தனது வாழ்வில் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வர, ரவிச்சந்திரன் செய்த பெரும் நம்பிக்கை முயற்சி...

0

பிராண்ட் ஸ்பாட்லைட்: கோட்டக் லைஃப்

’டபூலா ரசா’ – அல்லது பரிசுத்தமான நிலை. நாம் நினைத்தது நடக்காமல் போகும்போது அதை சரி செய்ய இது தான் நமக்கு தேவை. காவலாளியாக இருந்து பின்னர் கோட்டக் லைஃப் இல் வெற்றிகரமான லைஃப் ஆலோசகராக உயர்ந்த என்.ரவிசந்திரனை இது பற்றி கேளுங்கள்.... சொல்வார்.

தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமான மணப்பாறையை சேர்ந்த ரவிச்சந்திரன் 12-வது வரை படித்துள்ளார். அவர் வசித்த பகுதிகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் கிடையாது. சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டிய நிலை வேறு. பல இடங்களில் வேலைக்காக அலைந்து எதுவும் கிடைக்காததால் தனது கிராமத்தை விட்டு திருச்சிக்கு சென்று வேலை தேடினார். வேறு வழியின்றி ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பாதுகாவலராக 12-மணி நேர ஷிஃப்டில் வேலைக்கு சேர்ந்தார். பத்து வருடங்கள் வேலை செய்து செக்யூரிட்டி ஆபீசராக பணி உயர்வு பெற்றார். அந்த காலகட்டங்களில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் அவர் சந்திப்பார்.

10 வருடங்கள் கடந்த பின்னரும் தனது பொருளாதர நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லாததை அவர் உணர்ந்தார். 

“நான் சம்பாதித்த பணம் எங்களை ஒரளவு வசதியாக வைத்திருந்தாலும், எனது குடும்பத்துக்கு நான் கனவு கண்டதை போன்ற சிறந்த வாழக்கையை என்னால் உருவாக்கித் தர முடியவில்லை,” என்கிறார் ரவிச்சந்திரன். 

அதே நேரத்தில் பொது நலனுக்காகவும் தன்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பியுள்ளார் அவர்.

அதனால் வேறு வேலை கிடைக்காத போது அவர் தனது வேலையை விட்டு மணப்பாறைக்கு திரும்பிவிட்டார். அது மிக ரிஸ்க்கான விஷயம் என்றாலும் மேலும் வாழக்கையில் முன்னேற அந்த முடிவு அவசியம் என்று அவருக்கு தோன்றியது. உடனடியாக அவர் நினைத்தது நடக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டுமே அவருக்கு அனுபவம் இருந்ததால் ஆறு மாதங்கள் வேலையின்றி இருந்தார். செல்லும் இடம் எங்கும் ஏமாற்றம் இருந்தாலும் அவர் தொடர்ந்து செக்யூரிட்டி ஏஜென்சிகள் உட்பட ஏறி இறங்கி வேலை தேடினார். 

இறுதியாக அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது, அவர் அப்ளை செய்திருந்த ஒரு இடத்திலிருந்து சாதகமான பதில் வந்தது. அவருக்கு கோட்டக் லைஃப் இன் சென்னை கிளையின் டாக்குமெண்ட் எக்சிக்யூட்டிவாக வேலை கிடைத்தது. புது வேலை தனக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் மிக மகிழ்ச்சியடைந்தார்.

பத்து வருட வேலை அனுபவம் இருந்தாலும் சூப்பர்வைசராக மட்டுமே அவருக்கு பணி உயர்வு கிடைத்தது. ஆனால் இந்த புது வேலையில் ஜூனியர் பணியாளராக தான் சேர்ந்தார். ஆனால் டாக்குமெண்டிங் முதல் டெலி-காலிங் வரை, வருங்கால பணியாளர்களுக்கும் ஏஜெண்டுகளுக்கும் பிரசென்டேஷன்ஸ் செட் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் செய்து அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றார். அவரது சுறுசுறுப்பும் திறமையும் சூப்பர்வைசரின் கண்களில் பட்டது. சூப்பர்வைசர் இவரிடம் நீங்கள் ஏன் லைஃப் அலோசகராக முயற்சி செய்யக் கூடாது என்று ஆலோசனையளித்தார்.

முதலில் அவர் தயங்கினார். லைஃப் இன்சூரன்ஸ் விற்பனையில் தனக்கு அனுபவம் இல்லை என்று கூறினார். ஆனால் சவால்களை எப்போது நேரடியாக சந்திக்கும் ஆர்வம் கொண்ட அவர் அந்த வாய்ப்பினை மறுக்கவில்லை. ரவிச்சந்திரனின் அந்த துணிவு அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவரது குடும்பத்தின் வாழ்க்கை தரத்தினையும் அது உயர்த்தியது. அவர்கள் பெரிய வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவரது பிள்ளைகள் இப்போது நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர்.

இன்று, ரவிச்சந்திரன், உடன் பணிபுரிபவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு நபராவார். அவர் தொடர்ந்து அதே உத்வேகத்துடன் செயல்படுவதுடன் மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார்.

அகன்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், மற்றவர்களுக்காக ஏதாவது நன்மை செய்யும் தனது குறிக்கோளுடன் தான் நெருக்கமானதாக அவர் உணர்கிறார். 

“ஒரு அற்புதமான முறையில் மக்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுக்காக்க உதவுவதுடன் அவர்கள் தங்களது பொருளாதார குறிக்கோள்களையும் அடைய உதவுவதில் எனக்கு மிக திருப்தி,” என்று உறுதியுடன் கூறுகிறார்.

இவ்வளவு சாதித்திருந்தாலும், தான் இன்னும் சிறப்பாக செயல்பட தன்னை ஊக்குவித்த ஒரு சம்பவம் பற்றி கூறுகிறார். 

“2017 இல், வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. நான் முதன் முதலாக விமானத்தில் செல்ல இருந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பு, என்னுடைய பொருளாதார பின்னணியை காரணம் காட்டி எனது விசா நிராகரிக்கப்பட்டது. அதில் என்னை ஊக்குவித்த விஷயம் என்னவென்றால் எனது பழைய நிலையை பாராமல் எனது தற்போதைய நிலையை வைத்து நான் மதிப்பிடப்படுவது தான்,” என்று கூறுகிறார்.

மற்றும், வேலையில் அவரது தொடர்ச்சியான கவனம் மற்றும் தன்னை சுற்றி உள்ளவர்களின் வாழ்வில் நேர்மறையான மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அவரது உந்துதல் ஆகியவை ரவிச்சந்திரனை அவரது அந்த மைல்கற்களை விரைவில் அடைய உதவும். 

கட்டுரை: டீம் கோட்டக் லைஃப்