தீர்வுகளை கண்டடைவதே மிகவும் முக்கியம்: ஏ.பி.பெரியசாமியின் அனுபவ பகிர்வு!

0

அமெரிக்காவில் இரண்டாவது வேகமான சூப்பர்கம்ப்யூட்டரை உருவாக்கியவரும் ஜிலஸ்டர் (Gluster) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி,டி,ஓ ஆனந்த் பாபு (ஏ.பி) பெரியசாமி, போஸ்ட்மேன் நிறுவன சி.இ.ஓ மற்றும் இணை நிறுவனர் அபினவ் அஸ்தனாவுடனான உரையாடலில் தொழில்முனைவு, ஜிலஸ்டர் மற்றும் மினியோவை நிறுவியது பற்றி ஆர்வமுடன் பகிர்ந்து கொள்கிறார்.

”நான் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க நினைக்கவில்லை. ஃப்ரீ சாப்ட்வேரில் செயலாற்றக்கூடிய ஏதேனும் ஒரு வேலையை மட்டுமே விரும்பினேன். ஓபன் சோர்சில் சம்பளம் தரக்கூடிய வேலையை தேடுவது கடினமாக இருந்தது. இது முதலில் பகுதிநேர வேலையாக துவங்கியது. எனக்கு பணம் தேவைப்பட்டதால், சூப்பர்கம்ப்யூட்டர் ஆய்வில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். விரைவில் நான் சி.டி.ஓவாகி மற்ற ஓபன் சோர்ஸ் தாக்காளர்களையும் இணைத்துக்கொண்டேன். அப்போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை வந்தது” என்கிறார் பழனிசாமி.

நெக்சஸ் வென்சர்ஸ் பாட்னர்சுடன் இணைந்து யுவர்ஸ்டோரி நடத்திய நீங்களும் செய்யலாம் (யூ கேன் டூ இட் டூ) நிகழ்ச்சியில் பங்கேற்ற உரையாடிய போது இவ்வாறு கூறினார்.

இலவச சாப்ட்வேர் என்பது?

எரிசக்தி துறை இந்த குழுவின் செயல்பாட்டை பார்த்து அணுகியது. ”நான் நிரந்தர குடிமகன் அல்ல. எனவே நாங்கள் உருவாக்கிய சூப்பர்கம்ப்யூட்டரை பார்க்கும் உரிமை எனக்கு இல்லை. நான் புகைப்படத்தில் தான் பார்த்தேன். பாகங்களை செய்து அனுப்பினோம். அவர்களை அதை ஒருங்கிணைத்துக்கொண்டனர்: என்கிறார் ஏ.பி.

இவரைப்பொருத்தவரை சூப்பர்கம்ப்யூட்டர் உருவாக்கம் முதல், 2011 ல் ரெட் ஹாட்டிடம் 136 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஜிலஸ்டர் மற்றும் இப்போது உருவாக்கியுள்ள மினியோ வரை அனைத்துமே இலவச சாப்ட்வேர் மூலம் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக தான் இருக்கிறது.

கோட்பாடுபடி பார்த்தால் இலவச சாப்ட்வேர் மற்றும் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் மாறுபட்டவை. ”இலவச சாப்ட்வேரை வர்த்தகமயமாக்க ஓபன் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டது. என்னைப்பொருத்தவரை இலவச சாப்ட்வேர் மிகவும் முக்கியமானது. சுதந்திரம் என்பது விலை உயர்ந்தது, அதை இழந்துவிட்டால் திரும்ப பெற அதிக விலை கொடுக்க வேண்டும்” என்கிறார் ஏ.பி

கருத்துகள் பகிரப்பட வேண்டும்

ஹேக்கிங் என்பது கம்ப்யூட்டரின் பாதுகாப்பை உடைப்பது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு வாழ்க்கை முறை. கலையை போன்றது என்கிறார் அவர். சாப்ட்வேரும் ஒரு கருத்தைப்போல பகிரப்பட வேண்டும் என்பதும் அவரது கருத்தாக இருக்கிறது.

அறிவை பகிர்ந்து கொள்வது அறம் சார்ந்தது. ரிச்சர்டு ஸ்டால்மேனை அவர் மேற்கோள் காட்டுகிறார். ஒருமுறை ஸ்டால்மேனிடம் இலவச சாப்ட்வேர் சாத்தியம் இல்லை என்று கூறியபோது, ’அறம் சார்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்று கூறுவீர்களா? என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஈடுபாடு காரணமாக தான் இதை செய்கிறீர்கள். மற்றவர்களை பின்பற்றி அல்ல. பல ஸ்டார்ட் அப்கள் பகுதி ஓபன் சோர்ஸ் மற்றும் பகுதி உரிமை அம்சம் உடைய பொருட்களை கொண்டு சேவைகளை உருவாக்குகின்றன என்று கூறும் ஏ.பி இது குழப்பமான பிராண்டை ஏற்படுத்துகிறது என்கிறார். உங்கள் நோக்கத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். வர்த்தகம் என்பது வாடிக்கையாளர் விரும்பும் சேவையை உருவாக்குவது, அவர்களை குழப்புவது அல்ல என்றும் அவர் சொல்கிறார்.

குழுவை உருவாக்குவது

வழக்கமான முறையில் அடுக்குகள் மற்றும் அதிகார நிலைகள் உள்ளன. இன்றைய உலகில் இந்த முறை பொருத்தமானது அல்ல. நிதியின் பெரும்பகுதி அதிகாரி நிலையில் இருக்கும் குழுவை நியமிக்க செலவாகிறது. பணியாற்றுபவர்கள் கீழே உள்ளனர். ”இந்த முறை தொழில்புரட்சி காலத்தில் இருந்து வந்தது. உற்பத்தி துறைக்கானது. ஆனால் சாப்ட்வேர் மாறுபட்டது” என்கிறார் ஏ.பி.

