சர்கள் அதாவது நாற்காலிகள், டேபிள், கட்டில், சேமிப்பு பாக்ஸ்கள் என சுற்றியுள்ள அனைத்தும் மரத்தினாலோ அல்லது மரம், ப்ளாஸ்டிக் மற்றும் மெட்டலின் கலவையிலோ உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஃபர்னிச்சர்கள் உற்பத்தி செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதிகரித்து வரும் இந்தத் தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை. மரங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் சீரழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மர ஃபர்னிச்சர்களுக்கு ப்ளாஸ்டிக் ஃபர்னிச்சர்கள் மாற்றாக பார்க்கப்பட்டாலும் இவை சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நமது தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலையான அதே சமயம் சூழலுக்கு உகந்த மாற்று தீர்விற்கான தேவை நிலவுகிறது.

மர ஃபர்னிச்சர்களின் தேவையை பூர்த்திசெய்யும் விதத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு பேப்பர் ஷேப்பரை உருவாக்கினார் மும்பையைச் சேர்ந்த ஹரிஷ் மேத்தா. இந்த ப்ராண்டின் கீழ் ஃபர்னிச்சர்கள் காருகேட்டட் கார்ட்போர்டினால் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. அவை சிறிதாக எளிதாக எடுத்துச்செல்லும் விதத்திலும், உறுதியாகவும், ஃபர்னிச்சரின் பாகங்களை எளிதில் ஒன்றிணைத்து வைக்கும் விதத்திலும், மறுசுழற்சிக்கு உகந்ததாகவும், மற்ற பொருட்களால் செய்யப்படும் ஃபர்னிச்சர்களின் விலையைக் காட்டிலும் குறைவாகவும் உள்ளது.

பட்டப்படிப்பை முடிக்காமல் புதுமையைப் படைத்தார்

64 வயதான ஹரிஷ் குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கள் பேக்கேஜிங் பிசினஸில் ஈடுபட்டிருந்தனர். இளம் வயதில் ஹரிஷிற்கு குடும்பத் தொழிலில் ஈடுபட்டு பணம் ஈட்டுவதில் விருப்பமில்லை. தனது தொழிற்சாலையில் அமர்ந்துகொண்டு கார்ட்போர்ட் ஷீட்களை வெவ்வேறு வடிவத்தில் வளைத்து கட்செய்து ஒன்றிணைப்பதே அவருக்குப் பிடித்திருந்து. கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். சுற்றியிருந்தவர்களால் தோல்வியுற்றவராகவே பார்க்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து ஒரு எண்ணம் மட்டும் எப்போதும் அவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அதில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு ‘பேப்பர் ஷேப்பர்’ உருவாக்கினார். ஒருவர் தன்னுடைய அதீத ஆர்வத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார் ஹரிஷ். மேலும் இவர் வழக்கமான விஷயங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு எதிரானவர்.

தொட்டில் முதல் சவப்பெட்டி வரை..

ஹரிஷ் வடிவமைத்த ஃபர்னிச்சர்கள் நகர வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக உள்ளது. நிலைத்தன்மை, குறைவான எடை, சிறியது மற்றும் நாகரிகமான தோற்றம்கொண்டது. பயன்படுத்தாத நேரத்தில் அகற்றிவிட்டு அதிக இடத்தை அடைக்காமல் எடுத்து வைத்துவிடலாம். தொட்டில், நாற்காலிகள், சேமிப்புப் பொருட்கள், ஆர்கனைசர்ஸ் என சவப்பெட்டி வரை பல்வேறு கார்ட்போர்ட் ஃபர்னிச்சர்களை உற்பத்தி செய்கிறார். ஒருவர் இறந்த பிறகும் சுற்றுக்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இந்த உலகை விட்டு செல்ல உதவுகிறது இந்த சவப்பெட்டிகள். ஏனெனில் மரப்பெட்டிகளைக் காட்டிலும் இந்தப் பெட்டிகள் வேகமாக சிதைந்துவிடும். அதே நேரம் கார்ட்போர்ட் ஃபர்னிச்சர்களை பயன்படுத்துவதால் மரங்கள் வெட்டப்படுவது குறையும்.

