மன்னிக்கவும், நான் ஒரு தொழில்முனைவோன்...

1

மன்னிக்கவும் நான் ஒரு தொழில்முனைவோன்...!

ஆம் நான் ஒரு தொழில்முனைவோன். பல சமையங்களில் தூரத்து சொந்தங்களின் திருமணங்களை, மேலும் சில சமையங்களில் நெருங்கிய சொந்தங்களின் விசேஷங்களை நான் தவறவிட்டுளேன்.

ஆம், நான் ஒரு தொழில்முனைவோன். கல்லூரி நண்பர்களின் பிறந்தநாள் விழாக்கள் என்னை பார்த்ததில்லை.

ஆம், நான் ஒரு தொழில்முனைவோன். திரைபடங்கள் பார்க்க, குடும்பத்தோடு சுற்றுலா செல்ல தீட்டப்பட்ட திட்டங்கள் பலவற்றை மறைந்துள்ளேன்.

ஆம், நான் ஒரு தொழில்முனைவோன். என்னை காதலித்த பெண்ணிற்கு நேரம் ஒதுக்குதல் என்பது இயலாத காரியமாக உள்ளது.

ஆம், நான் ஒரு தொழில்முனைவோன். பல ஆண்டுகளாக நான் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளுக்கு நான் அணிவது ஒரே மேலாடையாக இருந்துள்ளது.

ஆம், நான் ஒரு தொழில்முனைவோன். புதிதாக வந்துள்ள தொலைபேசிகள் அவற்றின் சிறப்பான பண்புகள் நான் தெரிந்துவைப்பதில்லை.

இன்று, நான் செய்த ஒவ்வொரு தவறுக்கும் நான் மன்னிப்பு கோருகின்றேன். ஆனால் அதற்கு முன்பு சில கேள்விகள் என்னிடம் உள்ளன.

தொழில்முனைவோனாக, எவருடைய இறுதிச்சடங்கை நான் தவறவிட்டுள்ளேனா?? அது நெருங்கிய அல்லது தூரத்து சொந்தமோ...

ஒரு தொழில்முனைவோனாக, எனது நண்பன் அவனது சிறுவயது காதலியை விட்டு பிரிகையில் நான் அவனோடு இருக்கவில்லையா?

ஒரு தொழில்முனைவோனாக, உனது கனவுகளை பற்றி தெரிந்து கொள்ளவும், அவற்றை துரத்தி வெற்றி கொள்ள வேண்டிய பயணத்தில் நீ எதிர்கொள்ளப் போகும் தடைகளை பற்றியும் பேசாது இருந்துள்ளேனா?

ஒரு தொழில்முனைவோனாக, உனது தொலைபேசி அழைப்புகளை நிராகரித்துள்ளேனா?? அல்லது குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பாமல் இருந்துள்ளேனா?

உங்களில் பலரோடு, சட்டைப்பையில் 2 ரூபாயோடு நான் இருந்த தருணங்களை நான் பகிர்ந்துகொண்டதில்லை. தனிமையில் என் துயரங்களை எவரிடமாவது கூறி அழ வேண்டும் என்ற நிலையிலும் நான் அந்நிலையை பகிர்ந்ததில்லை. மேலும் நீ பிறந்தநாள் விழாவில் கைகுலுக்கிய போது, உனை கட்டி அணைக்கும் எண்ணம் என் மனதுள் ஓடியதை யாரிடம் நான் பகிர இயலும்?

ஆம், தொழிலுக்கு வாக்குபட்டவன் என்றும், உணர்வுகள் அற்றவன் என்றும் என்னை கூறினாலும், இவ்வழி ஒன்றே என் தொழில்முனைவை மிகப்பெரிய நிறுவனமாக வளர்க்கும் நானறிந்த வழி. இதன் மூலம், பின்னாளில் எதை நான் இழந்தேனோ அவற்றின் பகுதியாக என்னால் இருக்க இயலும்...

கட்டுரையாளர்: க்ஷிடிஜி மெஹ்ரா (இவர் ஒரு தொழில்முனைவர். யுவஷாலா கல்வி நிறுவனத்தின் நிறுவனர்) | தமிழில் : கெளதம் s/o தவமணி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உங்கள் வர்த்தகம் வளர கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

தொழில்முனைவோருக்கு கீதை சொல்லும் 5 பாடங்கள்!