சென்னையில் நடைப்பெறும் சரக்கு சேவை வரி விழிப்புணர்வு முகாம்!

0

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர மேம்பாட்டு நிறுவனமும் சேவை வரித் துறையும் (மண்டலம் – 2) இணைந்து 'சரக்கு மற்றும் சேவை வரித்' (ஜி.எஸ்.டி) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிப்ரவரி 27 – ந் தேதி நடத்துகிறது. இந்நிகழ்ச்சி கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ. அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.

மத்திய அரசு வரும் நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை கொண்டுவந்ததை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி பிரத்யேகமாக குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. பதிவு மற்றும் அது தொடர்பான பிற நடைமுறைகள் குறித்து இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் தங்கள் பெயர் மற்றும் நிறுவனம் குறித்த விவரங்களை msmeadmgt@gmail.com. என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எந்தவிதமான கட்டணமும் இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு எம்.எஸ்.எம்.இ. – டி.ஐ, கிண்டி அலுவலகத்தின் துணை இயக்குநர் பி.பாக்கிய ராஜனை தொடர்பு கொள்ளலாம்.