நெரிசல் இன்றி அலுவலகம் செல்ல போக்குவரத்து வசதியை அளிக்கும் ஐதராபாத் இளைஞர்களின் 'commut'

0

தொழில்முனைவு பயணம் மற்றும் நல்ல வேலையை விட்டுவிட்டு கனவுகளை பின் தொடரும் வேட்கை ஆகிய ஊக்கம் தரும் கதைகள் வரிசையில், இந்த 23 வயது இளைஞர்கள் கதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எனும் கேள்வியே இவர்களை இயக்கும் உந்துசக்தியாக அமைந்தது.

இணை நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் கரபதி இந்த கேள்வியை முன்வைத்து தான் நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தார். அப்போது இன்னொரு இணை நிறுவனரான ஹேமந்த் ஜோனலகடா தங்கள் வாழ்க்கையின் பிரச்சனை ஒன்றுக்கு தீர்வு தரும் நிறுவனத்தை துவக்கலாம் என்று கூறினார். தில்குஷன் நகரில் இருந்து ஐதராபத்தின் ஹைடெக் சிட்டிக்கு சென்று வர பஸ்சிற்காக காத்திருக்கும் சிக்கலை அவர் எதிர்கொண்டு வந்தார். டாக்சி சேவைகள் செலவு மிக்கதாக இருந்தது.

கம்யூட் நிறுவனர்கள்
கம்யூட் நிறுவனர்கள்

இணை நிறுவனர்கள் மற்றும் ஐதராபாத் ஐஐடி சகாக்கள் சந்தீப் கச்சவரப்பு, சரன் தோட்டா மற்றும் ஸ்ருஜாய் வரிகுட்டி ஆகியோரும் இதே பிரச்சனையை எதிர்கொண்டு வந்தனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து தினசரி அலுவலகம் சென்று வருவதற்கான மொபைல் மூலமான மினிபஸ் சேவையை வழங்கும் 'கம்யூட்' (Commut) நிறுவனத்தை 2015 செப்டம்பரில் துவங்கினர்.

கார் இல்லா தினத்திற்காக விழிப்புணர்வு
கார் இல்லா தினத்திற்காக விழிப்புணர்வு

நல்ல துவக்கம்

இது அவர்களுடைய முதல் நிறுவனம் என்ற போதிலும் துவங்கிய 75 நாட்களுக்குள் 3,000 க்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்து கொண்டனர். இது 4,000 ஆக உயர்ந்துள்ளது.

முதல் கட்டமான 15 பஸ்களுடன் ஐதராபாத்தின் 12 பகுதிகளில் தங்கள் சேவையை இயக்கி வருகின்றனர். தங்களிடம் உள்ள பஸ்களில் 8 முதல் 9 பஸ்கள் 100 சதவீத இருக்கைகள் நிரம்பிவிடுவதாகவும், 73 சதவீதம் பேர் மிண்டும் வருவதாகவும் பிரசாந்த கூறுகிறார். நாள்தோறும் 250 கோரிக்கைகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலானோர் ஐடி துறையை சேர்ந்தவர்கள், அதிலும் பிரதானமாக பெண்களாக இருக்கின்றனர்.

பெண்கள் அதிக அளவில் இந்த சேவையை பயன்படுத்துவது வியப்பை அளிப்பதாகவும், விரைவில் பஸ்களை உடனுக்குடன் டிராக் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் பிராசந்த் கூறுகிறார். அவசர காலங்களில் நெருக்கமானவர்கள் மற்றும் காவல் துறையின் உதவியை தொடர்பு கொள்ளும் வசதியையும் செயலிக்குள் அளிக்க இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதுவரை 3,500 முறை இவர்களது செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஐபோனுக்கான வடிவம் மற்றும் இணையம் மூலம் புக் செய்யும் வசதியையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த சேவை இருப்பிடத்தில் இருந்து பிக்கப் செய்து கொள்வதோடு, கி.மீக்கு ரூ 3 எனும் கட்டணத்தில் ஏசி இருக்கையையும் உறுதி அளிக்கிறது. ஆன்லைன் மூலமே பணத்தை செலுத்திவிடலாம்.

