பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஓராண்டு முடிவில் ஓர் அலசல்...

0

பழைய பழக்கவழக்கங்களை எளிதாகவும் முழுமையாகவும் மாற்றிக்கொள்ளமுடியாது. இந்தியர்களிடமிருந்து பணத்தை பிரித்துவிடலாம். ஆனால் பணத்திடமிருந்து இந்தியர்களை பிரிக்கமுடியாது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பின் இரவில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வாறு உடனடியாக அவசரமாக ஒரு தீர்மானமெடுக்கப்பட்ட சூழலானது ’நேற்று’ என்கிற வார்த்தையையும் ‘நாளை’ என்கிற வார்த்தையும் பிரித்துக்காட்டிய ஒரு நிகழ்வானது சமீபத்திய வரலாற்றில் நடந்திராத ஒன்றாகும். 

ஒரு வலுவான நடவடிக்கையாக அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தது. இது நாட்டின் 1.344 பில்லியன் மக்களுக்கு நேற்றையபொழுதைப்போல நாளை இருக்காது என்கிற நிலையை ஏற்படுத்தியதால் இந்தச் சூழல் அவர்களை ஸ்தம்பிக்கச் செய்தது.

ரொக்கம் ஏற்படுத்திய உணர்வு

கடந்த வருடம் இதே நாள் சென்னை மெயிலில் என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். என்னுடைய கட்டுரைக்கான பரிசுத் தொகையை 1000 ரூபாய் தாள்களாக கையில் வைத்திருந்தேன். என்னுடைய சக பயணி ஒருவர் உயர் மதிப்பு நோட்டுக்களை செல்லாது என்று மோடிஜி அறிவித்ததாக தெரிவித்தார்.

திடீரென்று கனமான என்னுடைய பர்ஸ் ஒரு பாரமாக தோன்றியது. சில மணி நேரங்களில் அவை மதிப்பற்ற வெறும் தாள்களாக மாறியது. எனது இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், 

“கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்களுக்கு இது நல்ல பாடத்தை கற்றுக்கொடுக்கும்.” என்றார். நான் சிரித்தவாறே ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ என்றழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையினால் எப்படிப்பட்ட தாக்கம் ஏற்படப்போகிறது என்பது குறித்து புரியாமல் வியந்தேன்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நிலைமை சீராக இல்லை. கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. குறைந்தபட்சம் நம்மைப் போன்ற மக்களின் சூழ்நிலை ஓரளவுக்கு சீராவதற்கு முன்பே சாதாரண மக்கள் அதிக கண்ணீர், வியர்வை மற்றும் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டது.

பணபரிவர்த்தனைகளற்ற சமூகத்தை நோக்கி

ஏடிஎம்களில் பணம் இல்லை. வெளியே நீண்ட வரிசையில் மக்கள். இந்த நடவடிக்கையானது பண பரிவர்த்தனையற்ற சமூகமத்தை நோக்கி மாறுவதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது. வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து நாட்டை அடுத்த நூற்றாண்டிற்கு இட்டுச் செல்லக்கூடிய ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதுதான் அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கமாகும்.

90 சதவீதம் பணத்தை சார்ந்தே இருக்கும் பொருளாதாரத்தில் இது சொல்வதற்கு எளிதாக இருப்பினும் நடைமுறைப்படுத்துவது கடினம். ஆனால் 86 சதவீத பணம் முடக்கப்பட்டதால் மக்கள் ஆன்லைனில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதுதான் இதன் அடுத்த கட்ட நகர்வானது.

தி ஸ்லோ பேஸ் ஆஃப் ஃபாஸ்ட் சேன்ஜ் ஆசிரியர் மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் தி ஃப்ளெச்சர் பள்ளியின் சர்வதேச வணிகம் மற்றும் நிதியின் மூத்த துணை டீன் மற்றும் Fletcher’s Institute for Business in the Global Context-ன் ஃபவுண்டிங் நிர்வாக இயக்குனரான பாஸ்கர் சக்கரவர்த்தி HBR-ல் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், 

