தென்னகத்தின் மாபெரும் தொழில்முனைவு விழா ‘Enantra-17’ அண்ணா பல்கலையில் 19-ம் தேதி தொடங்குகிறது!

0

Enantra’, அண்ணா பல்கலைகழகம் நடத்தவுள்ள மாபெரும் தொழில்முனைவோர் விழா வரும் 19-ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. Enantra விழாவில் ஆறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். Runway, Start-Up exhibitions, Google Start-Up Weekend, Entrepreneur networking dinner, Start-Up awards and extra bonuses ஆகியவை ஆகும். அண்ணா பல்கலையில் உள்ள Centre for entrepreneurship Development மையத்துடன் இணைந்து மாணவர்கள் நடத்தும் இவ்விழாவில் தென்னகத்தை சேர்ந்த வெற்றி தொழில்முனைவோர்கள் பலர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர். 

600க்கும் மேற்பட்ட கல்லூரிகள், சுமார் 800 கார்ப்பரேட் பங்குபெறும் இந்த விழாவில் மாணவர்கள் தொழில்முனைவை நோக்கி அடியெடுக்க உதவும் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடைப்பெறும். சந்தையில் வெற்றிக்கண்ட இளம் தொழில்முனைவோர்களும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். யுவர்ஸ்டோரி இவ்விழாவில் ஆன்லைன் மீடியா பார்ட்னராக உள்ளது. 

தமிழ்நாடு அரசின் துணையோடு, TiE, CII, BYST மற்றும் NEN ஆகியோரும் இவ்விழாவிற்கு தங்களின் பங்கை அளித்து உறுதுணைப் புரிய உள்ளனர். ஸ்டார்ட்-அப்’கள், நிறுவனர்கள், வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் என்று நாடெங்கில் இருந்தும் இவ்விழாவில் கலந்து கொள்ள வருகைத்தர உள்ளனர். 

சிறப்பு விருந்திரனர்களாக, கவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதான், தைரோகேர் வேலுமணி, காக்னிசண்ட் லஷ்மி நாராயணன், ஏவம் ஸ்டாண்ட் அப் கார்த்திக் குமார், வூனிக் சுஜயத் அலி, மில்லினர் பார்பர் ரமேஷ் பாபு, நேச்சுரல்ஸ் சிகே.குமாரவேல், அல்மாமீட்டல் ஸ்டோர் வருண் அகர்வால் என்று பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்பாளர்களுடன் உரையாட உள்ளனர். 

முற்றிலும் மாணவர்களால் நடத்தப்படும் Enantra விழா, தொழில்முனைவை தேர்ந்தெடுக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு தளமாக செயல்பட்டு வழிகாட்டும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தொழிலில் நுழைவதற்கான நுழைவுச்சீட்டாக இதை கருதி இதில் கலந்துகொள்ள www.enantra.org என்ற தளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.