’உலகின் முதல் நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்’- பெங்களுரு இளைஞர் கண்டுபிடிப்பு!

0

காமெட் கோர் இன்க், பாலோ ஆல்டோ தொடர்பான நிறுவனம், உலகின் முதல் தண்ணீரில் மிதக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ’காமெட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டில் இயங்கும். 

பெங்களுருவை சேர்ந்த ப்ராசாந்த் ராஜ் அர்ஸ் வடிவமைத்துள்ள இந்த காமெட் ஸ்டாமார்ட்போன், 4.7 இன்ச் திரை மற்றும் 16 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 ஜிபி ராம், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810, 2 GHZ ஆக்டா கோர் ப்ராசசர் மற்றும் 2800 mAh பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த போனில், 'mood recogniser' அதாவது ஒருவரின் மனநிலையை அடையாளம் காண, பயோமெட்ரிக் சென்சர் பொறுத்தப்பட்டு பயணரின் உடல் சீதோஷ்ண நிலையை கண்டுபிடித்து, அதற்கேற்ப வண்ணங்களை வெளிப்படுத்தும். 

Indigogo, எனும் கூட்டுநிதி தளத்தின் தகவலின் படி, 82 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் நனைந்து ஒரு வருடத்தில் பழுதடைகிறது என்று கூறுகிறது. பல போன் நிறுவனங்கள், தண்ணீரிலும் பாதுகாப்பான போன்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும், காமெட் போன்கள், தண்ணீரில் மூழ்காமல், மிதக்கும் தன்மை கொண்டது. 

ப்ராசாந்த், Indiegogo தளம் மூலம் கூட்டுநிதி திரட்டி, சுமார் 2.5 லட்சம் டாலர்கள் நிதியை பெற்றார். இந்த வகை போன்கள் அறிமுக விலையாக, 32 ஜிபி 249 டாலர்களுக்கு, 64 ஜிபி 289 டாலர்களுக்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுரை: Think Change India