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதைத் தாண்டி அது ஏற்படுத்த இருக்கும் தாக்கத்தை எவ்வாறு மதிப்பிடுவது? மக்களை ரொக்கமற்ற பரிவர்த்தனைகளுக்கு மாற வலியுறுத்துவது ஒரு குதிரைக்கு முன்பு வண்டியை கட்டுவதற்கு சமமானது என்பேன். இந்த விஷயத்தைப் பொருத்தவரை குதிரை என்பது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் இந்த முறையில் நம்பிக்கையை நிறுவுதலாகும். அதாவது டிஜிட்டல் இகோசிஸ்டத்தை முதலில் வலுப்படுத்தவேண்டும். ரொக்கமற்ற நிலைக்கு மாறுவதற்கான நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் இந்தியாவின் டிஜிட்டல் நிலை இல்லை.” என்கிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டிற்குப் பிறகு நமது டிஜிட்டல் உள்கட்டமைப்பை நாம் எந்த அளவிற்கு நம்பலாம் என்பதையும் ரொக்கத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் எந்த அளவிற்கு வெற்றிபெற்றுள்ளது என்பதையும் ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ரொக்கமே இன்னும் அதிக பயன்பாட்டில் உள்ளது என்பதை அதிக சிரமமின்றியே நிரூபிக்கலாம்.

அனைத்தும் உள்கட்டமைப்பைச் சார்ந்ததே

ஒவ்வொரு வருடமும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அறிக்கையின் ஒரு பகுதியாக உலக பொருளாதார மன்றம் நெட்வொர்க்ட் ரெடினெஸ் இண்டெக்ஸ் (NRI) அல்லது டெக்னாலஜி ரெடினெஸ் வெளியிடுகிறது. இந்த வருடம் 139 நாடுகளில் இது இந்தியாவிற்கு 91-வது இடத்தை அளித்துள்ளது. ஒரு நாட்டில் தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அது எவ்வாறு அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் இந்த குறியீடானது அளவிடும். சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ஃபின்லாண்ட் மற்றும் ஸ்வீடன் உள்ளது.

தற்செயலாக பல ஆண்டுகளாக இந்தியா தனது இடத்திலிருந்து முன்னேறாமல் இறக்கத்தையே சந்தித்துள்ளது. 2015-ம் ஆண்டு 89-வது இடத்திலும், 2014-ம் ஆண்டு 83-வது இடத்துலும் 2013-ம் ஆண்டு 68-வது இடத்தையும் வகித்தது.

இது உணர்த்துவது என்னவென்றால் என்னைப் போன்ற நன்கு படித்த நகர மக்கள் ஷாப்பிங் மாலில் ஒவ்வொரு முறை பணம் செலுத்துபவரிடம் டெபிட் கார்டையோ கிரெடிட் கார்டையோ நீட்டுவதற்காக வரிசையில் நிற்கும்போது பிரார்த்தனை செய்கிறோம்; POS மெஷின் ஏதாவது பிரச்சனை காரணமாக இயங்காவிட்டால்? நெட்வொர்க் இல்லாமல் மிஷினால் உங்களது வங்கியின் சர்வருடன் இணைக்க முடியாமல் போனால்? இந்த கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

தற்செயலாக இந்த வருடம் ஜூலை மாதம் வரை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தரவுகளின்படி பல்வேறு வங்கிகளால் வழங்கப்பட்ட டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 69 கோடியாகவும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2 கோடியாகவும் உள்ளது. உள்கட்டமைப்பு நம்புகத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மாறுவதன் பலன் நிச்சயம் உண்டு.

கூகுள் இந்தியா மற்றும் போஸ்டன் கன்சல்டிங் க்ரூப் கணிப்பின்படி, 2020-ம் ஆண்டில் “டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போதைய அளவைக்காட்டிலும் 10 மடங்காக மாறும்,” எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரொக்கத்தை சார்ந்த நமது பழக்கங்களை மாற்றி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மாற கட்டாயப்படுத்தும்.

ரொக்கம்தான் விரைவானதா?

கடந்த வாரம் நமது துணிச்சலான நிருபர்கள் இருவர் ஒரு ஆட்டோரிக்ஷாவில் ஏறி இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் ரொக்கம் தான் அதிக பயன்பாட்டில் உள்ளதா என்பதைக் கண்டறிய பெங்களூருவின் புறநகர் மார்க்கெட் பகுதிக்குச் சென்றனர். Ernst & Young அறிக்கையின்படி இந்தியாவில் 6,00,000 விநியோகஸ்தர்களும் 12 மில்லியன் mom-and-pop ரீடெய்லர்ஸ்களும் உள்ளனர்.

