’ஜாக்ரிதி யாத்ரா’- மாற்றத்துக்கான பயணத்தில் சமூக தொழில்முனைவோர்கள்! 

0

பலரும் புத்தாண்டை வரவேற்க பலவிதங்களில் கொண்டாட்டங்களுக்காக திட்டமிட்டிருக்கும் வேளையில், 480 சமூக தொழில்முனைவோர்கள் வேறு விதமாக தங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் ‘ஜாக்ரிதி யாத்ரா’ வில் கலந்து கொண்டு கொண்டாடி வருகின்றனர். டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய இந்த ரயில் பயணம் ஜனவரி 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 15 நாள் ரயில் பயணத்தில் 8000 கிமி தூரம் பயணித்து, 12 இந்திய நகரங்களை கடக்க உள்ளனர். இதில் பயணிக்கும் ஒவ்வொரு தொழில்முனைவோரும் சமூக மாற்றத்துக்காக தங்களின் முயற்சியை எடுப்பதற்காக காத்திருக்கின்றனர். இடையில் டிசம்பர் 27 ஆம் தேதி பெங்களுருவை அடைந்த இக்குழுவினரை 65 உள்ளூர் சமூக தொழில்முனைவோர் சந்தித்தனர். அவர்கள் நடத்திய கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் விவாதங்களின் கலந்து கொண்டனர். 

சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடும் சில சமூக நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒரு சிலர் தங்களின் தயாரிப்பை, சேவையை காட்சிப்படுத்தி, மற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர். பாதுகாப்பான உணவுவகைகள், விவசாயம், மழைநீர் சேகரிப்பு, ஊரக கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, சூரிய ஒளி தீர்வுகள், மறுசுழற்சி தயாரிப்பு, இயற்கை சுற்றுளா, கூட்டு சமூக செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

Daily Dump, Ant Creations, Let's Endorse, Greenway Appliances, Buzz India, Keen Kite, Jivabhumi, Kamal Kisan, Green Duniya, Sankalpa, Aao Hostels, Green Path, Hand Over Heart, Vismaya, Graama Seva Sangha, Meghshala, Eco Soch, CardioTrack, Loop Reality, Krishi Naturals, Enable India, Ampere Technologies, Eco-Femme, Boondh Cup, EduSports, Digital Empowerment Foundation மற்றும் Kisan Raja போன்ற சமூக நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன. 

ஜாக்ரிதி யாத்ராவில் பயணிக்கும் சமூக தொழில்முனைவோர்கள், வரும் 2017 ஆம் ஆண்டில் புதிய சமூக மாற்றங்களை தங்கள் நிறுவனங்களின் மூலம் நிகழ்த்திட நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். கலந்து கொண்ட தொழில்முனைவோர்களின் படத்தொகுப்பு இதோ: 

கட்டுரை மற்றும் படத்தொகுப்பு: மதன்மோஹன் ராவ்