கிட்டத்தட்ட 25 வருடங்களாக இத்திட்டத்தில் ஈடுபட்டபோதும் 2017-ம் ஆண்டு மே மாதம் பேப்பர் ஷேப்பர் ப்ராண்டை ஆன்லைனில் வெளியிட தீர்மானித்தது புதிய அனுபவமாக இருந்தது. மளிகை ஸ்டோர்களில் காணப்படும் சேமிப்பு பாக்ஸ்கள் உறுதியற்றவை. ஆனால் காருகேட்டட் ஃபர்னிச்சர்கள் உறுதியாகவும் நிலைத்தன்மையுடனும் இருக்கும். இதை மக்கள் ஏற்றுக்கொண்டு சம்மதிக்க வைப்பது கடினமாக இருந்தது. கார்ட்போர்ட் ஃபர்னிச்சர் பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற பாக்ஸ்களைக் கொண்டு நாற்காலி போல அமைத்து அதில் மக்களை உட்காரச் செய்தேன்.” என்றார் ஹரிஷ் மேத்தா. 

பேப்பர் ஷேப்பர் சுய நிதியில் செயல்பட்டு வருகிறது. தயாரிப்புகளின் ஆரம்ப விலை 3,000 ரூபாய். ஃபர்னிச்சர்கள் உலகளவில் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் 30-40 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட விரும்புகிறது இந்நிறுவனம். கார்ட்போர்ட் ஃபர்னிச்சர்களை சந்தைப்படுத்த குழந்தைகளுக்கான ஃபர்னிச்சர்களை ஆன்லைனில் அறிமுகப்படுத்தினார் ஹரிஷ். சந்தையில் கிடைக்கும் மர ஃபர்னிச்சர்கள் பெரிதாகவும் கூரான முனைகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் கார்ட்போர்ட் ஃபர்னிச்சர்கள் லேசாகவும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். குழந்தைகள் தங்களது ஃபர்னிச்சர்களை தாங்களே ஒன்றிணைத்துக் கொள்ளலாம். இதனால் தங்களது உடமைகளை பத்திரமாக பராமரித்துக் கையாளும் உணர்வும் குழந்தைகளுக்கு ஏற்படும். மேலும் அவர்களது வசதிக்கு ஏற்றவாறு ஃபர்னிச்சர்களை நகர்த்திக்கொள்ளலாம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறிய கழிவறை பாக்ஸ்

நமது நாட்டில் கழிப்பறை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும்போது கழிவறையைப் பயன்படுத்தவேண்டிய சூழல் ஏற்படும்போது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. தெருவோரங்களில் இருக்கும் கழிவறைகள் துர்நாற்றத்துடனும் சுகாதாரமற்றும் காணப்படுகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக காருகேட்டட் கார்ட்போர்டைக் கொண்டு ஒரு சிறிய கழிவறையை உருவாக்கியுள்ளார் ஹரிஷ். இவை குறைவான எடையுடனும், சிறியதாகவும் எளிதாகப் பயன்படுத்தும் விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.

இந்தியாவில் நிலவும் கழிவறை பிரச்சனைக்கான தீர்வுதான் ‘லூ பாக்ஸ்’. நான் உருவாக்கிய மற்ற ஃபர்னிச்சர்களைப் போலவே இதுவும் காருகேட்டட் கார்ட்போர்டினாலானது. குறைவான எடை கொண்டது. இதை மடித்து எளிதாக எடுத்துச் செல்லலாம். இந்த கான்செப்டின் ஒவ்வொரு அம்சமும் சுற்றுச்சூழலை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கும் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் ஏற்றது.” என்றார் ஹரிஷ். 

அவரது புதுமையான வடிவமைப்புகள் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிகப்பெரிய ப்ராண்டுகளான கேம்லின், ஃபிலிப்ஸ், பஜாஜ், ரேய்மேண்ட், கினி அண்ட் ஜானி போன்றோர் இவரது க்ளையண்டுகள். மும்பையில் இந்நிறுவனம் பிரபலமாக உள்ளது. பேப்பர் ஷேப்பர் மூலம் மேலும் பரந்த சந்தையில் விரிவடைந்து செயல்பட விரும்புகிறார். அதிக புதுமையுடன்கூடிய பல வகையான பொருட்களை மக்களுக்கு வழங்கி நிலையான ஃபர்னிச்சர்களுக்கான தீர்வுகளை அளித்து உதவ விரும்புகிறார் ஹரிஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : ஆர் சரிதா

Related Stories

Stories by YS TEAM TAMIL