சேவை மற்றும் குழுவினர் தான் முக்கியம். இவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் குழு தான் முக்கியம். குழுவில் உள்ளவர்களின் தகுதி முக்கியமல்ல. ஊக்கமும், செய்து முடிக்கும் உத்வேகமும் கொண்டவர்களை கண்டறிவதே முக்கியம் என்கிறார் அவர். ”என்னைப்பொருத்தவரை இத்தகைய மனிதர்களே சிறந்தவர்கள். நீங்கள் பல தவறுகளை செய்யலாம். ஆனால் சேவை அல்லது குழுவில் தவறு செய்துவிடக்கூடாது. இவை தான் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அம்சங்கள்” என்கிறார் அவர் மேலும்.

ஸ்டார்ட் அப் என்பது மனிதர்களை ஒருங்கிணைப்பது என்கிறார். இப்போது மதிப்பிடல் அதிகரித்து வரும் நிலையில் இது இன்னும் கூட முக்கியமானது.

யூனிகார்ன் யுகம்

”இங்கே நிதி பெற்றுள்ள சில நிறுவனங்கள் இதே எண்ணத்திற்காக அமெரிக்காவில் நிதி திரட்டிவிட முடியாது. இங்கு மதிப்பிடல் அதிகமாக இருக்கிறது.  இந்தியா,அமெரிக்கா இரண்டு இடங்களிலுமே திருத்தம் நிகழ வேண்டும். ஆனால் ஒரு தொழில்முனைவோராக பெரிதாக செய்ய எப்போதுமே வாய்ப்புகள் உள்ளன. நான் துவங்கும் ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார சூழல் சிறப்பாக இருப்பதில்லை. 9/11 அல்லது வீட்டுக்கடன் நெருக்கடிக்கு மத்தியில் தான் நான் துவங்கினேன்” என்கிறார் அவர்.

எல்லோருமே யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் மோசமான சூழலில் தாக்குபிடிக்கும் சேவையை உருவாக்குவதே திருப்தியானது. 

”அமெரிக்காவில் வீட்டுக்கடன் குமிழுக்கு பிறகு தான் முதல் சுற்று நிதி திரட்டினேன்” என்கிறார் ஏ.பி.மாற்றத்தை உண்டாக்கும் சேவையை உருவாக்க விநோதமான மனிதர்கள் தேவை என உணர்ந்து முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர் என்கிறார் மேலும்.

சரியான முதலீட்டாளர்களை பெறுவதும் முக்கியமானது. ஒரு நிறுவனராக நீங்கள் தான் கப்பலின் மாலுமி. முதலீட்டாளர்கள் உங்களுக்கு உதவ முனவந்தாலும் கூட சரியான உத்தி எது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

”உங்கள் தவறுகள பொருத்துக்கொள்ளும் மற்றும் முன்னோக்கி செல்வதற்காக தவறுகளை ஊக்குவிக்கும் முதலீட்டாளர்கள் இருந்தால் நல்லது. குறைந்த மதிப்பிடலில் கூட நீங்கள் ஈடுபாடுள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்” என்கிறார் ஏ.பி பெரியசாமி.

எளிமை தான் வழி

வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்க மிகுந்த திறமைசாலிகள் அதிகம் தேவையில்லை என்கிறார் அவர். அவர்களை தேடிச்செல்வதில்ல ஆனால் அவர்கள் தன்னைத்தேடிவர உதவுவதாக கூறுகிறார். சரியான பணி கலாச்சாரத்தை உருவாக்கினால் அது சரியான நபர்களை ஈர்த்து அருமையான சேவையை உருவாக்கித்தரும் என்கிறார். ”இத்தகைய நபர்களை பணிக்கு அமர்த்துவது மிகவும் கடினமானது. அவர்கள் பணத்திற்காக வருவதில்லை. ஈடுபாடு தான் அவர்களை இயக்குகிறது. எனவே சரியான கலாச்சார்த்தை உருவாக்குவது முக்கியம்” என்கிறார் அவர்.

திட்டத்திற்கும் சேவைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு திட்டம் ஒரு கருத்தை முன்வைக்கிறது. இது போதுமானதல்ல. பொருள் அல்லது சேவையை எல்லோருக்கும் கொடுக்கலாம்.

இதற்கு ஏ.பி ஒரு உதாரணம் தருகிறார். யார் வேண்டுமானாலும் அரட்டைக்கான செயலியை உருவாக்கலாம். ஆனால் வாட்சப்பை அல்ல. வாட்சப் அம்மாக்கள் கூட பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ளது. சிக்கலான சாப்ட்வேர் விஷயங்களை எளிதாக விளக்க முடியாவிட்டால் அது உங்களுக்கே புரியவில்லை என்று பொருள்.

”கோடு (நிரல்) என்பது பெரிய சித்திரத்தின் ஒரு பகுதி தான். தீர்வை கண்டடையும் ஆற்றலே முக்கியமானது. எளிமையான அரட்டை சாப்ட்வேரில பல விஷயங்களை சேர்க்கலாம்.100 விஷயங்களை செய்தால் அது ஸ்விஸ் ராணுவ கத்தியாக இருக்கும். இதை தொழில்முறையினர் யாரும் பயன்படுத்துவதில்லை” என்கிறார் ஏ.பி.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்