இந்த நிருபர்கள் ஓலா மணி மற்றும் ஊபர் பே ஆகியவற்றை நீண்ட நாட்களாக பயன்படுத்தி தங்களது ஸ்மார்ட்ஃபோன் வாயிலாகவே ஆட்டோரிக்ஷா கட்டணத்தை செலுத்தி வருபவர்கள். ஆனால் டிரைவர் ’பணம்தான் விரைவாக இருக்கும்,’ என்றார். இறுதியாக 60 ரூபாயை செலுத்த தங்களது 2000 ரூபாய் நோட்டை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஏடிஎம்கள் வாயிலாக 2,171 பில்லியன் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவிக்கிறது. UPI பரிவர்த்தனைகள் 22.41 பில்லியன் ரூபாயாக உள்ளது. அதாவது ரொக்கத்திற்கு மாற்றாக UPI ஒரு சதவீதம் பங்களித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் மிகக்குறைவாக 850 மில்லியன் ரூபாயாக இருந்த பணம் எடுக்கும்தொகை இந்த வருடம் மார்ச் மாதம் 2,262 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. பணமதிப்பிழப்பிற்கு முன்பு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2,223 பில்லியன் ரூபாயாகவும் செப்டம்பர் மாதம் 2,551 பில்லியன் ரூபாயாகவும் இருந்தது. பொருளாதாரம் திரும்பவும் ரொக்கத்திற்கு மாறியுள்ளதையே இது உணர்த்துகிறது.

ஆம்! ஏடிஎம்களில் எப்போதும் பணம் நிறைந்துள்ளது. நீங்களும் இந்த நிருபர்களைப் போல சாலைவழியாக பயணம் மேற்கொண்டு பெரும்பாலான செலவுகளுக்கு ரொக்கத்தை செலுத்த நேர்ந்தால் ஏடிஎம்கள் அவ்வாறு நிறைந்திருக்காது.

இவரது அறிக்கையின்படி, “2017-ம் ஆண்டு மே மாதம் வரை BHIM 14.54 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றுள்ளதாக NPCI தரவுகள் தெரிவிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களில் செய்யப்படும் 300 மில்லியன் பதிவிறக்கங்களுடன் இந்த பதிவிறக்கங்கள் பொருந்தவில்லை. ஹோட்டலில் தங்குவது, ரெஸ்டாரண்ட் உணவு கட்டணங்கள், இதர செலவுகள் என மிஷன் என்னுடைய கார்டை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது அங்கு பணிபுரிவோர் டிஜிட்டல் கட்டணங்கள் குறித்து அதிக அக்கறை காட்டவில்லை.”

ரொக்கமற்ற பரிவர்த்தனை, புதிய பழக்கம்

என்னுடைய அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு பழைய பழக்கம் உண்டு. அதாவது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் அனைவரும் ஒரு சிறிய தொகையை வீட்டின் ஒரு மூலையில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். குடும்பத்தில் ஒரு அவசர தேவை எழும்போது அதைத் தேடி எடுப்பார்கள்.

இந்த வழக்கத்தை பின்பற்றுவதில் ஒரு மிகப்பெரிய தடையாக உருவானதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. பல ஆண்டுகளாக சேமித்த தொகையை நினைத்து ஆச்சரியப்படுவதா அல்லது ஏமாற்றப்பட்டதை நினைத்து எரிச்சலடைவதா என்று புரியாமல் பலர் குழம்பினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது இவர்கள் தங்களது சேமிப்பை ஒரு முறையான வழியில் மேற்கொள்ள ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நன்மை தீமைகள் குறித்து விவாதிப்பது ஒருபுறம் இருக்க ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிறது. ரொக்கமற்ற முறைக்கு மாறுவதற்கு தடையாக இருக்கும் பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். ஒருவேளை உங்களது வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுபோனால் குறைந்தபட்ச நிம்மதியாவது உங்களுக்கு கிடைக்குமல்லவா?

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்