கையடக்கத்தில் இளையராஜா பாடல்கள்: மேஸ்ட்ரோ தன் ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள ஆப்!

0

பல நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த அந்த செய்தி நேற்று வெளியிட்டார் இசை மேஸ்ட்ரோ இளையராஜா. ஆம் அவர் தனது அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் வெளியீடு பற்றி தனது முகநூல் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தார். ’Maestro's Music’ என்ற பெயரிலான இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும். 

“நான் எனது பாடல்களை உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் விரல் நுணியில் கிடைக்க வசதி அளிக்கும் ஆப் ஒன்றை வெளியிடுகிறேன். இதில் இனி 24 மணி நேரமும் என் பாடல்களை இலவசமாக கேட்டு மகிழலாம், என்னுடைய இசைப் பயணத்தில் நீங்களும் தொடரலாம்,” 

என்று பதிவிட்டிருந்தார். மேலும் திருட்டு காப்பி இல்லாமல், சிறந்த ஃபார்மேட்டில் இளையராஜாவின் பாடல்களை இந்த ஆப் மூலம் கேட்கமுடியும். 

“இந்த ஆப் மூலம் நீங்கள் என்னிடம் தொடர்பு கொள்ளமுடியும், நான் பாடல்களை தொகுத்த விதத்தை பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். என் நிகழ்ச்சிகளைப் பற்றியும் மேடையின் பின்புறம் நடப்பவற்றை பற்றியும் இனி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்,” என்றும் தெரிவித்திருந்தார் இளையராஜா. 

 ’Maestro's Music’ ஆப் பதிவிறக்கம் செய்ய: ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்