இந்த சேவையில் இன்னொரு புதுமையாக போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப குறைந்த பட்ச தொலைவிலான பாதை தேர்வு செய்யப்படுகிறது. போட்டி நிறுவனமான ஜிப்கோ தங்கள் சொந்த வரைபட சேவையை உருவாக்கி வருகிறது. இதற்கு போக்குவரத்து நெரிசல் தகவல்களை விட கூடுதலான விவரங்கள் தேவை. எனவே பஸ் சேவையை பொருத்தவரை அடிக்கடி இயக்கப்படுவது மிகவும் முக்கியம்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

பஸ் பயண டிக்கெட் புக்கிங்கை எளிதாக்கும் 'டிக்கெட்கூஸ்.காம்'

________________________________________________________________________

டிரைவர்களுடன் கம்யூட் குழு
டிரைவர்களுடன் கம்யூட் குழு

எதிர்கால திட்டம்

பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை வாடிக்கையாளராக பெறுவதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது டியோலைட் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இதனிடம் இருந்து தான் மாத வர்த்தகத்தில் 40 சதவீதம் சாத்தியமாகிறது. இவற்றை கூட்டு என சொல்ல முடியாது. வாடிக்கையாளர் பரப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாக இவை அமைகின்றன.

அடுத்த மூன்று மாதங்களில் ஐதராபாத்தில் 24 பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிராசாந்த் கூறுகிறார்.

வாரத்திற்கு 10 புதிய பஸ்கள் எனும் விகிதத்தில் 150 பஸ்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆண்டு இறுதிக்குள் மற்ற நகரங்களில் விரிவாக்கம் செய்யும் திட்டமும் உள்ளது.

இவைத்தவிர ஒரே மார்கத்தில் செல்லும் எல்லா பெண்களும் ஒரே பஸ்சில் செல்ல வழி செய்யும் வசதியையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். போட்டி நிறுவனமான ஜிப்கோ ஏற்கனவே பெண்களுக்கான பிரத்யேக சேவையை இயக்கி வருகிறது.

இந்தத் துறையில் உள்ள ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து இரண்டாம் கட்ட நிதி பெறவும் திட்டமிட்டுள்ளனர்.

யுவர் ஸ்டோரி பார்வை

அலுவலங்களுக்கு சென்று வருவதற்கான பஸ் சேவை புதிதல்ல. ஜிப்கோ, ஷட்டல், ஓலா ஷட்டில் என இதில் போட்டியும் அதிகமாக உள்ளது. இந்த துறை பல குழப்பங்களையும் சந்தித்து வருகிறது.

ஒரு பக்கம் பஸ் சேவை நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கத்தில் குர்கோவ்னில் அதிகாரிகள் விதிமீறல் என்று கூறி ஷட்டல் மற்றும் ஓலா பஸ்களை பறிமுதல் செய்துள்ளனர். ஜிப்கோ அலுவலகமும் பெங்களூரு ஆர்.டி.ஓ அதிகாரிகளால் அதிரடி சோதனைக்கு உள்ளாகியது. பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்தது.

ஆனால், அரசுடன் போட்டியில் ஈடுபடாமல் உள்கட்டமைப்பு வசதியை அளிப்பதில் துணை நிற்பதாக இணை நிறுவனர்கள் கூறுகின்றனர். நிறுவனம் மாநில போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து இது குறித்து பேசி வருகிறது.

தெலுங்கானா மாநில ஐடி செயலளர் ஜெயேஷ் ராஞ்சனுடன் கம்யூட் குழு
தெலுங்கானா மாநில ஐடி செயலளர் ஜெயேஷ் ராஞ்சனுடன் கம்யூட் குழு

எனினும் அரசு அனுமதி அளித்தால் இந்தப் பிரிவில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிக உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதியை குறைத்து வரும் நிலையில் இது போன்ற நிறுவனங்களுக்கான தேவை அதிகரிக்கும். கம்யூட் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் இந்த சேவையின் தேவையை உணர்த்துகிறது. நுகர்வோரைப் பொருத்தவரை பொது போக்குவரத்தை விட இது வசதியான தேர்வாகும். ஆனால் இந்தத் துறையின் எதிர்காலம் அரசு அனுமதியை சார்ந்திருப்பதை மறுக்க முடியாது.

இணையதள முகவரி: Commut

ஆக்கம்: தருஷ் பல்லா | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற போக்குவரத்துத் துறை தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:

சட்டை கசங்காமல் ஆபிஸ் போக உதவும் சிட்டிஃப்ளோ!

பெரிய நகரங்களின் போக்குவரத்து சிக்கலுக்கு பைக்-டாக்சி சேவை தீர்வாகுமா?