தொழில் புரிவதை எளிதாக்கும்  இணையதள வழி ஒற்றைச்சாளார தகவினை தமிழக அரசு அறிமுகம்!

1

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, தொழில் துறைக்கான இணையதள வழி ஒற்றைச்சாளார தகவினை-யை  (single window portal) நேற்று 2.11.17 தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். தொழில்துறை அமைச்சர், சிறு-குறு தொழில்துறை (MSME) அமைச்சர், துறையின் மூத்த அரசு அதிகாரிகள், CII, FICCI, MCCI, ASSOCHAM & TANSTIA அதிகாரிகள் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் எளிதாக தொழில் புரிவதை ஊக்குவிப்பதற்காக தொழில்துறை ஒரு ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர வலைதளத்தை உருவாக்கியுள்ளனர். தொழில் துவங்குவதற்கு முந்தைய நடவடிக்கைகளுக்கான அனுமதி மற்றும் புதுப்பித்தல்களை DTCP, TNPCB, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், லேபர் / DISH போன்ற 11 துறைகள் அல்லது ஏஜென்சிகளிடமிருந்து தொழில் துவங்குவோர் இந்த தளத்தில் விண்ணப்பித்து சுலபமாக பெறமுடியும்.

இந்த போர்டல் வாயிலாக மனித நேரடி தலையீடின்றி பல்வேறு துறைகளிலிருந்து 37 வகையான சேவைகளை முதலீட்டாளர்கள் பெறலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும், சட்டப்பூர்வமான கட்டணங்கள் (Statutory fees), SMS மற்றும் இ-மெயில் வாயிலாக விண்ணப்பங்களின் தற்போதைய நிலையை கண்காணித்தல் போன்ற வசதிகளை இந்த ஆன்லைன் தளம் வழங்குகிறது. விண்ணப்பதாரர் இறுதி ஒப்புதலையும் இந்த போர்டல் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் அவசரச்சட்டம் வாயிலாக Tamilnadu Business Facilitation Act/ Rules 2017 கொண்டுவந்தது. ஒவ்வொரு ஒப்புதலுக்கும் காலக்கெடுவை நிர்ணயித்தல், ஒரு சில அனுமதிகளுக்கு ஒப்புதலளித்ததாக கருதப்படுதல் போன்றவற்றின் மூலம் சிங்கிள் விண்டோ அமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒப்புதல்கள் காலகெடுவிற்குள் வழங்கப்படுவதை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டிக்கள் மூலம் குறை தீர்க்கும் வழிமுறைகளையும் இந்த அவசரச்சட்டம் வழங்குகிறது.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இணையதள முகவரி: https://easybusiness.tn.gov.in/